Friday, January 30, 2009

'ஞாநி' இனி 'ஓ' போட முடியுமா?

'ஓ' போடுவது என்றவுடன் நம்ப அம்மணி கிரண் ஞாபகத்திற்கு போய் விடாதீர்கள். இது '49 ஓ' பற்றியது. எல்லோருக்கும் ஓட்டுப் போட உரிமை உள்ளது, என்பதைப் போலவே 'எனக்கு யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லை' என்று சட்டப்பூர்வமாக பதிவு செய்யலாம். அதற்கு உதவுவது இந்த பிரிவு. '49 ஓ' பற்றி நாம் பேசும் போது, இதை இந்த அளவிற்காவது பிரபலப்படுத்திய எழுத்தாளர் 'ஞாநி' நிச்சயம் ஞாபகம் வருவார். அவர் இன்னமும் தளராது இது பற்றி பேசியும் எழுதியும் வருகிறார். இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் கூட, தன்னுடைய அரங்கத்தில் நடத்திய 'தினசரி தேர்தலில்' இரண்டு நாட்களை இது சம்பந்தமாக ஒதுக்கியுள்ளார். இதன் முடிவுகளை அவரது தளத்தில் காணலாம்.

மின்னணு ஓட்டுப் பதிவிற்கு முன்பும் சரி இப்போதும் சரி, உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இதை நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் (வாக்குச்சாவடி அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு தனியாக இதற்கான படிவத்தை நீங்களை பூர்த்தி செய்து 49 "ஓ" போடலாம்) . மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இதற்கான மாற்றங்களை கொண்டு வருவது, வாக்காளருக்கு நேரடியாக இந்த வாய்ப்பை வழங்குவது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 28-ம் தேதி வந்த வழக்கில் அரசுத் தரப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற வாய்ப்பை அளிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது".

* ஓட்டளிக்க விருப்பமில்லாதவர்களினால் அரசுக்கோ கட்சிக்கோ எந்த பயனாவது இருக்கிறதா?
* மக்கள் எல்லோரும் விரும்புகிற வேட்பாளர்களை எங்கு போய் தேடுவது?
* எல்லோரும் '49 ஓ' வை லிஃப்டில் பொத்தானை அழுத்துவது போல அழுத்திவிட்டு சென்றால் கட்சி என்னாவது? ஆட்சி என்னாவது?
* இந்த நாட்டை யார்தான் ஆள்வது?

இப்படி புலம்பிக்கொண்டு அரசியல் கட்சிகள் எல்லாம் நிச்சயம் ஒன்று சேர்ந்து இந்த சட்டத்தை தடுத்து விட வாய்ப்பு இருக்கிறது.

கொஞ்சம் யோசிங்களேன். வேண்டும் என்று சொல்வதற்கு உரிமை இருப்பதை போல 'வேண்டாம்' என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருந்தால்தானே அது 'முழு உரிமை'!

நாலைந்து ரவுடிகள் சேர்ந்து தெருவில் செல்லும் பெண்ணை மறித்து 'நாங்க ரொம்ப நாளா உன்னையே சுத்தி சுத்தி வர்றோம். எங்கள்ல யாரையாவது ஒருத்தன நீ பிடிச்சிருக்குன்னு சொல்லணும். ஆனா யாரையுமே பிடிக்கலன்னு சொன்னே....'

இதற்கும் அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

Sunday, January 4, 2009

சென்னை சங்கமம் புகைப்படங்கள்

2009, ஜனவரி 10-ம் தேதி அடுத்த சங்கமம் சங்கமிக்க இருக்கிறது.
அதை முன்னறிவிக்கிற விதமாக இதோ இந்தப் புகைப்படங்கள்,
2008-ம் வருட ஆல்பத்திலிருந்து....

தொடக்க விழாவிலே....வள்ளுவர் கோட்டத்திலிருந்து...'இராணி மேரி' கல்லூரி வளாக நிகழ்ச்சி நிரல்...
வாருங்கள் கொண்டாடுவோம் 'சென்னை சங்கமத்தை' - நம் கலைகளை.

"சென்னை அழகிய சென்னை..."
சென்னை சங்கமம் - இணைய தளம்.
http://www.chennaisangamam.com

Saturday, January 3, 2009

சென்னை பதிவர் வாசகர் சந்திப்பு - ஆறிப்போன விடீயோக்கள்

சென்னை பதிவர் வாசகர் சந்திப்பு
சுவாரசியமான விவாதங்கள் அடங்கிய விடீயோக்கள் இங்கே - சரியான link-குகளுடன்....

1) தி.மு. - தி.பி. (திருமணத்திற்கு முன் - திருமணத்திற்கு பின்): வாழ்க்கையில் உள்ள/ஏற்படும் பயம், பொறுப்பு இவை பற்றி இங்கே...
http://picasaweb.google.com/itisjonson/PHwySH?authkey=SdVS9NmcKb8#5284752242109846482

2) 40 வயதிற்கு மேல் - என்பதை மையமாக வைத்து இங்கே விவாதிக்கிறார்கள்
http://picasaweb.google.com/itisjonson/PHwySH?authkey=SdVS9NmcKb8#5284764667001297778

3)தாமிராவின் (புலம்பல்கள்...)அலசல்கள் - இங்கே
http://picasaweb.google.com/itisjonson/PHwySH?authkey=SdVS9NmcKb8#5284773499545322450


4)'திருமணம் அல்லது ஒரு துணை' தேவையா இல்லையா? - எது தேவை?: அனைவரது கருத்துக் குத்துக்கள் இங்கே...
http://picasaweb.google.com/itisjonson/PHwySH?authkey=SdVS9NmcKb8&feat=directlink#5284787821441892738