தண்ணீர் குடிக்க வேண்டுமாம், அடிவயிறு குரலெடுத்துக் கூவுகிறது
தடதடதடவென ஒலியுடன் சேர்ந்து மினுமினுக்கிறது
தெருவெல்லாம் வெள்ளம், கவனிக்க முடியாமல் கண்களிலும்
தழும்புகிறது
அமைதியைக் கிழித்து வெடிக்கும் தொலைபேசி அழைப்புகள்
எப்போது வீடு திரும்புவேன் எனக்கேட்கும் தாய்.
திரையிட்டு மறைக்கிறது, மறுநாளுக்கான அலுவல்கள்
மழையை சிறைபிடிக்க வைத்திருந்த புகைப்படக் கருவி
மறைந்தே இருக்கிறது என் கால்சட்டைப் பைக்குள்!
நான்கு சதுர அடிகளுக்குள் முழு நாளே அடங்கிவிடுகிறது!
கேட்டால்,
ஆணிபிடுங்குதல் - நகைச்சுவையோடு சொல்லிவிடலாம்!
புகைப்படம்: நண்பன் 'பாலா' விடமிருந்து balasailendran@gmail.com.
2 comments:
மடக்கி மடக்கிப் போட்டு இருந்தா கவிதையாக்கி இருக்கலாம்.. :-)
ஐயோ ஐயோ,
தமிழ் பிரியன், கவிதைன்னு லேபில்-லாம் கொடுத்திருக்கேங்க. கொஞ்சம் பார்த்துப் (மடக்கிப்) போட்டுக் குடுங்க! :)
Post a Comment