'பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடந்தி நிறைய பேரை பணயக்கைதிகளாகச் சிறைபிடித்து வைத்துள்ளார்களாமே?' எல்லாம் நடந்து முடிந்தபின்னர் இப்படிக்கேட்க வைத்தது 'நிஷா' என்ற அழகுப்பெயருடைய புயல். மும்பையில் நடந்த அந்த சம்பவத்தின் வீரியம் தெரியாதவண்ணம் சென்னை தண்ணீரில் மூழ்கக் காரணமாக இருந்தது. நான்கு நாட்கள் பெய்த தொடர் மழை, கடந்த வருடம் இதேநாளில் ஓய்ந்திருந்தது. மும்பை தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தி நிறைய இடுகைகள் பார்த்தாகிவிட்டது, நம்மூர் நிஷாவிற்காக இந்த இடுகை.
கடந்த வருடம் இதேநாள் காலை - தெருவில் தண்ணீரில் குழந்தைகள் விளையாடும் சத்தத்தில்தான் எழுந்தேன். முந்தினநாள் கணுக்கால் வரையிருந்த தண்ணீர், காலையில் முக்கால் அடியைத் தாண்டிவிட்டது. அலுவலகத்திற்குச் செல்லமுடியாதவாறு வழியில் போக்குவரத்துத் துண்டிப்பு. எல்லா இடத்திலும் பரபரப்பு. தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன்செய்து விசாரிப்பு செய்ததில் சில மொபைல் நெட்வொர்க்குகள் தெவிங்கி(விழிபிதுங்கி) விட்டன. பலரை மீட்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் வரவேண்டியதாகிவிட்டது.
ஒருவழியாக அலுவலகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தெரிந்ததும்,
கையில் கேமராவுடன் வெளியே கிளம்பிவிட்டேன். அவற்றிலிருந்து ஒன்று இங்கே.
அன்று எடுத்த புகைப்படங்களை வைத்து ஒரு பதிவிட்டேன். அது இங்கே.
யோகி:
ஏற்கெனவே பல படங்களில் பார்த்த விசயங்கள் நிறைய. ரவுடி ஹீரோ -
போதை வஸ்துக்கள்- புகை மண்டலங்கள் - திருட்டு - தற்செயலாக ஒரு
குழந்தை - ஹீரோவுக்கு பழைய நினைவுகள் - ஹீரோ மனம் மாறுதல் - ரவுடி
& போலீஸ் சண்டை(!) - பணம் - க்ளைமாக்ஸ் சண்டை - படம் நிறைவு.
யதார்த்த சினிமா எப்போதும் நெகடிவ் கிளைமாக்ஸ்லதான் இருக்கணுமா?!
'இது அப்படி இல்ல - மகிழ்ச்சியான முடிவாக இருக்கும்' என்று நினைத்து
விதவிதமான மகிழ்ச்சியான முடிவுகளைக் கற்பனை செய்து ஏமாந்தேன்.
ஆனால், இந்த முடிவு மிகவும் வித்தியாசமானதாகவும் இன்னும்
யதார்த்தமானதாகவும் இருக்கிறது.
படத்தில் நம்மை ஒன்ற வைப்பது குழந்தைக்கும் நாயகனுக்கும்
நாயகிக்குமான காட்சிகள். நன்றாக படமாக்கியிருக்கிறார்கள். இந்த
இடங்களில் ஒளிப்பதிவாளர்,இயக்குனர் எல்லோருக்கும் சபாஷ். மற்றபடி
10ஓடு 11ஆக ஓடும் என நினைக்கிறேன்(!).
யோகியும் காப்பியடித்தது என்பதை உண்மைத்தமிழன் அவர்களின்
இந்த இடுகையில் தெரிந்துகொண்டேன்.
6 comments:
நிசாவுக்கான நினைவஞ்சலியும், யோகியின் விமர்சனமும் சரியான பார்வையில் இருக்கிறது நண்பரே... (ஊருசுத்தி ஒருவழியா போய்ட்டீங்க)
அட.. அங்கயும்.. இப்பல்லாம்... பேரு வைக்க ஆரம்பிச்சிடாங்களா???
ஆனா.. என்ன முறையில் வைக்கறாங்க தல??
ஹாலிபாலா - எல்லாம் பொண்ணுங்க பேர்தான்.:)
என்ன முறையில வைக்கிறாங்கன்னு தெரியலியே...!
http://www.metoffice.gov.uk/weather/tropicalcyclone/names.html
இங்கே இருக்கிற தகவல்கள்... புரியல!
யோகி வேலைக்காவது :) சேம் ப்ளட் :(
கணேஷ் என்ன பண்றது - யதார்த்தம் ஓவர்டோஸ் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்!
Post a Comment