Sunday, November 1, 2009

சிறு இடைவேளைக்குப் பிறகு

அவ்வப்போது சிறிய இடைவெளி விடுவதுதான் என்றாலும் என்னைப் பொறுத்தவரை கடந்தமாத இடைவெளி, சற்று அனுபவம் நிறைந்தது. எழுதுவது என்பது 'பசி', 'தாகம்' மாதிரி என்பார் வைரமுத்து (சிகரங்களை நோக்கி புத்தகத்தில்). நம்மில் அதிகம்பேருக்குப் பரிட்சயமான நிலாரசிகன் - ''எழுத்து மூளையில் தோன்றி, கையில் வரும்போதே எழுதிடணும்ங்க'' என்றார் (செப்டெம்பர் மாத மழையோடு கூடிய பதிவர் சந்திப்பில்). அந்தமாதிரி பசியோ தாகமோ எதுவும் தோணவில்லையா அல்லது வேலையிலோ குழப்பத்திலோ என்னை நானே மூழ்கவிட்டு விட்டேனா என்றும் தெரியவில்லை. வலையில் எழுதுவது என்பதையும் தாண்டி வழக்கமாக நான் செய்துவந்த உருப்படியான ஒருசில விசயங்களும் மிஸ்ஸிங். எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டுபிடித்து, அதைச் சரிசெய்துவிட்டு இப்போது 'மனதில் புத்துணர்ச்சியோடு மீண்டும் (மென்டலி ரிஃப்ரெஷ்ட்)'.

இந்த நேரத்தில் என் மௌனத்தைப் புரிந்துகொண்ட என் நண்பர்களுக்கு என் நன்றிகள். அவ்வப்போது ட்விட்டியது அங்கு கற்றுக்கொண்ட சில விசயங்கள் -மற்றபடி புதிதாக எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பது, பல நாட்களைத் தொலைத்துவிட்ட உணர்வைக் கொடுக்கிறது.

இந்த நேரத்திலும் நான் செய்த உருப்படியான சில விசயங்கள்,

வைரமுத்து அவர்கள் எழுதிய 'சிகரங்களை நோக்கி' என்ற கவிதை நடையிலான கதையைப் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்துவிட்டது வைரமுத்துவின் வார்த்தைப் பிரயோகம். ஒவ்வொரு பொருட்களையும் வர்ணிக்கும் வார்த்தைகளும் விவேகமான விவாதங்களும் நிறைந்தது. படித்து ரசிக்க ஒரு இனிமையான புத்தகம். ஒரே நாளில் மூன்று முறை படித்து இன்புற்றேன். சில பக்கங்கள் எத்தனை முறை வாசித்தாலும் சலிக்கவில்லை.

வானத்தில் வியாழன் மற்றும் சில கோள்களின் இடங்கள்,
நிலவைப் பொறுத்து அவற்றின் தூரம் இவற்றை
சிலநாட்களுக்குக் கவனித்தேன். உதவிய சுட்டி இங்கே.
ஆர்வமூட்டியது, கலிலியோ வியாழனின் நான்கு
துணைக்கோள்களைக் கண்டுபிடித்த 400-ம் ஆண்டு
கொண்டாட்ட நிகழ்வுகள். - "கலிலீயன் இரவுகள்" என்ற
இந்த வானியல் கொண்டாட்டத்தில் இந்தியாவில்
நடந்த நிகழ்வுகளுக்கான சுட்டி இங்கே.

இப்போதைக்கு முதல் வேலை,
படிக்காமல் கூகிள் ரீடரில் தேங்கிக்கிடக்கும் இடுகைகளைப்
படித்து பின்னூட்டமிடவேண்டும். :)

11 comments :

நாடோடி இலக்கியன் said...

’சிகரங்களை நோக்கி’ படிக்க வேண்டும்.

பின்னோக்கி said...

ஆஹா வானவியலில் ஆர்வமுடையவரை பார்ப்பதில் (படிப்பதில்) மிகவும் மகிழ்ச்சி.
starcalc என்ற இலவச மென்பொருள் வானத்தை பார்க்க உதவும். நிறுவி உபயோகித்து பாருங்கள்.
அப்புறம் என்னோட இந்த பதிவையும் படிங்க :)

http://pinnokki.blogspot.com/2009/08/blog-post_22.html

Jana said...

