Saturday, November 29, 2008

சென்னையில் ஒரு (பேய்)மழைக்காலம் - தென்சென்னை புகைப்படங்கள்

அலுவலகத்திற்கு விடுமுறை...
வெளி்யே என்னதான் நடக்கிறது - பார்க்க ஆவல். சூழ்ந்து நின்ற தண்ணீரைக் கடந்து ஒரு நகர்வலம்.

இடம்: வேளச்சேரி, விஜயநகர் - வேளச்சேரி to தாம்பரம்
நாள்: 28-11-2008 (இப்போதுதான் மின்சாரம் வந்தது, அதனால்தான் தாமதம்)


வீட்டு முன்..


எங்க ஏரியாவுல இவ்ளோதாங்க தண்ணி வந்தது!!!


வேளச்சேரி - ஏரி


வேளச்சேரி - ஏரி


விஜயநகர் - பேருந்து நிலையம் அருகில்


விஜயநகர்


விஜயநகர் - பாலம்


இந்தப் பக்கம்தான் லக்கிலுக் அண்ணன் இருக்கிறார் - மடிப்பாக்கத்தை நோக்கி ஒரு கிளிக்...



வேளச்சேரி - தாம்பரம் போக்குவரத்தை பாதித்த புதையுண்ட பேருந்து (பாலாஜி நகர் அருகில்).
(மாலை 3:30 மணி அளவில் இது அகற்றப்பட்டது)

Sunday, November 23, 2008

குட்டிப்பெண் ஸ்ரீநிகா வரையக் கற்றுக்கொடுத்த 'பெருச்சாளி'!

நேற்று வடபழனியில், சக பணியாளர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நானும், எங்கள் குழுவிலுள்ள மற்ற ஒரு சிலரும் கலந்து கொண்டோம். ஒருவர் தனது குழந்தை 'ஸ்ரீநிகா' வுடன் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில், 'ஸ்ரீநிகா' குடும்பத்துடன் அவர்கள் மகிழ்வுந்திலேயே வேளச்சேரி வரை வந்தேன். வரும் வழி நெடுக 'ஸ்ரீநிகா' வின் சேட்டைகளும், தத்துப்பித்து கணக்குகளும் – தொலைபேசிய நண்பனை ‘சிறிது நேரத்திற்கு பிறகு பேசுவதாய்’ சொல்லி துண்டிக்க வைத்தன.

ஏதோ கணக்குகள் போட்டு, பிஞ்சு விரல்களில் எண்ணிக்கொண்டிருந்தாள். பத்துக்கு மேற்பட்டட எண்ணி்க்கைக்கு எனது கை விரல்களையும் நீட்டச்சொன்னாள்.

சற்று நேரம் கழித்து, எனக்கு வரையத் தெரியுமா? என்றாள். நான் எசகு பிசகா மாட்டிக்கிட்ட 'வடிவேலு'மாதிரி திருதிருன்னு முழிக்க வேண்டியதாப்போச்சு. இந்த நிலைமையில
'RAT (பெருச்சாளி) வரையத்தெரியுமா?'என்று வேறு கேட்டாள். அவளுக்குத் தெரியாது, தினமும் இரவு 11 மணிக்கு மேல் எங்கள் வீட்டு குப்பை கூடையை புரட்டி எடுக்கும் ஒரு பெருச்சாளியைக் கண்டு நான் திடுக்கிடுவது!.

அப்புறம் 'ஸ்ரீநிகா'வே ஒரு பெருச்சாளி வரைந்து காண்பித்தாள்.
அது உங்களுக்காக இங்கே....

Friday, November 21, 2008

'ஹாய்' மதன் - BLOGs படிக்கிறாரா?!!!

அட ஆமாங்க. இல்லேண்ணா இப்படி ஒரு பதில் வருமா?

ஆ.வி. "ஹாய் மதன்: கேள்வி - பதில்"
19.11.2008

எம்.கதிர்வேல், சென்னை-116.
*பாரி கீழே கிடந்த முல்லைக் கொடிக்கு ஆட்களிடம் சொல்லி பந்தல் போட்டிருக்கலாம். மயிலுக்கு குளிர் அடிக்காமல் கதகதப்பான கூண்டில் அடைத்திருக்கலாம் பேகன். அரசர்கள் தத்துப்பித்தென்று எதையாவது செய்ய, அதை நாமும் காலங்காலமாக பாராட்டிக்கொண்டு இருக்கிறோமே. ஈ.வெ.ரா. பெரியார் நம்மைப் பகுத்தறிவோடு சிந்திக்கச் சொல்லியும் கேட்பாரில்லை. தவறில்லையா?

மதன்: நீங்கள் கேட்டிருப்பது கேள்வி இல்லை - ஒரு குட்டி கட்டுரை. நீங்கள் உடனே BLOG ஆரம்பிப்பது நல்லது
.

அது என்னதுங்க, கேள்வியே இல்லாத ஒண்ணை எதுக்காக "கேள்வி - பதில்" -ல வெளியிடணும். வழக்கமான மதன் பாணி இல்லாம, சம்பந்தமே இல்லாம BLOG ஆரம்பிக்க ஐடியா கொ்டுக்கணும்.

BLOG-பதிவு, வலையுலகம் - இந்த வார்ததையெல்லாம் கேட்ட உடனே மதனுக்கு பெரியார்தான் கண்முன் வருகிறாரா? அந்த அளவுக்கு வலையுலகம் பெரியாரிய மக்களால் நிரம்பி வழிகிறதா?!!!


