Saturday, June 13, 2009

மஞ்சள் வெயிலும் மொக்கை வில்லனும் திரிலும்! - விமர்சனம்



சந்தியாவும் பிரசன்னாவும் கல்லூரியில் ஒன்றாகப் பயிலுகிறார்கள், நன்றாகப் பழகுகிறார்கள், பேசுகிறார்கள், பாட்டுக்கு நடனமாடுகிறார்கள். நல்ல படம் பார்க்கிறோமோ என்ற உணர்வைச் சிறிது நேரம் நமக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள். இந்நிலையில், சந்தியாவின் அக்கா திருமணத்திற்காக நண்பர்கள் படையோடு சந்தியா வீட்டிற்கு வருகிறார் பிரசன்னா. வழியில் பிரசன்னாவிற்கும் சந்தியாவின் அக்காவுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவருக்கும் ''ஆகாது'' என்று ஆகிறது.

வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையோ, அக்காவை விட்டுவிட்டு சந்தியாவின் மீது பித்து பிடிக்க, சில சோப்புடப்பா ஐடியாக்களைக் கையாண்டு தங்கச்சியைக் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார். இதிலிருந்து தப்பி சந்தியா, பிரசன்னாவோடு சென்னைக்கு வருகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், இருவரையும் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்த அவர்கள் இருவருமோ 'நாங்கள் இருவரும் சின்ன வயசில இருந்தே நண்பர்கள், இப்போவும் நண்பர்கள்தான்' என்று கதைக்கு ஒரு பெரிய 'டர்னிங் பாயின்ட்!' டைத் தூக்கி 'பொத்' தென்று போடுகிறார்கள் அல்லது வரைகிறார்கள். பாஸ்கர் வீட்டிலேயே தங்கி, சந்தியாவின் காதலனைத் தேடுகிறார் பிரசன்னா. சந்தியாவைத் தேடிச் சென்னைக்கு வருகிறார் வில்லன்.

பிரசன்னா, தன் தோழியின் காதலனைத் தேடி அவனைச் சேர்த்து வைத்தாரா அல்லது வில்லன்கள் கையில் சிக்கினாரா?. நட்புக்கு பதில் ''மரியாதை''யாக சந்தியா என்ன செய்தார்? என்று 'கிளிமாக்ஸ்' ஐ முடிக்கிறார் இயக்குனர்.

விமர்சனம்

ஏம்பா இயக்குனர்,

*ஏன், சென்னையில தங்க இடம் வேணும்னா ஸ்கூல்ல கூட படிச்ச பையன், தூரத்துச் சொந்தம்னு யாருமே கிடைக்கலியா? ஒரு புரொஃபசர ஒண்ணும் இல்லாத மேட்டருக்கு வேலையை விடவச்சிட்டு, உங்க படத்தோட இரண்டாம் பாதிக்காக ஆட்டோ ஒட்ட வச்சிட்டியேய்யா?

*நல்ல வெயிட்டான வில்லன்தான் படத்துக்கு முக்கியம்ங்கிறத தப்பா புரிஞ்சுகிட்டியேய்யா! வெயிட்டுன்னா நடிப்புல இருக்கணும். படத்துக்கு போட்ட 37 மார்க்குல இந்த ஆளுக்காகவே 20அ மைனஸ் பண்ணணும்யா.

*எங்கேயோ தொலைஞ்சவனை சென்னையிலையே ஸ்பெஷலா வந்து தேடுறீங்களே? வெளிச்சம் அதிகமா இருக்கிற இடத்தில போயி தேடுவோம்ங்கிற மாதிரி கூட்டம் அதிகமா இருக்கிற இடமா தேடுவோம்னுட்டு கிளம்பிட்டீங்களோ?

*சரி, பாதிக்கு அப்புறமாவது கிளைமேக்ஸ்லயாவது கொஞ்சம் ஆறுதலான முடிவா இருக்கும்னு பார்த்தா, நட்பு - காதல்னு இரண்டை பத்தியும் குழப்பி ஒரு மொக்கையான கிளைமேக்ஸ்! ஏன்???

*நீங்கள் 'டாக்டர்' விஐய்யோட தெய்வத் தந்தை 'எஸ்.ஏ.சந்திரசேகர்' அவர்களின் திரைப்படங்களை 'சிடீ' தேயத் தேயப் பார்த்திருக்கிறீர்களோ?!!

