Friday, January 30, 2009

'ஞாநி' இனி 'ஓ' போட முடியுமா?

'ஓ' போடுவது என்றவுடன் நம்ப அம்மணி கிரண் ஞாபகத்திற்கு போய் விடாதீர்கள். இது '49 ஓ' பற்றியது. எல்லோருக்கும் ஓட்டுப் போட உரிமை உள்ளது, என்பதைப் போலவே 'எனக்கு யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லை' என்று சட்டப்பூர்வமாக பதிவு செய்யலாம். அதற்கு உதவுவது இந்த பிரிவு. '49 ஓ' பற்றி நாம் பேசும் போது, இதை இந்த அளவிற்காவது பிரபலப்படுத்திய எழுத்தாளர் 'ஞாநி' நிச்சயம் ஞாபகம் வருவார். அவர் இன்னமும் தளராது இது பற்றி பேசியும் எழுதியும் வருகிறார். இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் கூட, தன்னுடைய அரங்கத்தில் நடத்திய 'தினசரி தேர்தலில்' இரண்டு நாட்களை இது சம்பந்தமாக ஒதுக்கியுள்ளார். இதன் முடிவுகளை அவரது தளத்தில் காணலாம்.

மின்னணு ஓட்டுப் பதிவிற்கு முன்பும் சரி இப்போதும் சரி, உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இதை நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் (வாக்குச்சாவடி அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு தனியாக இதற்கான படிவத்தை நீங்களை பூர்த்தி செய்து 49 "ஓ" போடலாம்) . மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இதற்கான மாற்றங்களை கொண்டு வருவது, வாக்காளருக்கு நேரடியாக இந்த வாய்ப்பை வழங்குவது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 28-ம் தேதி வந்த வழக்கில் அரசுத் தரப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற வாய்ப்பை அளிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது".

* ஓட்டளிக்க விருப்பமில்லாதவர்களினால் அரசுக்கோ கட்சிக்கோ எந்த பயனாவது இருக்கிறதா?
* மக்கள் எல்லோரும் விரும்புகிற வேட்பாளர்களை எங்கு போய் தேடுவது?
* எல்லோரும் '49 ஓ' வை லிஃப்டில் பொத்தானை அழுத்துவது போல அழுத்திவிட்டு சென்றால் கட்சி என்னாவது? ஆட்சி என்னாவது?
* இந்த நாட்டை யார்தான் ஆள்வது?

இப்படி புலம்பிக்கொண்டு அரசியல் கட்சிகள் எல்லாம் நிச்சயம் ஒன்று சேர்ந்து இந்த சட்டத்தை தடுத்து விட வாய்ப்பு இருக்கிறது.

கொஞ்சம் யோசிங்களேன். வேண்டும் என்று சொல்வதற்கு உரிமை இருப்பதை போல 'வேண்டாம்' என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருந்தால்தானே அது 'முழு உரிமை'!

நாலைந்து ரவுடிகள் சேர்ந்து தெருவில் செல்லும் பெண்ணை மறித்து 'நாங்க ரொம்ப நாளா உன்னையே சுத்தி சுத்தி வர்றோம். எங்கள்ல யாரையாவது ஒருத்தன நீ பிடிச்சிருக்குன்னு சொல்லணும். ஆனா யாரையுமே பிடிக்கலன்னு சொன்னே....'

இதற்கும் அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

22 comments:

துளசி கோபால் said...

நியாயமாத்தான் இருக்கு.

அரசியல் வியாதிகளுக்கு மட்டும் இது ரொம்பவே அநியாயமாத் தோணுமே...(-:

ஊர்சுற்றி said...

ஆமாங்க துளசி.
பொறுத்திருந்து பார்ப்போம், இந்த '49 ஓ' விற்கு என்னதான் நடக்க இருக்கிறது என்று.

பாபு said...

உங்க உதாரணம் ரொம்ப நல்லா இருக்கு

Unknown said...

தெளிவா எழுதிறீங்க, பாராட்டுகள்.

அருண் குமார் என்னும் பதிவர் 49ஓ பற்றி விரிவாக எழுதிய, எனக்கு இதுபற்றி விவரமாகத் தெரிய வைத்த பதிவு.

என்ன நடக்கலாம்? (1) மீறி சாதிசனத்துக்கு ஓட்டுப் போட்டவங்க ஓட்டு மட்டும் செல்லும். (2) ரவுடிங்க கிட்ட மாட்டிகிட்ட பொண்ணு, “உங்கள்ல ரெண்டு பேரை புடிச்சிருக்கு. நாளைக்கு முடிவு சொல்றேன்?”னு சொல்லிட்டுப் போயிடலாம். (தனிமனித வாழ்க்கையில் கூட்டணி ஆட்சி அமைக்க சட்டத்தில இடமில்லை, பேச்சுக்கு சொன்னீங்க, நானும் அதே உதார்-ரணம் விட்டேன்)

Athisha said...

