Tuesday, June 30, 2009

நறுக்கென்று நாலு வார்த்தை - உண்மையில் கதை!

அவளுக்காகத்தான் காத்திருந்தான்.

"அவள் வரட்டும், நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுவிடுகிறேன். பிடிக்கவில்லையென்றால் சொல்லித் தொலைவதுதானே!'' என்றுதான் தீவிரமாக அவன் சிந்தித்திருக்க வேண்டும். அவன் முகத்தில் அத்தனை விரக்தி வெளிப்பட்டுக் கிடந்தது. கடந்த இரண்டு மாதங்களில் என்னவெல்லாம் நடந்துவிட்டது...

கல்லூரியில் படித்த நாட்களிலும் சரி, இப்போது சிங்கார சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்யும்போதும் சரி, அவன் செய்யும் சேட்டைகளுக்கும் சொல்லும் நகைச்சுவைகளுக்கும் அளவே கிடையாது. அவனது 'அதிவேக' நகைச்சுவை ததும்பும் மறுமொழிகளுக்கென்றே அவனைச் சுற்றி ஒரு நண்பர் வட்டம் உண்டு. எல்லா விசயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவமும், கேலி, கிண்டல் என்று இருந்தாலும், பொறுப்பாகவும் இருப்பவன். இரண்டு மாதம் முன்புவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, அவள்மீது இவன் காதல் கொள்ளும்வரை.

'புவனா' - வருடத்தொடக்கத்தில் அவனது பணிக்குழுவில், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியபோது வந்து சேர்ந்தாள். நன்றாக புரியும்படி பேசுவாள். 'எளிதில் எந்த கஷடமான லாஜிக்கையும் விளக்கிவிடுவாள்' என்பதற்காக இவனது வயதையொத்த மற்ற ஆண்கள் அவளிடம் மட்டுமே விளக்கம் கேட்கத் தொடங்கினார்கள் - வேற எதுக்கு அவளை டாவ் அடிக்கத்தான்!. இவனும் தன் திறமையெல்லாம் பயன்படுத்தி 'சாதாரணமாகப் பேசுவது போல' மெனக்கெட்டு அவளிடம் பேசினான், அவளைச் சிரிக்க வைக்க முயற்சி செய்தான்.

புவனா, பொதுவாக எல்லோரிடமும் எந்த அலட்டலும் இல்லாமல் பழகுவதைப் போலவே இவனிடமும் நடந்துகொண்டாள். இவனோ, அவளை நினைத்து குச்சி ஐஸாய் உருகிவந்தான். முதல் மூன்று மாதங்கள் வரை எல்லாம் சரியாய்த்தான் போய்க்கொண்டிருந்தன. ஆனால், அதற்குப் பிறகு புவனாவின் போக்கில் சில மாற்றங்கள் தென்பட்டன. ஒழுங்காக வேலையை முடிப்பது கிடையாது, சதாரணமாக அவள் பழகும் முறைகளில் 6 இல்லை அதற்கு மேலாகவே வித்தியாசங்கள் தென்பட்டன. தனியாக இவன் 'கேன்டீனிலோ' 'லிஃப்டிலோ' நின்றிருந்தால் பேசுவதைத் தவிர்த்தாள், மற்ற எல்லோரும் இவனது நகைச்சுவைக்கு சிரிக்கும்போது அவள் மட்டும் 'உம்' மென்று இருந்தாள்.

ஒரு கட்டத்தில் உடன் வேலை செய்பவர்கள், ''இவனால்தான் புவனா இப்படி மாறிவிட்டாள், இவன் அடிக்கடி சென்று பேசி அவளைத்தொந்தரவு செய்திருக்கிறான்'' என்றெல்லாம் பேச ஆரம்பித்த போது, இவனுக்கு என்னவோ பண்ணியது. சீக்கிரத்திலேயே, புவனா அந்த பணிக்குழுவில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அதே நிறுவனத்தின் வேறொரு பணிக்குழுவில் மற்றொரு அலுவலகத்தில் சேர்ந்துகொண்டபோது, அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'தான் செய்தது பிடிக்காமல்தான் அவள் சென்றுவிட்டாளோ?' என்ற குற்ற உணர்ச்சி அவனை வாட்டி வதைத்தது. அவனால் எப்போதும்போல் இருக்க முடியவில்லை. இயல்பாக இருப்பதற்கு முயற்சி செய்தாலும் அவன் முகம் காட்டிக்கொடுத்தது.

