நான் சென்னைக்கு வந்த புதிதில், கத்திப்பாரா பாலம் கட்டும் பணிகள் சற்றே மந்தமாக நடந்துகொண்டிருந்தன. அப்பப்போ ஏதாவது வெள்ளை வேட்டி அந்த பாலம் பக்கமாக வந்து நின்று பேட்டி கொடுப்பதும் கைகாட்டுவதும் உண்டு(டி.ஆர்.பாலுதான் அதிக முறை என நினைக்கிறேன்). மின்னஞ்சல்களில் இந்தப் பாலத்தைப் பற்றி பலமுறை ஆச்சரியத் தகவல்கள் வந்திருக்கின்றன. 2007 மற்றும் 2008 தொடக்கத்தில் வேலைகள் சுணங்கி சுணங்கி நடந்தாலும் 2008 இறுதியில் அதிரடியாக வேலைகள் முடிக்கப்பட்டு பாலமும் திறக்கப்பட்டுவிட்டது. இதோ, பாலம் வேலை நடக்கும்போதும் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் 'கூகிள் மேப்' பிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு.
பாலம் கட்டப்படுவதற்கு முன்பு -1
பாலம் கட்டப்படுவதற்கு முன்பு -2
பாலம் கட்டப்பட்ட பின்பு -1
பாலம் கட்டப்பட்ட பின்பு -2
எனக்கு என்னவோ, கத்திப்பாரா என்றதும் அதன் பிரம்மாண்டம் நினைவுக்கு வராமல் அங்கு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தாரே அந்தச் சம்பவமும் அதற்குக் காரணமான பொறுப்பற்ற அதிகாரிகளும்தான் நினைவுக்கு வருகிறார்கள்.
செய்தி
// கத்திப்பாரா பாலத்தில் விபத்து
சென்னை அக்-29.(டிஎன்எஸ்) புதிதாக கட்டப்பட்டுள்ள கத்திப் பாரா மேம்பாலத்தில் அக்-27 அன்று ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வழி புரியாததால் எதிர் திசையில் வந்த அவர் இந்த விபத்தில் சிக்கினார்.//
சென்னை அக்-29.(டிஎன்எஸ்) புதிதாக கட்டப்பட்டுள்ள கத்திப் பாரா மேம்பாலத்தில் அக்-27 அன்று ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வழி புரியாததால் எதிர் திசையில் வந்த அவர் இந்த விபத்தில் சிக்கினார்.//
இதே மாதிரி பாலம் நம்மூர்களில் தெருவுக்கு ஒன்று இருப்பதாக நினைத்தார்களோ என்னவோ! அவசர அவசரமாக பாலத்தைத் திறக்க ஆர்வம் காட்டியவர்கள் அடிப்படையாக நிறுவியிருக்க வேண்டிய வழிகாட்டிகளை வைக்காமல் பாலத்தைத் திறந்துவைத்தார்கள். விளைவு ஒரு மரணம்.
படங்களை நன்றாக கவனித்தால் ஒன்று புரிகிறது. கூகிளின் படத்துல்லியம் மேலும் கூடியிருக்கிறது. ஓம் கூகிளாய நமஹ! கூகிளாண்டவரே போற்றி போற்றி! கூகிள் மேப்பே போற்றி போற்றி!
19 comments:
அழகான பகிர்வு
படங்களை சொன்னேன்.
படங்களை பார்த்தவுடன்
கூகில் நல்ல ஊர்சுற்றியாக இருக்குன்னு தெரியுது.
சும்மா சொல்ல கூடாது படம் நல்ல கிளாரிட்டி!!
நன்றி பாஸ்!!
உயிர் துறந்து கத்திபாராவை கட்ட செய்த அண்ணாருக்கு அஞ்சலிகள்!
படங்கள் சேகரித்து தகவல் தொகுப்புடன் தந்ததற்கு நன்றி!
