Monday, November 30, 2009

லவ்டேல் மேடி திருமணமும் மெக்கா விஜயமும்

பின் நவீனத்துவத்துவமோ (வால்பையன் சொல்வதுபோல்) பின்மண்டைத்துவமோ(!) அதன் ஒரு சிங்கம் திருமணக் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட வரலாறு...

காலை 6:00 மணி 01 வினாடி:
மண்டப வாசலில் நின்றுகொண்டு வால்பையனுக்கு ஃபோன்.
'நீங்க எப்போ வர்றீங்க?'.
'நீங்க எங்க இருக்கீங்க?' அவர்.
'நான் மண்டபத்திலதான் இருக்கேன்'.
'அப்படியா! நாங்க அங்க வர்றதுக்கு இன்னும் ஒருமணி நேரம் ஆகிடுமே!'.

என்ன பண்றது. கையில் கேமரா - பொழுது போகணுமே. புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன். சில பெரியவர்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதமாக அங்கங்க உலவ ஆரம்பிச்சாங்க. பழம், தேங்காய், அரிசி, அச்சுவெல்லம் இப்படி என்னெல்லாமோ திருமண மேடைக்கு வர ஆரம்பிச்சுது.

காலை 6:20 மணி:
பெரியவர் ஒருவர்(தலைப்பாகையுடன்) வந்து மணமேடையில இருந்த பொருட்களை வைச்சி என்னமோ பண்ணினாரு (குடும்பத்தில மூத்தவர்னு நினைச்சேன்). சர்தான், இனி ஐயர் வந்து மந்திரமெல்லாம் சொல்லி... மணி 8க்குத்தான் தாலிய கட்டுவாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். திடீர்னு பார்த்தா ஒரு தட்டுல அரிசிய எடுத்துட்டுப் போயி எல்லார்கிட்டேயும் ஒரு சின்னப்பொண்ணு குடுக்க ஆரம்பிச்சிது. 3 நிமிஷம்தான் இருக்கும். சட்டுன்னு தாலிய எடுத்து நம்ம 'மாதேஷ' (லவ்டேல் மேடி) கிட்ட அந்த பெரியவரு குடுத்தாரு. அவரும் உடனே கட்ட ஆரம்பிச்சிட்டாரு. நான் ஒடிப்போயி போட்டோ பிடிச்சிகிட்டேன்.

அடுத்து இன்னொரு பெரியவர் வெற்றிலைல கொஞ்சம் மஞ்சள்ல தோய்த்த அரிசியை எடுத்துக்கிட்டாரு. மாப்பிள்ளையையும் பொண்ணோட சகோதரனையும் அரிசி இருந்த ஒரு தட்டில கையை ஒண்ணா சேர்த்து வைக்கச் சொன்னாரு. நிறைய வாழ்த்தோ, வேண்டுதலோ தொடர்ந்து சொல்லிகிட்டே கொஞ்சம் கொஞ்சமா அரிசியை அவங்க கைகளில் தூவினாரு.

அப்புறம் முதல்ல வந்த அந்த பெரியவர் வந்து, பொண்ணு மாப்பிள்ளை கையில வெற்றிலையைக் கொடுத்து அவரும் வெற்றிலை, அரிசி, வெல்லம் இதெல்லாம் ஒண்ணு ஒண்ணா எடுத்து அப்படியே 'தீபாராதனை' மாதிரி சுத்தினாரு.

காலை 6:45 மணி:
இந்த சடங்கெல்லாம் வெறும் 25 நிமிஷங்கள்தான். அப்புறம் பொண்ணு மாப்பிள்ளை மேடையில நிற்க, வாழ்த்த வந்தவங்க வரிசையில நின்னு வாழ்த்தும் பரிசும் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதேநேரம், முதல்ல சொன்ன அந்த தலைப்பாகை அணிந்த பெரியவர், மேடைக்குப் பக்கத்தில சேர் போட்டு உட்கார்ந்தார். அவர சுத்தி வீட்டுப் பெரியவங்க உட்கார்ந்தாங்க. அங்கேயிருந்து இங்கேயிருந்துண்ணு பணம் பெரியவர் கையில வந்தது. அவர் கல்யாண வேலை பார்த்துட்டு இருந்த எல்லோரையும் கூப்பிட்டு அவங்க கையில கொஞ்சம் பணத்தை பிரிச்சிக் கொடுத்தாரு (இந்த பணத்துக்கு எதோ பேரு சொன்னாங்க மறந்துட்டேன் - அது கூலி இல்லையாம்).

