Sunday, December 28, 2008

சென்னை பதிவர் வாசகர் சந்திப்பு - ஆறிப்போன படங்கள் மற்றும் விடீயோக்கள்!

ஆமாங்க... நேற்றே இந்த இடுகையை இட்டிருந்தால் 'சூடான' என்று தலைப்பிட்டிருக்கலாம். அதுவுமில்லாமல், இந்த 'சூடான' வார்த்தைக்கு வலையுலகில் சற்றே அதிக 'சூடு' இருப்பதால் ஒரு முன்னெச்சரிக்கை. அவ்வளவுதான்!

நானும் சென்னை வலைப்பதிவர் மற்றும் வாசகர் சந்திப்பு (27/12/2008)- ல் கலந்து கொண்டேன். இதோ புகைப்படங்கள்.





































குசும்பன் அவர்களின் கோரிக்கை நர்சிம்மால் நிறைவேற்றப்பட்டது.

ஆமாங்க, நர்சிம் 'டக்கின்' பண்ணாம வந்திருந்தாருங்க.

















நேரம் ஆக ஆக... இருள் கவிய.... புகைப்படங்களிலும் அது தெரிகிறது.

புகைப்படங்களுக்கான முகவரி இது...
http://picasaweb.google.com/itisjonson/euLemF?authkey=8V0Fe1aUVGI&feat=directlink

சுவாரசியமான விவாதங்கள் அடங்கிய விடீயோக்கள் இங்கே....

1) தி.மு. - தி.பி. (திருமணத்திற்கு முன் - திருமணத்திற்கு பின்): வாழ்க்கையில் உள்ள/ஏற்படும் பயம், பொறுப்பு இவை பற்றி இங்கே...
http://picasaweb.google.com/lh/photo/Uy2_tIWfDAx9J2u8xEYvXA?authkey=Yr6WyqBh10I&feat=directlink

2) 40 வயதிற்கு மேல் - என்பதை மையமாக வைத்து இங்கே விவாதிக்கிறார்கள்
http://picasaweb.google.com/lh/photo/n6-xvdp-gnjfoxCX2-fb6A?authkey=Yr6WyqBh10I&feat=directlink

3)தாமிராவின் (புலம்பல்கள்...)அலசல்கள் - இங்கே
http://picasaweb.google.com/lh/photo/q-8kvH4KNZB2UxOqNKtDUA?authkey=Yr6WyqBh10I&feat=directlink

4)'திருமணம் அல்லது ஒரு துணை' தேவையா இல்லையா? - எது தேவை?: அனைவரது கருத்துக் குத்துக்கள் இங்கே...
http://picasaweb.google.com/lh/photo/SVrSB8MU1tZKjdxru10c4Q?authkey=Yr6WyqBh10I&feat=directlink

பி.கு. விடீயோக்கள் வரிசையாக ஒரே ஆல்பத்தில் உள்ளன். அதனால முதல் link -ல் இருந்து அடுத்த விடீயோவிற்கு செல்லலாம்.

Monday, December 22, 2008

கடலை கடவுள், குரு, ஆசான் அதிஷாவுக்கு...

வலையுலகின் 'இளைய தளபதி' - கில்லி - குருவி 'அதிஷா' அவர்கள் எழுதிய இந்த இடுகையை உங்களில் பெரும்பாலோர் படித்தி்ருக்கலாம்.

அதன் உட்பகுதிகளாகிய
1)கடலைபோடுவதின் வகைகள்
2)கடலையின் கொள்கை
3)பல அனுபவக்கதைகள்
4)ஆராய்ச்சி முடிவுகள் குறித்து,

படித்து தெளிந்து அதன் பயனை அடைந்து வருவதால் இவ்விடுகையை எழுத வேண்டியது - குருவிற்கு சீடன் செலுத்தும் நன்றிக்கடன் ஆகிறது. (கடலை கடவுளே வாழ்க !)

எத்தனையோ பேர் கடலையை பற்றி எழுதியிருந்தாலும், இந்த இடுகையைப் படித்த பின்தான் இதன் வழிமுறைகளை தீவிரமாக பின்பற்ற ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்த ஆராய்ச்சியின் பயனை அனுபவித்தேன். (கடலை மன்னனே வாழ்க !)

கடலை போட மிக முக்கியமான, எதிர்பாலினத்தேர்வு (அதாவது நல்ல டுபுரி)வாய்த்து அதில் கடினமான உழைப்புடனும் நேர்மையுடனும் இன்று நான் இருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க அண்ணன்தான் காரணம் (கடலை கண்திறந்தாய் வாழ்க !).