மிக நல்ல பதிவு நண்பா.. உங்கள் உதாரணம் நச்

கிரி said...

//பாபு said...
உங்க உதாரணம் ரொம்ப நல்லா இருக்கு//

வழிமொழிகிறேன்

ஊர்சுற்றி said...

நன்றி பாபு.

நன்றி கெக்கே பிக்குணி (என்னங்க பேரு இது?!!)

அப்புறம் அந்த இடுகையை படித்தேன். '49 ஓ' விற்கும் கம்யூனிசத்திற்கும், நாட்டில் ஏற்படும் குழப்பங்களுக்கும் எப்படித்தான் முடிச்சு
போட முடிந்ததோ?! எனக்கு புரியவில்லை.

ஊர்சுற்றி said...

அதிஷாஆஆஆ நன்றி, நன்றி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. :)

கிரி, அமுதா தங்கள் கமென்டுகளுக்கு நன்றி. அப்பப்போ வந்துட்டு போங்க.

Unknown said...

என் பேர் காரணப் பேரு:-)

//கம்யூனிசத்திற்கும், நாட்டில் ஏற்படும் குழப்பங்களுக்கும் எப்படித்தான் முடிச்சு // அன்னப் பட்சியா இருக்கணும்!

49ஓ-வை மாற்றினால் மட்டுமே பயன் உண்டு. ASIS, (நம்மை மீறி) போடப்பட்ட ஓட்டுகளிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அரசின் வாதத்துக்கு அர்த்தமில்லை, 49ஓ இல்லாவிட்டால், எல்லா வேட்பாளருக்கும் ஓட்டுப் போட்டு செல்லாமல் ஆக்கிவிட முடியாதா? “போடாங்க!” என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளுவது மட்டுமே 49ஓவில் முடிகிறது.

அதுனால மக்கள் தான் சூதானமா இருந்துக்கணும் (அந்தப் பொண்ணு உதாரணம் சூப்பர்). “உங்கள்ல ரெண்டு பேரைப் பிடிச்சிருக்கு, யாரு நல்லா வேலை செஞ்சு சம்பாரிக்கிறீங்களோ அவிங்க தான்!” என்று அரசியல்வாதிகளை வேலை வாங்க சாதாரணர்களுக்குத் தெரியவில்லையோ!

ஊர்சுற்றி said...

எல்லாருக்கும் எப்படிங்க போடமுடியும்?! மின்னணு ஓட்டுப்பதிவில் ஒருவருக்கு மட்டுமே வாக்களிக்க முடியும்.

49 ஓ வை பயன் படுத்தி ஏதாவது ஒரு தொகுதியிலாவது தேர்தல் செல்லாததாக மாறினால், அப்போவாவது நம்மூர் அரசியலில் பணத்திற்கு இல்லாமல் குணத்திற்கு மதிப்பு கூடாதா?

மணிகண்டன் said...

என்ன ஒரு உதாரணம் !

நம்ப ஊர்ல ஏற்கனவே எல்லாத்துக்கும் அரசியல்வாதிய குறை சொல்லியே பழக்கபட்டுட்டோம். 49 O வோட்டு எந்திரத்துல வச்சா ஜாலியா போய் குத்திட்டு வருவாங்க.

49 O வுக்கு நான் எதிரி இல்ல. ஆனா அதோட வழிமுறை ரொம்ப எளிதா இருக்க கூடாது.

49 ஒ அதிக ஓட்டுக்கள் அதிக வாக்குக்கள் பெற்றா தேர்தல் செல்லாதுன்னு அறிவிக்க முடியுமா ? அறிவிச்சா தோற்கும் சூழ்நிலைல உள்ள கட்சிகள் சேர்ந்துக்கிட்டு 49 O உபயோகப்படுத்த சொல்லுவாங்க. ஒவ்வொரு தொகுதியிலும் யாராலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலைக்கு கட்சிகளே உங்களை தள்ளுவாங்க. அப்ப என்ன பண்ணுவீங்க ? காபந்து சர்க்கார் வச்சி எவ்வளவு நாள் ஓட்டுவீங்க ?

49 ஒ அதிக வாக்கு பெற்று இருந்தாலும் அடுத்து வந்த வாக்காளருக்கு தான் பதவி என்று கொண்டு வர முடியுமா ? அப்படி கொண்டுவந்தா ஒரு பெயரளவுல தான் அதற்குரிய பாதிப்பு இருக்கும். ஆனாலும் இது முதல் ஆப்ஷன விட சிறந்ததே.