இரண்டு மூன்று வாரங்கள் கழித்து, இவனது அக்காவின் திருமணத்திற்காக ஊர்சென்று திரும்பினான். 'திருமண புகைப்படங்களை' இணைத்து, திரட்டிவைத்திருந்த எல்லா தெரிந்தவர்களின் முகவரிகளுக்கும் ஒருமின்னஞ்சலை அனுப்பினான்.

பலரின் மின் வாழ்த்துகளுக்கும், 'உன் ரூட்டு கிளியராயிடுச்சா?' என்ற கேள்விகளுக்கும் நடுவே, அவளிடமிருந்து சம்பந்தமே இல்லாமல் 'நீ எப்படி இருக்கே?' என்று ஒரு பதில் - இவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதில் வந்தது புவனாவிடமிருந்தேதான்.

சட்டென்று பதிலனுப்பினான்.

அவளும்.

நான்கைந்து பதிலுக்கு பதில்களுக்குப் பின்னர்,

''இன்னைக்கு நாம சந்திக்கலாமா?'' - புவனா.

''எங்கே? எப்போ??''

''7:40 க்கு - விஜயநகர்ல - ஒகேவா?''

''எனக்கு ஒகே''

அவள்மீது இருந்த கோபம் லேசாக எட்டிப்பார்த்து பல்லிளித்தது.

இருந்தாலும் 7:30 க்கே வந்துவிட்டான்.



அவளுக்காகத்தான் காத்திருந்தான்.

சொல்லி வைத்தாற்போல் 7:40க்கு வந்தாள். ''ஆச்சரியமா இருக்கே! சீக்கிரமே வந்துட்டே போல! கல்யாண வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?'' என்று ஆரம்பித்த உரையாடல்...

சில பதில்களுக்குப் பிறகு - முகத்தை கொஞ்சம் கோபமாகவே வைத்துக்கொண்டு கேட்டான் ''ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லாம வேற ஆஃபிஸ் போயிட்டே?, எல்லாரும் நான்தான் காரணம்னு எம்பேர்ல பழியைப் போடுறாங்க, தெரியுமா?''

''ஆமா நீதான் காரணம்..... (சிறிய நேர இடைவெளிக்குப் பின்)

... உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா எனக்கும் உன்ன பிடிக்க ஆரம்பிச்ச பிறகு, உன்ன பார்க்கும்போதெல்லாம் எனக்குள்ள என்னவோ பண்ணிச்சு. சாதாரணமா உங்கூட பேச முடியல. அந்த கடைசி இரண்டு மாசமா என்னால ஒழுங்கா வேலையே செய்ய முடியலடா!''


12 comments:

அப்துல்மாலிக் said...

கதையின் போக்கு நல்லயிருக்கு

வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

Suresh said...

வெற்றிப்பெற வாழ்த்துக்கள் :-)

நட்புடன் ஜமால் said...

புவனா ஒரு கேள்வி குறி ...


நல்லாயிருக்குங்க, சந்தோஷமாகவும் இருந்திச்சி

வெற்றி பெற வாழ்த்துகள்!

Unknown said...

அடங்கொன்னியா...!! எல்லா அம்முனிங்களும் ஒரு முடிவோடதான் இருக்குறாங்க....!! சரி...... காதலுக்கும் , கதைக்கும் என் வாழ்த்துக்கள்...!!! வாழ்க வளமுடன்...!!!!!!

கலையரசன் said...

நல்ல எழுத்து நடை!
வெற்றி பெற வாழ்த்துகள்!

SUFFIX said...

ஊர் சுற்றி......உங்களுக்கே வெற்றி!! வாழ்த்துக்கள்!!

ஊர்சுற்றி said...

வெற்றிபெற வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிகள்.

ஷ‌ஃபிக்ஸ் - வரவுக்கு நன்றி.

ஊர்சுற்றி said...

நட்புடன் ஜமால் - நீங்க குடுத்திருக்கிற தலைப்பு எனக்கு பிடிச்சிருக்கு! :)

Suresh said...

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

அண்ணாதுரை சிவசாமி said...

கதை நல்லா வந்திருக்கு.....தம்பி!

ஊர்சுற்றி said...

அண்ணாதுரை சிவசாமி அவர்களே,

கருத்துக்கு நன்றிகள்... தங்கள் வருகைக்கும் நன்றி.

Suba said...

இயல்பா ஒரு காதல் கதை :)