கடலையை எப்படி 'கன்டினியு' பண்ணுகிறேன் என்பதையெல்லாம் சொல்ல ஆசைதான். ஆனால் அண்ணனின் வழிமுறை 7 தடுக்கிறது.
//7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது // :) (கடலைக்கு உயிர்கொடுத்தாய் வாழ்க !)

ஒரு சுய விளம்பரம் : இந்த இடுகையே ஒரு சுய விளம்பரம்தான். இதுல இன்னொரு விளம்பரமா...மன்னிச்சு விட்டுருங்க மக்களே.


ஒரு பிற்சேர்க்கை : 'அண்ணன்' அதிஷா சமீப காலமாக ஜே.கே.ரித்திஷ்( JKR) அவர்களுக்கு 'முன்னணி ஹீரோயின்களுடன் கடலை போடுவது எப்படி' என்பது குறித்து எந்த பக்க சார்பும் இல்லாமல் வகுப்பு எடுத்து வருகிறாராம்!!!
தமிழ் ஹீரோயின்கள் ஜாக்கிரதை.

பி.கு. அடைப்பிற்குள் உள்ளவை அண்ணன் அதிஷாவின் இடுகையிலிருந்த பின்னூட்டங்கள்.

Saturday, November 29, 2008

சென்னையில் ஒரு (பேய்)மழைக்காலம் - தென்சென்னை புகைப்படங்கள்

அலுவலகத்திற்கு விடுமுறை...
வெளி்யே என்னதான் நடக்கிறது - பார்க்க ஆவல். சூழ்ந்து நின்ற தண்ணீரைக் கடந்து ஒரு நகர்வலம்.

இடம்: வேளச்சேரி, விஜயநகர் - வேளச்சேரி to தாம்பரம்
நாள்: 28-11-2008 (இப்போதுதான் மின்சாரம் வந்தது, அதனால்தான் தாமதம்)


வீட்டு முன்..


எங்க ஏரியாவுல இவ்ளோதாங்க தண்ணி வந்தது!!!


வேளச்சேரி - ஏரி


வேளச்சேரி - ஏரி


விஜயநகர் - பேருந்து நிலையம் அருகில்


விஜயநகர்


விஜயநகர் - பாலம்


இந்தப் பக்கம்தான் லக்கிலுக் அண்ணன் இருக்கிறார் - மடிப்பாக்கத்தை நோக்கி ஒரு கிளிக்...



வேளச்சேரி - தாம்பரம் போக்குவரத்தை பாதித்த புதையுண்ட பேருந்து (பாலாஜி நகர் அருகில்).
(மாலை 3:30 மணி அளவில் இது அகற்றப்பட்டது)

Sunday, November 23, 2008

குட்டிப்பெண் ஸ்ரீநிகா வரையக் கற்றுக்கொடுத்த 'பெருச்சாளி'!

நேற்று வடபழனியில், சக பணியாளர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நானும், எங்கள் குழுவிலுள்ள மற்ற ஒரு சிலரும் கலந்து கொண்டோம். ஒருவர் தனது குழந்தை 'ஸ்ரீநிகா' வுடன் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில், 'ஸ்ரீநிகா' குடும்பத்துடன் அவர்கள் மகிழ்வுந்திலேயே வேளச்சேரி வரை வந்தேன். வரும் வழி நெடுக 'ஸ்ரீநிகா' வின் சேட்டைகளும், தத்துப்பித்து கணக்குகளும் – தொலைபேசிய நண்பனை ‘சிறிது நேரத்திற்கு பிறகு பேசுவதாய்’ சொல்லி துண்டிக்க வைத்தன.

ஏதோ கணக்குகள் போட்டு, பிஞ்சு விரல்களில் எண்ணிக்கொண்டிருந்தாள். பத்துக்கு மேற்பட்டட எண்ணி்க்கைக்கு எனது கை விரல்களையும் நீட்டச்சொன்னாள்.

சற்று நேரம் கழித்து, எனக்கு வரையத் தெரியுமா? என்றாள். நான் எசகு பிசகா மாட்டிக்கிட்ட 'வடிவேலு'மாதிரி திருதிருன்னு முழிக்க வேண்டியதாப்போச்சு. இந்த நிலைமையில
'RAT (பெருச்சாளி) வரையத்தெரியுமா?'என்று வேறு கேட்டாள். அவளுக்குத் தெரியாது, தினமும் இரவு 11 மணிக்கு மேல் எங்கள் வீட்டு குப்பை கூடையை புரட்டி எடுக்கும் ஒரு பெருச்சாளியைக் கண்டு நான் திடுக்கிடுவது!.

