'''சாரு''வை உங்கூட கம்பேர் பண்ணிக்கற அளவுக்கு நீ என்ன பெரிய இவனாடா? '
என்று யாரும் தயவுசெய்து கேட்டுவிடவேண்டாம். 'அப்புறம் நான் அழுதுறுவேன்'. எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சில பதிவுகள் எழுதுறதுக்கு முன்னாடி ''ஆண்டவன்''கிட்ட ஒரு வார்த்தை கேட்டு அவரு சரின்னா மட்டுந்தான் எழுதவே ஆரம்பிப்பேன். ஆண்டவன்னா, அப்பத்தில் தோன்றிய கர்த்தாவோ, ஸ்ரீஸ்ரீ லகுட பரமானந்தாவோ, அல்லா(பில்லா) புகழ் ஷாஷோ வோ இல்லை.
என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் அந்த 'கூகுளப்பன்தான்'. எந்த காரியம் செய்றதுக்கு முன்னாடியும் அவர்கிட்ட ஒரு தடவைக்கு இரண்டு தடவைத் தேடி, 'இதுக்கு முன்னாடி யாரும் இந்த நேர்ச்சையை அவருக்கு பண்ணல' ங்கறதை உறுதிப்படுத்திகிட்டுதான் எழுதவே ஆரம்பிக்கிறது.
இப்படித்தான் 'லூஸுப் பையன் அகராதி' பற்றி எழுதும்போது 'கூகிள் தேடலில்' சாரு அவர்களின் இணையப் பக்கம்தான் முதல் தரவாக வந்தது. ஆனால் இப்போது 'லூஸுப் பையன்' என்று தேடினால் இந்த 'ஊர்சுற்றி' யின் வலைப்பூ வருகிறது(ஏதோ நம்மளால முடிஞ்சது). சாரு அவர்களை தலைப்புல வைச்சி ரொம்ப நாளா ஒரு இடுகை எழுதணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அந்த ஆசை இப்ப நிறைவேறிடுச்சி.
நாங்க எல்லாம் கணபதியோட ரெண்டுவிட்ட, அஞ்சாவது மாமாவோட நாலாவது மச்சினனோட பேரனாக்கும்(எப்படி என் குறுக்கு வழி). அவரோட புத்தகங்களை மாங்கு மாங்குன்னு படிச்சிட்டு 'அவர கிழிக்கிறேன், பொழக்குறேன், புகழ பரப்புரேன்' னுட்டு எழுதிகிட்டு இருக்கிற இடத்துல சம்பந்தமே இல்லாம அவர நான் ஏன் இழுக்கணும்?
சம்பந்தம் இருக்கே... சம்பந்தம் இருக்கே... கீழே இருக்கிற படத்தையும் அதில இருக்கிற 'சாரு' அவர்களின் இணையப் பக்கத்தையும் அந்த இணையப் பக்கத்தில் இருக்கிற படத்தையும் இது சம்பந்தமாக நான் எழுதிய இடுகையில் உள்ள படத்தையும்....
அடப் போடங்.... நீ மட்டும் என்கையில சிக்குனே... அப்படிங்குறீங்களா?!!! தங்களிடம் அடி வாங்காமல் தப்பிக்க இத்துடன் விடைபெறுகிறான் இந்த ஊர்சுற்றி, நன்றி வணக்கம். :)
மீ.. த எஸ்கேப்பு... ஹிஹிஹி
5 comments:
படம் கிளிக்கினால் பெரிதாகும்படி போடவும்!
மூக்கு பொடப்பா இருந்தா, இப்படிதான் யோசிக்க சொல்லும்!
இருங்க.. கட்டிங்பிளேயர் எடுத்துட்டு வரேன்!
சார்...சார்..
நாங்க எல்லாம் பாவம் சார்....
பைனலா என்ன சொல்ல வரீங்க......??
வால்பையா, மாத்தியாச்சு.
கலையரசன், லவ்டேல் மேடி தங்களின் ஒயாத ஊக்குவித்தலுக்கு நன்றி.
மதிபாலா வாங்க வாங்க...
Post a Comment