வேலை இல்லாம இருக்கும் போது உங்களுக்கு நாலு கம்பெனில வேலை கிடைக்குது. ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு பிடிக்காத ஒரு சில அம்சங்கள் இருக்கு. இருந்தாலும் நீங்க ஏதாவது ஒண்ணு தேர்ந்து எடுப்பீங்க. ஞானிக்கு விகடன் ஒத்து வராட்டி குமுதம். குமுதம் ஒத்துவராட்டி கல்கி. அப்படியும் இல்லாட்டி ஒரு சிறு பத்திரிகை. ஆனா எழுதாம இருப்பாரா ?

மணிகண்டன் said...

49 O குறித்து ஒருசில புரிதல் இல்லாமையே எனது முந்தய பின்னூட்டம்.

ஆனாலும் இருப்பதில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் முறையே சரியானது என்பது என் கருத்து.

துளசி கோபால் said...

ஏம்ப்பா மணிகண்டன்,

Something is better than nothing
but
nothing is better than nonsense.

இது இங்கே சரியா இருக்காதோ?

அயோக்கியன்களிலே யாரு கொஞ்சம் சுமார்னு பார்த்து முடிவெடுக்கணுமோ?

புரியலையேப்பா.....

ஊர்சுற்றி said...

ஞாநி எழுதுவது இருக்கட்டும் மணிகண்டன்,

இருக்கிற கள்ளனில் நல்ல கள்ளனை தேர்வு செய்து வீட்டு காவலுக்கு வை என்கிறீர்கள். ஆனால் கள்ளனை காவலாளியாக்குகிற சூழ்நிலை எப்படி ஏற்பட்டது என்பதே எனது எண்ணம்.

என்னை பொறுத்தவரை இது (49 ஓ) தரமான வேட்பாளர்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு வழியாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

மணிகண்டன் said...

thulasi / oorsutri,

I suppose you both knew that there is no disqualification if 49 O gets the majority number of votes. That being the case, it is just a symbolic one. And symbolic gestures does not change anything. Evennow, the winner gets only 30% of the registered votes. And there is no real push from media / news organization or from anyone about the voters who have not exercised their power. And so going to the polling booth and voting for 49 O will not change any ! This is my opinion.

And i don't really believe that politicians are the cause for all the troubles.

If kalaignar is not able to solve the srilankan issue, Go for 49 O.

If kalaignar is not able to solve the malaysian tamil issue, go for 49 O.

If communist / congress govt is not able to solve the problems malayaleese face in middle east, go for 49 O.

If BJP / congress is not able to resolve the plights of muslims in palestine, Go for 49 O.

Without realizing the difficulties, people would only go beserk. And there won't be any bloody effort from our part to understand the problems.

So, i would say that we need to change the constitution and make sure that if someone wants to exercise 49 O, his votes are not anymore secret and he can go and inform the presiding officer. Atleast that means, he takes some responsibility in letting people know that he has voted for any party as he is not satisfied with them.

If you put it in the voting machine, everyone would use it as if it is a fun exercise !

மணிகண்டன் said...

**** Something is better than nothing
but
nothing is better than nonsense. ***

Fortunately 49 O does not give this option ! if mukunthan gets 3 votes and 49 O gets 997 votes out of 1000 votes registered, mukunthan is the winner. It is being hoped that this situation would give political parties to think before the next election.

மணிகண்டன் said...

நியூசிலாந்துல அதுக்குள்ளார விடிஞ்சிடுச்சா ?

துளசி கோபால் said...

முதல் காலை எனக்கே எனக்குத்தான் மணிகண்டன். டேட் லைனில் குந்தி இருக்கேன்:-)

நீங்க இந்தியாவில் இருந்தால்...... இரவு 11 மணிக்குப் படுக்கைக்குப்போனால் நான் ஏற்கெனவே இங்கே தூங்கி எழுந்த புத்துணர்ச்சியோட (???) ஆஜர்:-)

narsim said...

Good deep one

ஊர்சுற்றி said...

'ஏன் அந்த மூணு ஓட்டு மட்டும்தான் கிடைச்சுது?' -ன்னு ஒரு கேள்வி வரும் பாருங்க மணிகண்டன். அப்போ இன்னும் பல கேள்விகள் மக்களுக்கும் மீடியாவுக்கும் வரும். அப்போ ஒரு தெளிவு கிடைக்கும்.

அப்புறம், இந்த '49 ஓ' ஓட்டை ஒரு தடவை போட்டு பாருங்க - அதுல உள்ள சிக்கல் 'எவ்ளோ பெரிய (மாத்திரை) சிக்கல்' என்று புரியும். ஒரு தடவை அதுக்காக நான் பட்ட பாடு இருக்கே... டவுசர் கிழியாத குறைதான்....

உங்கள் வருகைக்கு நன்றி நர்சிம்.
நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே
இல்ல!

SUBBU said...

நல்லா இருக்கு

ஊர்சுற்றி said...

நன்றி SUBBU.