அப்புறம் 'ஸ்ரீநிகா'வே ஒரு பெருச்சாளி வரைந்து காண்பித்தாள்.
அது உங்களுக்காக இங்கே....

Friday, November 21, 2008

'ஹாய்' மதன் - BLOGs படிக்கிறாரா?!!!

அட ஆமாங்க. இல்லேண்ணா இப்படி ஒரு பதில் வருமா?

ஆ.வி. "ஹாய் மதன்: கேள்வி - பதில்"
19.11.2008

எம்.கதிர்வேல், சென்னை-116.
*பாரி கீழே கிடந்த முல்லைக் கொடிக்கு ஆட்களிடம் சொல்லி பந்தல் போட்டிருக்கலாம். மயிலுக்கு குளிர் அடிக்காமல் கதகதப்பான கூண்டில் அடைத்திருக்கலாம் பேகன். அரசர்கள் தத்துப்பித்தென்று எதையாவது செய்ய, அதை நாமும் காலங்காலமாக பாராட்டிக்கொண்டு இருக்கிறோமே. ஈ.வெ.ரா. பெரியார் நம்மைப் பகுத்தறிவோடு சிந்திக்கச் சொல்லியும் கேட்பாரில்லை. தவறில்லையா?

மதன்: நீங்கள் கேட்டிருப்பது கேள்வி இல்லை - ஒரு குட்டி கட்டுரை. நீங்கள் உடனே BLOG ஆரம்பிப்பது நல்லது
.

அது என்னதுங்க, கேள்வியே இல்லாத ஒண்ணை எதுக்காக "கேள்வி - பதில்" -ல வெளியிடணும். வழக்கமான மதன் பாணி இல்லாம, சம்பந்தமே இல்லாம BLOG ஆரம்பிக்க ஐடியா கொ்டுக்கணும்.

BLOG-பதிவு, வலையுலகம் - இந்த வார்ததையெல்லாம் கேட்ட உடனே மதனுக்கு பெரியார்தான் கண்முன் வருகிறாரா? அந்த அளவுக்கு வலையுலகம் பெரியாரிய மக்களால் நிரம்பி வழிகிறதா?!!!


செய்தி:
'இணைய ஊடகத்தில் பெரியாரின் குழந்தைகளுடைய பங்களிப்பு' குறித்து சுப.வீ. அவர்களின் மகிழ்ச்சியை இந்த பேச்சினூடாக காணலாம். UTMA - ஆண்டுவிழாவில்.
http://www.youtube.com/watch?v=4sx0zxjgF50

Sunday, November 16, 2008

பேச்சலர் ஞாயிறு

எங்க வீட்டு சொந்தக்காரர், “என்னப்பா இது, வீடு மாதிரியா வச்சிருக்கீங்க? தரையோட நிறமே மாறிடுச்சி. அப்பப்போ கழுவி விடுங்கப்பா. ஒரு பாட்டில் ஆசிட் வாங்கி, ஆசிட்ட அப்டியே ஊத்திராதீங்கப்பா! தரை கலரே மாறிடும். ரெண்டு வாளி (பக்கெட்) தண்ணிய கலந்து...” –னெல்லாம் டிப்ஸ் சொல்லிட்டு இன்னொண்ணும் சொன்னாரு.

“அடுத்த வாரம் வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆள் அனுப்பலாம்னு இருக்கேன். பொருட்களையெல்லாம் அப்புறப்படுத்தி வைங்க”.

என்னடா இது, போன வாரமும் இதையேதான சொன்னாரு…? இப்பவும் இதையே சொல்றாரே...



இது கனவா… அப்ப அது இன்னிக்குதானா….

காலையிலேயே (8 மணிக்கு) எழுந்திருச்சி, காலைக்கடன்கள் எல்லாம் முடிச்சிட்டு, குறிஞ்சிப்பூ மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டோம் (பேச்சலர்களுக்கு ஞாயிறு காலை சாப்பாடு எல்லாம் அபூர்வமா பூக்கிற குறிஞ்சி மாதிரிதான். அதுவும் வெளியூரில் தங்கி வேலை செய்றவங்களுக்கு, கேக்கவே வேண்டாம்.)