இத எல்லாத்தையும் முன்ன நின்னு நடத்தின பெரியவரை 'அருமைக்காரர்'னு சொல்லுவாங்களாம் இல்ல அரும்புக்காரர் னு சொல்லுவாங்களாம் (திருத்திய வால்பையன் அண்ணனுக்கு நன்றி). அந்த சாதி சனத்தில நடக்கிற எல்லா திருமணத்தையும் இவர்தான் நடத்தி வைப்பாராம்.

காலை 7:05 மணி:
திரும்பவும் வால் அலைபேசிக்கு அழைப்பு
'நீங்க எப்போ வர்றீங்க?'.
'இதோ வந்துட்டே இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவோம்'.

காலை 8:35 மணி:
கிட்டத்தட்ட எல்லாரும் வாழ்த்திட்டுப் போனபோதுதான். வால் வந்து சேர்ந்தாரு. 'நம்ம மக்கள் இங்க இருக்காங்களே!' ன்னாரு. அடடா! தெரியாமப் போச்சே. தனியால்ல உட்கார்ந்திருந்தேன். அங்க போயி பார்த்தா.....
இத்தன பேரு வந்திருக்காங்க.

இவங்களைத் தவிர எழுத்தாளர் வா.மு.கோ.மு. வந்திருந்தாங்க, அப்புறம்....
முழு லிஸ்ட்டுக்கு வால்பையனின் இந்த இடுகைக்கு வாங்க.

எனக்கு வாலைத் தவிர வேற யாரையுமே தெரியாதா - அதுதான் பிரச்சினை. இவங்கள்ல ஒருசிலர் அங்க இருந்தது தெரியாம தனியா, கையில கேமராவோட... ஆனா இதுல ஒரு நல்ல விசயம் என்னான்னா, அங்க இருந்த நம்ம பதிவர்கள் அப்போதைக்கு எனக்குத் தெரியாததனால ரொம்ப ஃபரீயா சைட் அடிக்க முடிஞ்சுது :).

திருமணம் நடந்தது ஈரோட்டில்.

திருமணம் பற்றியும் பதிவர்கள் சந்திப்புப் பற்றியும் இன்னொரு இடுகை இடலாம் என இருக்கிறேன். இந்த இடுகை பிடித்திருந்தால் உங்க ஒட்டுகளைக் குத்திட்டுப் போங்க. மேடிக்கு உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிட்டுப் போங்க.

11 comments:

க.பாலாசி said...

கல்யாண மண்டபத்துல இவ்வளவு விசயங்களை கவனிச்சீங்களா? ஆச்சர்யமா இருக்கு....இன்னும் நிறைய பதிவர்கள் இருந்தாங்க. (எனக்கும் பெயர் தெரியல)

அப்துல்மாலிக் said...

HAPPY MARRIED LIFE MEDI

Kumky said...

சைட் அடிக்க ஆறு மணிக்கே வந்ததுமில்லாம.....
கேமிரால என்னன்ன ஓய் படம் பிடிச்சீரு..?

வால்பையன் said...

தயவுசெய்து முழுதாக எழுதவும்!

வால்பையன் said...

அது அருமைகாரர் இல்ல!

அரும்புக்காரர்!

அன்புடன் மலிக்கா said...

அதுசரி மண்டப்பத்துல இவ்வளவும் நடக்குதா?

http://niroodai.blogspot.com

ஊர்சுற்றி said...

பின்னூட்டமிட்டவர்களுக்கும் தமிழிஷில் குத்தினவங்களுக்கும் எல்லோருக்கும் நன்றி.

வால்பையன் அண்ணே, அங்க வேலைசெஞ்சிகிட்டு இருந்த ஒருத்தர்கிட்ட விசாரிச்சேன். அவர் அப்படித்தான் சொன்னார். மாத்திடுறனேன். :)

cheena (சீனா) said...

ரொம்ப லேட்டா வந்துருக்கேன் இங்க - ஆமா இன்னொரு இடுகை இடறதாச் சொல்லி இருக்கீங்களே = எப்ப அது - அதௌக்கு நேரத்துல வந்து பதிலு போடறேன்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ஊர்சுற்றி said...

அடுத்த வாரத்தில் சீனா அவர்களே!

RAMYA said...

அட நாங்க அங்கே இருக்கும்போதே சைட் அடிச்சீங்க நாங்க அதே பார்க்கலையே :)

ஊர்சுற்றி said...

ரம்யா அக்கா,
தம்பிகிட்ட இதுமாதிரி ஆயிரம் திறமை இருக்கு. :)