ஊர்சுற்றி,
அருமையான பதிவும், செய்தியும். ஏன் அடிக்கடி எழுதுவதில்லை?
ஸ்ரீ...
இப்ப கத்திபாரா பாலத்துக்கு மேலே பைக் ஓட்டுறது சூப்பரா இருக்கு. இருந்தாலும் அதிகாரிகளின் அவசரத்தால் ஒரு உயிர் பறிபோனது வருத்தமான ஒன்றுதான்.
பழைய படங்களை எங்கிருந்து பெற்றீர்கள்
அடுக்கடுக்காய் ஆணிகள் புடுங்க வேண்டியிருந்ததால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. :(
நட்புடன் ஜமால், கலையரசன், வால்பையன், வெங்கிராஜா, ஸ்ரீ,உழவன்,
தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி.
ஸ்ரீ,
வைலைப்பளு கொஞ்சம் அதிகம், எனவே அடிக்கடி இந்தப் பக்கம் வர இயலுவதில்லை.
:(
புருனோ சார்,
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
அடுக்கடுக்காய் ஆணிகள் புடுங்க வேண்டியிருந்ததால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. :(
கூகிள் மேப்பை, எப்படியும் புதுப்பிப்பார்கள் என்று தெரியும் எனவே சற்று நாட்களுக்கு முன்பாகவே முதல் இரண்டு படங்களையும் சேமித்து வைத்துக்கொண்டேன்(மே1 - படங்களின் பெயர்களிலேயே உள்ளது).
பதிவிட்ட அன்று தற்செயலாய் கூகிள் மேப்பை மேய்ந்த போது அது புதுப்பிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே இதைப் பதிவாக்கிவிட்டேன். :)
தல உங்களுக்கு கன்னியா குமரியா ? எந்த ஊரு நானும் கன்னியா குமரி தான்
நல்ல பதிவு..
இதற்கு அடுத்து பாடி மேம்பால படங்கள் இருந்தால் போடலாம்.இம்மேம்பாலத்தின் மத்தியில் போய் திரும்ப வேண்டிய இடத்தை நிர்னயம் செய்து வண்டி ஓட்டுவது நம் ஓட்டுனர்களே உரித்தான் திறமையை பார்க்கலாம் ஆனால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு.
மேம்பாலங்கள் மற்றும் சாலை தடங்களை திறப்பதற்கு முன்பு சரியான வழி விபரங்களை வைக்கனும் - கொஞ்சம் படிக்கம் படி.
ஜெமினி மேம் பாலம் மூலம் ராயப்பேட்டையில் இருந்து வடபழனி போக இறங்கும் சாலையிலும் குழப்பம் ஏற்படுகிறது அதுவும் புதியவர்களுக்கு.
does anyone know how long it took them to build this intersection?
யே கத்தி'பார்ரா.....
ஒரு ரெண்டுவாரத்துக்கு முன்பு நாங்கள் வந்த விமானம் சரியாகக் கத்திப்பாரா பாலத்துக்கு மேல் கொஞ்சம் தாழ்வாகப் பறந்தபோது பார்த்தேன். ஆஹா.... ரொம்பவும் அழகா அட்டகாசமா இருந்துச்சு.
தீப்பெட்டி, வடுவூர் குமார், வெத்து வேட்டு, ஆகாயமனிதன்.., துளசி கோபால்,
அனைவருக்கும் நன்றிகள்.
வடுவூர் குமார்.... பாடி நம்ம ஏரியாவுல இல்லாததால அந்த படத்தை பதிவு பண்ணி வைக்கலியே!
வெத்துவேட்டு, உங்க கேள்விக்கு பதில் தெரியலியே!
Suresh Kumar,
கன்னியாகுமரி இல்லை... நெல்லை மாவட்டம். ஆனா கன்னியாகுமரிதான் பக்கம். :)
தமிலிஷ்ல குத்து குத்துனு குத்தினவங்களுக்கு நன்றி நன்றி... :)
Post a Comment