ஈழத்தமிழர்கள் மீது தமிழ்நாட்டில் அக்டோபர் கடைசி வாரத்தில் இருந்த பாசமிகுந்த உணர்ச்சி வேகம் போல, வேலைய ஆரம்பிச்சபோது கடகடன்னு சுத்தம் செய்ய ஆரம்பிச்சோம்.
ஒரு மணி நேரத்திற்கு அப்புறம், வீட்டு சொந்தக்காரர் – டேர்ந்து ஒரு அழைப்பு. வெள்ளையடிக்க வரவேண்டியவருக்கு உடம்பு சரியில்லையாம்.

இப்போ எங்க வேலையோட வேகம், ஈழப்பிரச்சினை மீதான தமிழகத்தின் நவம்பர் இரண்டாம் வார நிலைப்பாடு போல புஸ்ஸுன்னு போயிடுச்சி.

ஆனாலும் நண்பன் ஒருத்தனோட ஈடுபாட்டினால வீட்ட ஒரு வழியா சுத்தம் செய்தோம். நம்ம வலையுலக நடையில சொல்லணும்னா “வீட்ட சுத்தம் பண்ணி முடிக்கிறதுக்குள்ளே தாவு தீந்து போச்சு”.

இனிமேதான் நேற்றைய பதிவர் சந்திப்பு பற்றிய பக்கங்களையெல்லாம் தேடிப்பிடிச்சி படிக்கணும்.

மொக்கை பதிவுன்னாலும் ஒரு மெஸேஜ்:
“சமைக்கத் தெரியாத, வீட்டை சுத்தம் பண்ணத் தெரியாத அல்லது இவற்றை செய்யாத ஆண்கள் ‘பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம்’ பற்றி பேசுவதற்கான பெரும்பாலான தகுதிகளை இழந்துவிடுகிறார்கள்”.

(பேச்சலர் - சரியான தமிழ் பதம் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்).

Saturday, November 15, 2008

தொலைந்து போனவன் - திரும்பவும்

வீட்ல ஒரு மாசத்துக்கு மேலா இணைய இணைப்பில இருந்த பிரச்சனையால இங்க வந்து ஊர் - மன்னிக்கணும் - இணையம் சுற்ற முடியல.

4-10-2008 வலைப்பதிவர் சந்திப்புக்கு அப்புறம் வலையுலகில் பட்டைய கிளப்பின பலவற்றை சூடா படிக்க முடியாமப்போயிடுச்சு, இதுதான் இப்போதைய வருத்தம்.

ஆங்ங்,,, அப்புறம் இந்த பதிவு எதுக்குன்னா 'நான் திரும்பவும் ஊர் சுற்ற வந்துட்டேன்னு' சொல்றதுக்காகவும்,

இதுக்காகவும்.

BSNL - இணைய இணைப்பு வச்சிருக்கிறவங்க ஏதாவது பி்ரச்சினை (இணைய இணைப்பு சம்பந்தமாகாங்க) இருந்தா - "என்ன பண்ணணும்? யாரை தொடர்பு கொள்ளலாம்?" இது போன்ற சந்தேகங்களுக்கு தாராளமா என்னை தொடர்பு கொள்ளலாம்.

Sunday, October 5, 2008

ஒரு அதிசயமான கல்லூரி பிரிவுபசார விழா!


அது சாதாரணமாக நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கக்கூடிய பிரிவு விழா அல்ல! அது எங்கள் ஆசிரியர்கள் மனமுவந்து எங்களுக்கு அளித்த கௌரவம் – திருவிழா. இன்றும் பசுமையான நினைவுகளோடு புல்லரிக்க(மயிர்க்கூச்செரிய) வைக்கிற நிகழ்வுகளை உள்ளடக்கியது.

2006 – ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் – இறுதி ஆண்டு மின்னணுவியியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation Engineering) மாணவர்களாகிய எங்களிடம் “Farewell Party(பிரிவு விருந்து) வைச்சிருக்குப்பா, எல்லாரும் வந்திருங்க” என்று எங்கள் பேராசிரியர் சொன்னபோது, அது அப்படியே நடந்தபோது – எங்களுக்கு ஆச்சரியத்தை தவிர வேறெதுவும் தோன்றவில்லை.


