Sunday, November 23, 2008

குட்டிப்பெண் ஸ்ரீநிகா வரையக் கற்றுக்கொடுத்த 'பெருச்சாளி'!

நேற்று வடபழனியில், சக பணியாளர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நானும், எங்கள் குழுவிலுள்ள மற்ற ஒரு சிலரும் கலந்து கொண்டோம். ஒருவர் தனது குழந்தை 'ஸ்ரீநிகா' வுடன் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில், 'ஸ்ரீநிகா' குடும்பத்துடன் அவர்கள் மகிழ்வுந்திலேயே வேளச்சேரி வரை வந்தேன். வரும் வழி நெடுக 'ஸ்ரீநிகா' வின் சேட்டைகளும், தத்துப்பித்து கணக்குகளும் – தொலைபேசிய நண்பனை ‘சிறிது நேரத்திற்கு பிறகு பேசுவதாய்’ சொல்லி துண்டிக்க வைத்தன.

ஏதோ கணக்குகள் போட்டு, பிஞ்சு விரல்களில் எண்ணிக்கொண்டிருந்தாள். பத்துக்கு மேற்பட்டட எண்ணி்க்கைக்கு எனது கை விரல்களையும் நீட்டச்சொன்னாள்.

சற்று நேரம் கழித்து, எனக்கு வரையத் தெரியுமா? என்றாள். நான் எசகு பிசகா மாட்டிக்கிட்ட 'வடிவேலு'மாதிரி திருதிருன்னு முழிக்க வேண்டியதாப்போச்சு. இந்த நிலைமையில
'RAT (பெருச்சாளி) வரையத்தெரியுமா?'என்று வேறு கேட்டாள். அவளுக்குத் தெரியாது, தினமும் இரவு 11 மணிக்கு மேல் எங்கள் வீட்டு குப்பை கூடையை புரட்டி எடுக்கும் ஒரு பெருச்சாளியைக் கண்டு நான் திடுக்கிடுவது!.

அப்புறம் 'ஸ்ரீநிகா'வே ஒரு பெருச்சாளி வரைந்து காண்பித்தாள்.
அது உங்களுக்காக இங்கே....

4 comments:

விலெகா said...

என்னை பின் தொடர்வதற்கு நன்றிங்க,. பெருச்சாளி சூப்பருங்க..

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு பாப்பாவின் பெருச்சாளி..:-) அப்புறம் ப்ரொபைல் போட்டோ பார்த்தா அஞ்சாதே ஹெல்மெட் காரெக்டர் ஞாபகம் வருது..:-)

ஊர்சுற்றி said...

விலெகா,

வருகைக்கு நன்றி.

ஊர்சுற்றி said...

சந்தனமுல்லை,

வாங்க வாங்க...

போட்டோவ சீக்கிரமே மாத்திடுறேன்.
நான் வில்லன் -லாம் இல்லங்க!!!