அடடா வாருங்கள் நண்பரே..
பல தடவைகள் தங்கள் தளத்திற்கு ஆவலுடன் வந்து உங்களை தேடியவர்களில் நானும் ஒருவன். "சிகரங்களைத்தேடி" சிகரங்களை தேடி நானும் செல்லவைத்துவிட்டீர்கள்.
கண்டிப்பாக வாசித்துவிடுகின்றேன்..

கடைக்குட்டி said...

அட நானும் திருப்மி வந்து இருக்கேங்க.. ஆனா 4 மாசம் கழிச்சு...

அட என்னவோ.. நீங்க கலக்குங்க தொடர்ந்து.. :-)

நிலாரசிகன் said...

கவிதை வாசிக்க ஆரம்பித்த நாட்களில் வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி புத்தகம்தான் என் நண்பர்கள் அனைவருக்கும் நான் பரிசாக தந்தது.

திருஞானம்,ஓவியா - எப்படி மறக்க முடியும்?

பூட்டை பற்றிக்கூட சிந்திக்கமுடியுமா என்று என்னை வியப்பில் ஆழ்த்திய கவிஞர் வைரமுத்து.

(பூட்டு - மனிதனின் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் துவங்கியது இங்கிருந்துதான்)

இடைவெளிவிட்டு இணையவெளிக்குள் நுழைந்திருக்கிறீர்கள் வருக தமிழ் தருக :)

செந்தழல் ரவி said...

வெல்கம் பேக்

ஊர்சுற்றி said...

நன்றி நாடோடி இலக்கியன்.

பின்னோக்கி நீங்களும் இப்படியான ஆர்வமுள்ளவரா? மகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி நண்பரே Jana.

கடைக்குட்டி தொடர்ந்து எழுத உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊர்சுற்றி said...

நன்றி நிலாரசிகன். நான் இந்த புத்தகத்தின் வார்த்தைகளிலும் வாக்கியங்களிலும் சொக்கிப்போய் கிடக்கிறேன்.

நீங்கள் கூறியது இந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு பருக்கை.

ரவியண்ணே நன்றி நன்றி.

arulmozhi said...

பல ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள் தெரியாது தத்தளிக்கும் வேளையில், ஆங்கிலம் கலந்து தமிழ் எழுதுவதை தவிர்க்கலாமே!! "ட்விட்டியது"..போன்ற வார்த்தைகள்,பின்னாளில் அங்கீகரீக்கப்பட்ட தமிழ் வார்த்தைகள் ஆகிவிடுமோ என்று சிறு அச்சம் நெஞ்சைத் தொடுகிறது..மேலும் தங்கள் படைப்புகளில்,நற்றமிழ் விளையாடுவது தெரிந்தும்,தங்கள் கைகளே இது போன்ற தமிழ் மாற்றங்களை ஊக்கப்படுத்துவது சிறிது வருத்தம் அளிக்கிறது.

arulmozhi said...

பல ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள் தெரியாது தத்தளிக்கும் வேளையில், ஆங்கிலம் கலந்து தமிழ் எழுதுவதை தவிர்க்கலாமே!! "ட்விட்டியது"..போன்ற வார்த்தைகள்,பின்னாளில் அங்கீகரீக்கப்பட்ட தமிழ் வார்த்தைகள் ஆகிவிடுமோ என்று சிறு அச்சம் நெஞ்சைத் தொடுகிறது..மேலும் தங்கள் படைப்புகளில்,நற்றமிழ் விளையாடுவது தெரிந்தும்,தங்கள் கைகளே இது போன்ற தமிழ் மாற்றங்களை ஊக்கப்படுத்துவது சிறிது வருத்தம் அளிக்கிறது.

ஊர்சுற்றி said...

அருள்மொழி,
தங்களின் பின்னூட்டம் என்னை பலவிதங்களில் சிந்திக்க வைத்துள்ளது. தங்களின் பாராட்டுக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை.

நீங்கள் கூறியுள்ள காரணம், நானும் பலவேளைகளில் யோசித்திருக்கிறேன்.
பேருந்து நிறுத்தங்களுக்குக் கூட நாம் அழைக்கும் பெயர்கள் வழக்கில் வந்துவிடுகின்றன - பின்னர் அதற்கான அழகுத் தமிழ் வார்த்தை பழக்கத்தில் இருந்து மறைந்துவிடுகிறது.

மாற்ற முயற்சிக்கிறேன். முடிந்தவரை தமிழில் எழுதுகிறேன்.