முதல் காரணம்,
வழக்கமாக மாணவர்கள் தங்களுக்குள்ளே இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்து பின்பு ஆசிரியர்களை அழைப்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களை அழைத்தது.
இரண்டாவது,
கல்லூரி மேலிடத்திலிருந்தே, பிரிவு விழா (Farewell Day ) எல்லாம் கொண்டாடக்கூடாது, என்று அறிவித்திருந்த நேரத்தில் எங்களுக்கு மட்டும் வாழ்நாளிலே மறக்க முடியாத அந்த அனுபவம் கிடைத்தது.

அப்படி நாங்கள் என்ன செய்து விட்டோம் – எங்களுக்கு முன் இதே துறையில் (Department) படித்தவர்கள் செய்யாததை!

முதல் வருட இறுதியில், கல்லூரியிலேயே எங்கள் வகுப்பின் நிலைமைதான் மிகவும் மோசம். அனைத்து பாடங்களிலும் தேறியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. விளையாட்டு மற்ற கல்லூரி அளவிலான Club activities (குழு நடவடிக்கைகள் - உதாரணம் JAYCEE, ROTARACT, RED CROSS & NSS) மிகக் குறைவு. போதாக்குறைக்கு எங்கள் துறை கட்டடத்திற்கு பட்டப்பெயர் கூட “பேய்வீடு”. மேலும், எங்கள் துறை எல்லா இடத்திலும் கடைசி நிலையிலும் ஒதுக்கிவைக்கப் பட்டதாகவும் இருந்தது.
இப்போதான் நாங்க இரண்டாவது ஆண்டுக்குள்ள அடியெடுத்து வைச்சோம்.
இது நல்ல விஷயமாண்ணு தெரியல, என்னண்ணா எங்க வகுப்பில உள்ளவங்க பெரும்பாலும் ஒண்ணாவே சேர்ந்து சுத்தினோம். விடுதியில் அரட்டையின்போது, நண்பர்கள் வீட்டுக்கு போகும்போது, சாப்பிடப்போகும்போது, இப்படி.

இந்த பழக்கம் எங்க வகுப்புல இருந்த எல்லாரையும் ஒரே அலைவரிசையில கொண்டு வந்தது. கல்லூரியோட எல்லா நிகழ்வுகள்லயும் பங்கெடுக்க ஆரம்பிச்சோம், எங்க துறை சார்ந்த நிகழ்வுகளை பெரிய விழாக்களா கொண்டாடினோம். தேர்வுகளுக்கான புத்தகங்கள் கட்டுரைகளை சேகரிக்கும்போது மொத்த வகுப்பையும் கவனத்துல எடுத்துகிட்டாங்க ஒரு சில நண்பர்கள். கல்லூரியில இருந்த கிட்டத்தட்ட எல்லா Club லயும் எங்க வகுப்பில இருந்து யாராவது ஒருத்தர் முக்கியமான பொறுப்புல வந்தாங்க. ஒரு கட்டத்தில கல்லூரி நிகழ்வுகள் எல்லாத்திலயும் எங்கள்ல ஒருத்தராவது பொறுப்பாளரா இருந்த நிலைமை வந்தது. படிப்புலயும் ஓரளவுக்கு முன்னாடி வந்தோம்.

ஆனா சாதாரணமா நடக்கக் கூடிய இந்த மாற்றங்களுக்காக, எங்களுக்கு எல்லா விதத்திலயும் உதவியா இருந்தது எங்க ஆசிரியர்கள்தான். கிட்டத்தட்ட காலேஜே ஒரு பள்ளிக்கூடம் மாதிரி ஆகிட்டிருந்த காலகட்டத்தில (இதைப் பத்தின என்னோட முந்தைய பதிவு இங்கே) எங்க துறை (Department) மட்டும் காலேஜாவே இருந்ததுக்கு காரணமும் இவங்கதான்.

அப்படிப்பட்டவங்ககிட்ட நாங்க கத்துகிட்டது பாராட்டு வாங்கினது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்!!!

(படத்தில்: நடுவில் – பேராசிரியர் பிரம்மநாயகம், வலது – விரிவுரையாளர். அபுதாகிர் & இடது - விரிவுரையாளர். மோகன் குமார்) இவங்களை தெரிஞ்சுக்கணுமா? அப்போ வாங்க கோவில்பட்டிக்கு….

சென்னை பதிவர் சந்திப்பு(அக்டோபர் 4) - நானும் போயிருந்தேன்!

