விகடன் வாசகர்களுக்கு நிச்சயம் நன்கு பரிச்சயம் ஆனவர் இந்த லூஸுப் பையன். இந்தப் பகுதியில் ஒரிஜினல் நபரின் எதாவது ஒரு முக்கியமான குணாதியசத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் வசனமோ அல்லது ஓவியத்திலோ( 'கண்ணா' ) கார்ட்டூனில் கொண்டுவந்துவிடுகிறார்கள். இப்படிச் செய்யும்போது 80 சதவீதம்வரை அந்த நபரை நகலெடுத்து விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சக பதிவர்கள் பலர் லூஸுப் பையனையே முதலில் வாசிக்கிறார்கள் என்றும் அறிகிறேன்.
வாராவாரம் அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று நீண்டு செல்லும் இந்த நக்கல் கதாப்பாத்திரங்களுக்கு 'லூஸுப் பையன்' கொடுக்கும் பெயர்கள் - வருங்காலத்தில் 'முனைவர்' பட்டம்' பெறுவதற்கான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படலாம். எனவே அந்த எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவும் நோக்கத்தில் இந்த லூஸுப் பையன் அகராதியைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளேன் (மவனே இனிமே யாராவது, ''உருப்படியா ஏதாவது பதிவு எழுதியிருக்கியா?''-ன்னு என் மீசை நிறைஞ்ச மூஞ்சைப் பார்த்து கேக்க முடியுமா?!).
லூஸுப் பையனின் அகராதி(கொஞ்சம் மட்டும் இங்கே):
கருணாநிதி - குருணாநிதி
ஜெயலலிதா - கோபலலிதா
விஜயகாந்த் - குஜயகாந்த்
ராமதாஸ் - சாபதாஸ்
ராஜபக் ஷே - கூஜபக் ஷே
ஒபாமா - கொபாமா
கமல் - குமல்
ரஜினி - கஜினி
விக்ரம் - கக்ரம்
சூர்யா - பூர்யா
தங்கர்பச்சான் - டிங்கர் பச்சான்
மணிரத்னம் - தனிரத்னம்
பேரரசு - ஊரரசு
ஐஸ்வர்யா - பொய்ஸ்வர்யா
குஷ்பு - டுஷ்பு
நயன்தாரா - லயன்தாரா
மானாட மயிலாட - பரியாட கரியாட
வைரமுத்து - பயறுமுத்து
வாலி - ஜாலி
இடுகையின் நீளம் கருதி சில மாதிரிகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக எல்லாப் பெயர்களும் வேண்டுவோர் இங்கே சொடுக்கவும்.
பிரபலங்கள் பலர் 'ஹிட்' தேடி அலையும்போது, ''எப்புடித்தான் யோசிப்பாய்களோ?!!!'' - என்ற வார்த்தைகள் கன கச்சிதமாய்ப் பொருந்தும் அளவுக்கு, லூஸுப் பையனோ எல்லா வாரமும் ஹிட் கொடுக்கிறார். நான் 'ஹாய் மதனில்' இருந்து இவருக்கு மாறி வெகுநாட்களாகி விட்டது.
லூஸுப் பையன் அகராதியில் உங்களுக்குப் பிடித்த 'பட்டப் பெயரையோ' அல்லது 'லூஸுப் பையன்' தொடர்பான எதேனும் நிகழ்வையோ பின்னூட்டத்தில் வஞ்சனையில்லாமல் இட்டுச்செல்லலாம்.
12 comments:
நீண்ட நெடு நாட்களாயிற்று விகடன் படித்து
நம்ம சாய்ஸ் மதன் தான்
ஆனாலும் இது இண்ட்ரஸ்ட்டிங்கா தெரியுதே!
(ம்ம்ம் ... அடுத்த ஆள மீட்டர் போட்டா மேட்டர் ஜோர் தான்)
என்ன ஆச்சு? விகடனில் சேரும் எண்ணம் உள்ளதா? Good பதிவு. ஊர்சுற்றிக்கு என்ன பெயர் வைக்கலாம்?
ஸ்ரீ....
நுரைமுருகன், பாகுல் பூந்தி என்னை கவர்ந்த பெயர்கள்!
பழகிரியும் சூப்பர்!
//ஸ்ரீ.... said...
என்ன ஆச்சு? விகடனில் சேரும் எண்ணம் உள்ளதா? Good பதிவு. ஊர்சுற்றிக்கு என்ன பெயர் வைக்கலாம்?
ஸ்ரீ....//
சுர் ஊற்றியா இருக்குமோ?
நல்லாருக்கு நண்பரே..........
இந்த வாரம் ரஃபி பெர்னார்ட் கோபலலிதாவை 'மேட்டம்' என்பார். ரசித்துச் சிரித்தேன்.
மச்சி சோக்கா எலுதுறியே நீ..
மயின்டுல வச்சிகிறேன்!
அப்பாலிகா கண்டுகறேன்..
இப்ப பாலோ பண்றேன்..
நட்புடன் ஜமால், ஸ்ரீ, வால்பையன்
வருகைக்கு நன்றி.
"ஷஃபி" உங்களில் ஒருவன்,
முனைவர்.இரா.குணசீலன்,
Indian,
அனைவருக்கும் நன்றி...
கலையரசன்,
ஹிஹிஹி... அதெல்லாம் கூடவே பொறந்தது..(கொஞ்சம் ஒவரா இருக்கோ?!)
பின்தொடர்வதற்கு நன்றி.
ரொம்ப நல்லாருக்கு
நல்வாழ்த்துகள்
நன்றி சீனா
Post a Comment