செய்தி:
'இணைய ஊடகத்தில் பெரியாரின் குழந்தைகளுடைய பங்களிப்பு' குறித்து சுப.வீ. அவர்களின் மகிழ்ச்சியை இந்த பேச்சினூடாக காணலாம். UTMA - ஆண்டுவிழாவில்.
http://www.youtube.com/watch?v=4sx0zxjgF50

Sunday, November 16, 2008

பேச்சலர் ஞாயிறு

எங்க வீட்டு சொந்தக்காரர், “என்னப்பா இது, வீடு மாதிரியா வச்சிருக்கீங்க? தரையோட நிறமே மாறிடுச்சி. அப்பப்போ கழுவி விடுங்கப்பா. ஒரு பாட்டில் ஆசிட் வாங்கி, ஆசிட்ட அப்டியே ஊத்திராதீங்கப்பா! தரை கலரே மாறிடும். ரெண்டு வாளி (பக்கெட்) தண்ணிய கலந்து...” –னெல்லாம் டிப்ஸ் சொல்லிட்டு இன்னொண்ணும் சொன்னாரு.

“அடுத்த வாரம் வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆள் அனுப்பலாம்னு இருக்கேன். பொருட்களையெல்லாம் அப்புறப்படுத்தி வைங்க”.

என்னடா இது, போன வாரமும் இதையேதான சொன்னாரு…? இப்பவும் இதையே சொல்றாரே...



இது கனவா… அப்ப அது இன்னிக்குதானா….

காலையிலேயே (8 மணிக்கு) எழுந்திருச்சி, காலைக்கடன்கள் எல்லாம் முடிச்சிட்டு, குறிஞ்சிப்பூ மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டோம் (பேச்சலர்களுக்கு ஞாயிறு காலை சாப்பாடு எல்லாம் அபூர்வமா பூக்கிற குறிஞ்சி மாதிரிதான். அதுவும் வெளியூரில் தங்கி வேலை செய்றவங்களுக்கு, கேக்கவே வேண்டாம்.)

ஈழத்தமிழர்கள் மீது தமிழ்நாட்டில் அக்டோபர் கடைசி வாரத்தில் இருந்த பாசமிகுந்த உணர்ச்சி வேகம் போல, வேலைய ஆரம்பிச்சபோது கடகடன்னு சுத்தம் செய்ய ஆரம்பிச்சோம்.
ஒரு மணி நேரத்திற்கு அப்புறம், வீட்டு சொந்தக்காரர் – டேர்ந்து ஒரு அழைப்பு. வெள்ளையடிக்க வரவேண்டியவருக்கு உடம்பு சரியில்லையாம்.

இப்போ எங்க வேலையோட வேகம், ஈழப்பிரச்சினை மீதான தமிழகத்தின் நவம்பர் இரண்டாம் வார நிலைப்பாடு போல புஸ்ஸுன்னு போயிடுச்சி.

ஆனாலும் நண்பன் ஒருத்தனோட ஈடுபாட்டினால வீட்ட ஒரு வழியா சுத்தம் செய்தோம். நம்ம வலையுலக நடையில சொல்லணும்னா “வீட்ட சுத்தம் பண்ணி முடிக்கிறதுக்குள்ளே தாவு தீந்து போச்சு”.

இனிமேதான் நேற்றைய பதிவர் சந்திப்பு பற்றிய பக்கங்களையெல்லாம் தேடிப்பிடிச்சி படிக்கணும்.

மொக்கை பதிவுன்னாலும் ஒரு மெஸேஜ்:
“சமைக்கத் தெரியாத, வீட்டை சுத்தம் பண்ணத் தெரியாத அல்லது இவற்றை செய்யாத ஆண்கள் ‘பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம்’ பற்றி பேசுவதற்கான பெரும்பாலான தகுதிகளை இழந்துவிடுகிறார்கள்”.

(பேச்சலர் - சரியான தமிழ் பதம் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்).

Saturday, November 15, 2008

தொலைந்து போனவன் - திரும்பவும்

வீட்ல ஒரு மாசத்துக்கு மேலா இணைய இணைப்பில இருந்த பிரச்சனையால இங்க வந்து ஊர் - மன்னிக்கணும் - இணையம் சுற்ற முடியல.

4-10-2008 வலைப்பதிவர் சந்திப்புக்கு அப்புறம் வலையுலகில் பட்டைய கிளப்பின பலவற்றை சூடா படிக்க முடியாமப்போயிடுச்சு, இதுதான் இப்போதைய வருத்தம்.

ஆங்ங்,,, அப்புறம் இந்த பதிவு எதுக்குன்னா 'நான் திரும்பவும் ஊர் சுற்ற வந்துட்டேன்னு' சொல்றதுக்காகவும்,

இதுக்காகவும்.

BSNL - இணைய இணைப்பு வச்சிருக்கிறவங்க ஏதாவது பி்ரச்சினை (இணைய இணைப்பு சம்பந்தமாகாங்க) இருந்தா - "என்ன பண்ணணும்? யாரை தொடர்பு கொள்ளலாம்?" இது போன்ற சந்தேகங்களுக்கு தாராளமா என்னை தொடர்பு கொள்ளலாம்.