*'த்ரில்' இதை ஒழுங்கா வாயில வர்ற மாதிரி வில்லனுக்குச் சொல்லிக்குடுக்கக் கூடாதா? (வலையுலக லேட்டஸ்ட் ஸ்டையிலில் - அவர் வாயில வசம்ப வச்சித் தேய்த்திருக்கக் கூடாதா?)ஆரம்பக் காட்சிகளில் அவர் சொல்லும் 'திரில்ல்' எனக்கு 'உரல்' மாதிரியே காதில் விழுந்தது.

பிரசன்னா,

நீங்க பார்த்து பார்த்து நல்ல படமா நடிப்பீங்கன்னு வந்தா, இப்படி மோசம் பண்ணிட்டீங்களே? அஞ்சாதே மாதிரி ஒரு கேரக்டர்ல நடிச்ச நீங்க இப்படி ஒரு மொக்கை படத்துல.... சரி விடுங்க, படத்துல நீங்களும் நிலழ்கள் ரவி சாரும்தான் நடிச்சிருக்கீங்க. அதனால இத்தோட விடுறேன்.

அப்புறம் 'மஞ்சள் வெயில்' னா இன்னா? ன்னு கேட்கிறவங்களுக்கு...... படத்துல கடைசில, அதாம்பா கிளைமேக்ஸ்ல, 'சந்தியா' காதல் படம் மாதிரி அழும், அப்போ கவனிச்சீங்கன்னா படத்தோட நிறம் 'இளம் மஞ்சளா' மாறிடும் - அதனாலதான் 'மஞ்சள் வெயில்'. ஹி ஹி ஹி.


இந்த படத்துக்கு அரை டஜன் வெளியீட்டு தேதிகளைச் சொல்லி, இப்போதான் ரிலீஸ் பண்ணியிருக்காங்களாம். அடங்கொய்யால....

12 comments:

பாலா said...

தல.. இப்பல்லாம்... தமிழ் படம் நான் பார்க்கறதே நிறுத்திட்டேன். நீங்களும், கேபிளும்... எப்படிதான் பார்த்துட்டு... அதையும் தாங்கிகிட்டு.. எழுதறீங்களோ...!

ஸ்ரீ.... said...

நல்ல வேளை. பார்க்கலாம்னு நெனச்சேன். காசு மிச்சம். தரமான விமர்சனம். ஏன் அதிகமா எழுதறதில்ல ?

ஸ்ரீ....

நாடோடி இலக்கியன் said...

செம்ம நக்கல் நிறைந்த விமர்சனம்....கலக்கல்.....காசு மிச்சம்...

கலையரசன் said...

செம கமெடியா எழுதுறீங்களே...
நல்லாயிருக்கு... நிறைய எழுதுங்கள்!!

ஊர்சுற்றி said...

பாலா......

வாங்க வாங்க.
இங்கே நண்பர்களோடு செல்லத்தக்க ஒரு சில பொழுதுபோக்குகளில் நம்மூர் திரைப்படங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதைத் தவிர்க்க இயலாது... அதுவும் சென்னையில் இருந்துகொண்டு....

ஆனாலும் என்னைப் பொறுத்தவரை 'முதல் ஷோ'-லாம் தெரியாமப் போயி பார்க்குறதுதான். :)))

ஊர்சுற்றி said...

ஸ்ரீ,

நன்றி. கொஞ்சம் வேலை அதிகம். சனி-ஞாயிறுகளில்தான் முடிகிறது. இனி முயற்சிக்கிறேன். :)

ஊர்சுற்றி said...

நாடோடி இலக்கியன் அவர்களே,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
நான் எழுதுறதுல நக்கல் இருக்கா?!!!

ஊர்சுற்றி said...

கலையரசன்,

நன்றி...நன்றி.

நாடோடி இலக்கியன் said...

//நான் எழுதுறதுல நக்கல் இருக்கா?!!!//

பார்ரா திரும்பவும் நீங்க......

:)

வால்பையன் said...

விமர்சனமே அப்படினா படம் எப்படியிருக்கும்!

Athisha said...

முடியல..! ;-)))))))))))

ஊர்சுற்றி said...

வால்பையனுக்கும்,

திடீர் விஜயம் செய்த அதிஷாவுக்கும்

நன்றிகள் பல...