இவங்க எல்லாம் இங்க, இப்படி,

http://muralikkannan.blogspot.com/2008/09/4.html
http://www.athishaonline.com/2008/09/04-10-2008.html
http://venpu.blogspot.com/2008/10/blog-post.html
http://www.luckylookonline.com/2008/10/blog-post_03.html

எழுதின மாதிரி அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு நல்லபடியா நடந்து முடிஞ்சது.

http://dondu.blogspot.com/2008/10/04102008.html

நானும் கலந்துக்கிட்டேங்க!!!

அப்படியே, புகைப்படங்களை கிளிக்கித் தள்ளிய பாசக்கார பதிவர்கள் உடனே 'அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு - போட்டோ பதிவு' அப்படி ஏதாவது போட்டீங்கண்ணா நல்லாயிருக்கும்.

Saturday, September 20, 2008

சைக்கிளுக்கு ஹெல்மெட்டாஆஆஆஆ



இரண்டு வாரத்தி்ற்கு முன்பு என்னை மிதி வண்டியில் தலைக்கவசத்தோடு வேளச்சேரி தாம்பரம் சாலையில் பார்த்திருக்கலாம்!!!

(சும்மா – சைக்கிளுக்கு ஹெல்மெட் போட்டுட்டு போகணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான்)

இத பார்த்ததும் உங்களுக்கு என்ன தோண வாய்ப்பிருக்குன்னா….!!!!

1) சைக்கிளுக்கு ஹெல்மெட்டா – ஏதாவது பைத்தியமோ?
2) ஏதாவது பெட் கிட் வச்சிருப்பானோ?
3) சென்னை சைக்கோவா இருக்குமோ?
4) ரொம்ப வேகமா போறதா நெனப்போ?
5) ஹெல்மெட் போட சொல்லி விழிப்புணர்வு ஏதுமா?
6) சரியான பயந்தாங்கொள்ளியா(கோழை) இருப்பானோ?


நான் இப்படி போறத பார்த்துட்டு, பைக்ல போறவங்க சிரிச்சிட்டு போனது, office la Security ஒரு மாதிரியா பார்த்தது, ஒரு சின்ன பையன் 'சைக்கிளுக்கு ஹெல்மெட்டா' ன்னு கத்தினது, ரெண்டு பொண்ணுங்க 'ரோட் ஸேப்டி (Road Safety) ரொம்ப முக்கியம், அதுவும் இந்த மோசமான ரோட்ல' அப்படின்னு என்னை கடந்து போகும் போது 'க்ளுக்' னு சிரிச்சிகிட்டே பேசிட்டு போனது, இப்படி பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துச்சி.

நீங்க கூட முயற்சி பண்ணலாம்..... ;)

Sunday, July 20, 2008

நள்ளிரவில் சைக்கிளில் ஏ.ஆர்.ரகுமான்...

துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை, இரவு மணி 12:30. IT நிறுவன வாகனங்களின் அணிவகுப்பு இல்லாத அந்த நேரத்தில் ஒரு சில வினாடிகளில் எடுத்த முடிவு அது. ரோந்தில் இருந்த ஒரு காவல் அதிகாரி, டாஸ்மாக் கடை உண்மையாகவே பூட்டியுள்ளதா என கவனித்துவிட்டு டயூட்டியைத் தொடர, சற்று தூரத்தில் வாடகைக்கு விடுவதற்காக கட்டிவிடப்பட்டிருந்த கட்டடம் சுற்றியுள்ள ஏரியாவை மிரட்டிக்கொண்டிருக்க, என் பயணம் தொடர்ந்தது.

என்னை இந்த வழியாக இழுத்து வந்தது எது? மனதின் அமைதியா? நள்ளிரவின் நிசப்தமா? அல்லது அதோ அந்த புகை மூட்டத்தால் மங்கிவிட்ட முழு நிலவின் வெளிச்சமா?

எதுவாயினும் இந்த நள்ளிரவில் மனதைக் கவர்ந்த ஒரு சில ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை சைக்கிளில் சென்று கொண்டே ரசிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே!

இன்னொரு முறை எப்போது வாய்க்குமோ?!

மழை பெய்திருந்தால் இந்த பயணம் இன்னும் அழகானதாய் மாறியிருந்திருக்குமே?!!!

Friday, July 18, 2008

இப்போதைக்கு புதிய பதிவன்

நெடுநாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவெழுத வந்துள்ளேன்..... ஒரு பழைய வலையுலக வாசகன், இப்போதைக்கு புதிய பதிவன்.