கடந்த வாரம் புதன் அன்று என் உடன்பிறந்த அக்காள் திருமணம் இனிதே நடந்தது. ஒரு பொறுப்புள்ள தம்பியாக திருமண காரியங்களை முன்நின்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. இருவீட்டாருக்கும் ஒத்துப்போனதாலும் பிடித்துப்போனதாலும் திருமணத்தை உடனடியாக நடத்துவது என்று முடிவு செய்து ஒரே வாரத்தில் நடத்த வேண்டியதாயிற்று.
மூன்று நாட்களில் அழைப்பிதழ்களைக் கொடுத்து, இரண்டு நாட்களில் சமையல் மற்றும் பிற பொருட்களை வாங்க அலைந்து, திருமணத்தன்று உறவினர்களை சமாளித்து.....இப்படி எல்லாம் ஒரே வாரத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த பின்னர்தான், நன்கு தெரிந்த சிலபேருக்கு தகவல் சொல்லாமல் அழைப்பிதழ் கொடுக்கத் தவறியது, சில காரியங்கள் முடிக்காமல் பாதியில் விட்டுப்போனது - இப்படி இன்னும் பல நினைவுக்கு வந்தன. நெருங்கிய நண்பர்களுக்கே திருமணத்திற்கு மறுநாள் புகைப்படங்களை ஒரு மின்னஞ்சலில் அனுப்பினேன். சில நண்பர்கள் விசயம் கேள்விப்பட்டு 'தொலைபேசி' திட்டித் தீர்த்தார்கள் பின் வாழ்த்தும் தெரிவித்தார்கள்.
இப்படி, வேலை காரணமாக கடந்த இருவாரமாக வலையுலகின் பக்கம் வர இயலவில்லை. எனது கூகிள் ரீடரில் 789 இடுகைகள் படிக்கப்படாமல் இருக்கின்றன. லக்கி 'அண்ணன்' அப்பாவான விசயம் கூட தாமதமாகத்தான் தெரியவந்தது. இப்போதுதான் மின்னஞ்சலில் வாழ்த்தினேன்.
வலையுலகின் காரசாரமான இடுகைகளைத் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும். நானும் இருக்கிறேன் என்று தெரியப்படுத்த எதையாவது உருப்படியாக எழுத வேண்டும். அவற்றையெல்லாம் உங்களை வாசிக்க வைக்க வேண்டும். இப்படியான எண்ணங்களோடு மறுபடியும் வலைக்கடலில் சங்கமிக்கிறேன்.
12 comments:
வாழ்த்துக்கள், திருமண தம்பதியருக்கும், பொறுப்பான சகோதரனாக கடமைகளை ஆற்றியதுக்கும், வலைகடலில் சங்கமிக்க து(டு)டிப்புடன் இருப்பதற்கும்:)!
சகோதரியின் திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள்....
தம்பதியினர் இருவரும்.... நற்ச் செல்வங்களோடு பல்லாண்டு வாழ்ந்திட என் இறை பிராத்தனைகள்......
" வாழ்க வளமுடன் ....
வாழிய பல்லாண்டு ...... "
அக்காவிற்கு திருமண வாழ்த்துக்கள்!
சகோதரிக்கு வாழ்த்துகள் ஊர்சுற்றி... அடுத்து நீங்கள்தானே :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ராமலக்ஷ்மி, லவ்டேல் மேடி உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
வால்பையா,
வாழ்த்துக்கு நன்றி..
உங்க தந்திரம் புரியுது!
என்னோட அக்காவை நீங்க அக்கான்னு சொல்லிட்டு உங்களை இன்னும் இளமையா காட்டலாம்னுதானே நினைக்கிறீங்க?!!! ஐ.... அஸ்கு புஸ்கு.
பைத்தியக்காரனுக்கு மனமார்ந்த நன்றிகள் - தெளிவாக வாழ்த்தியதற்காக.:)
சுந்தர் அவர்களின் கவிதையைப் பற்றி தாங்கள் எழுதிய இடுகையைப் படித்தேன்... திக்கினேன்... அங்கேயே நின்றுவிட்டேன். நேற்று வேறு எதையும் வாசிக்க முடியாமல் போனது. ஆமா... எப்படி இப்படியெல்லாம் எழுதுறீங்க?!!!
ஊரில் இல்லாததால் உடனே வாழ்த்த முடியவில்லை. மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்து நீங்கதான். தப்பிக்க முடியாது...:)
ஸ்ரீ....
நன்றி ஸ்ரீ.
:)
சும்மாவா சொன்னாங்க நம்ம பெருசுங்க, வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பன்னிப்பார்னு!! வாழ்த்துக்கள் தோழா.
ஆமா "ஷஃபி" அது உண்மைதான்.
சகோதரியின் திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள்....
Post a Comment