Wednesday, October 7, 2009

2012 ல் உலகம் அழியுமா - லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ன சொல்கிறது

உலகம் 2012ல் அழிவதற்கான ஏழு காரணங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இந்த விசயம் தொடர்பாக எனது முந்தைய இடுகை 1.

முந்தைய இடுகையில் "'பைபிள்' என்ன கூறுகிறது?" என்று எனக்குத் தெரிந்த விசயங்களைக் கூறியிருந்தேன். இந்த இடுகை 'CERN" எனப்படும் அமைப்பினால், கூடிய விரைவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் உலகின் மிகப்பெரிய அணுக்கருத் துகள் ஆய்வுக் கருவியான LHC (Lorge Hadron Collider - லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்) பற்றியது.

LHC ன்னா என்ன?:
நமக்கு அணுக்களைப் பற்றித் தெரியும். அணுவைச் சுற்றி வருவது எலக்ட்ரான். அணுக்களின் கருவில் உள்ள துகள்கள் 'நியூட்ரான் மற்றும் புரோட்டான்'. இந்த அணுக்கருவில் உள்ள துகள்கள் 'ஹாட்ரான்கள்' என்று அழைக்கப்படுகின்றன. நம்மூர் படங்களில் காட்டப்படும் கோழிச்சண்டை ஆட்டுச்சண்டைபோல இந்த துகள்களை நேருக்கு நேர் மோதவிட்டு ஆராய்ச்சி செய்வதுதான் இந்த மிஷினின் வேலை.

LHC க்கும் உலகம் அழியறதுக்கும் என்ன சம்பந்தம்?:
"இந்த மிஷின் வேலைசெய்ய ஆரம்பித்து துகள்கள் மோதும்போது சிறிய சிறிய கருந்துளைகள் உருவாகும். கருந்துளைகள் அதிக ஈர்ப்பு ஆற்றல் கொண்டவை. எனவே அவை சுற்றியுள்ள பொருட்களை ஈர்த்து பெரிதாக வளர்ந்துவிடும். ஆராய்ச்சி பண்ணுவதற்காக உள்ள இந்த மிஷினையேகூட அனகோண்டா பாம்புபோல விழுங்கிவிடும். இன்னும் சக்தியுள்ள கருந்துளையாக மாறி 'ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா' என ஒவ்வொரு கண்டமாக விழுங்கி பூமியையே ஏப்பம் விட்டுவிடும். கடைசியில் பூமி இருந்த இடத்தில் ஒரு கால்பந்து அளவிலான 'கரும்பொருள்' மட்டுமே இருக்கும்" என்கிறார்கள் சிலர் (அடங்கொண்ணியாஆஆஆ!).

கரும்பொருள் என்றால் என்ன? - சூரியன் எப்படி நம் கண்ணுக்குத் தெரிந்து மிகப் பெரிய சக்தியாக இருக்கிறதோ அதைவிட அதிகமாக கண்ணுக்குத் தெரியாத சக்திகள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன. இவற்றின் ஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் தன்னைச் சுற்றியுள்ள எல்லா பொருட்களையும் தன்னுள் ஈர்த்து வைத்துக்கொள்ளும். ஒளிகூட இதிலிருந்து வெளிவருவது கடினம்.

LHC-னால் கருந்துளைகள் உருவாகுமா?
"ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தின்படி நிர்மாணிக்கப்பட்ட, 'ஈர்ப்பு விசை'யின் பண்புகளின்படி இத்தகைய சிறிய அளவிலான கருந்துளைகள் LHC ல் உருவாக சாத்தியமில்லை" - இது CERN விஞ்ஞானிகளின் வாதம்.

ஆனாலும் சில தியரிகளின்(Theory) படி சிறிய அளவிலான கருந்துளைகள் உருவாகலாம். ஆனால் சில தியரிகள் இத்தகைய கருந்துளைகள் உடனடியாக அழிந்துவிடும் என்றும் கூறுகின்றன.

இதற்கு முன்பு இதுபோன்று துகள் மோதல்கள் நடந்துள்ளனவா?:
ஆம். LHC உருவாவதற்கு முன்பு சிறிய அளவிலான கருவி LEP 1989-ல் இருந்து 2000-ம் வரை பயன்பாட்டில் இருந்தது. இது பயன்பாட்டில் இருந்தபோது இந்த துகள் மோதல்கள் பலமுறை நடந்துள்ளன. அந்த மோதல்கள் மூலம் எந்த விதமான ஆபத்துகளும் உருவாகவில்லை.

ஆனால் அவற்றின் ஆற்றல் அளவுகள் கொஞ்சம் கம்மி. இப்போது தயார் நிலையில் உள்ள LHC-ன் செயல்பாட்டு ஆற்றல் மிக அதிகம்.

எவ்வளவு அளவு அதிக ஆற்றல்?:
பழைய LEP திட்டத்தில் 100 GeV பயன்படுத்தினார்கள். லேட்டஸ்ட் LHC-ல் அதிகபட்சமாக 7 TeV ஆற்றலில் துகள்களை முடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இது 70மடங்கு அதிகம்.


இத்தனை மடங்கு அதிக ஆற்றல் இருந்தாலும் 'கருந்துகள்' உருவாவது மற்ற கதிர்வீச்சுகள் உருவாவது, அதனால் பாதிப்பு ஏற்படுவது இது எதுவும் நடந்துவிடாது என்று உறுதியளிக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

மீப்பெரு அணுக்கருத்துகள் முடுக்கி (LHC) & ஆன்டி மேட்டர் (Antimatter) பற்றிய எனது மற்றொரு இடுகை, ''அறிவியல் பூ''(எனது இன்னுமொரு வலைப்பூ) -ல் வெளியானது இங்கே.

LHC பற்றி படிக்க:

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரின் - பாதுகாப்பு பற்றி:

துகள் மோதலின் வரலாறு CERN-ல்:

1eV ன்னா - ஒரு தனித்த எலக்ட்ரான் ஒரு வோல்ட் மின்னழுத்தத்தில் பெறக்கூடிய இயக்க ஆற்றல்.
1eV = 1.602 X 10^-19 joules.
1GeV=10^9eV
1TeV=10^12eV

10 comments :

வால்பையன் said...

இந்த மேட்டர் ஃபெயிலியராயிருச்சுன்னு சொன்னாங்களே!

அக்னி பார்வை said...

Thanks than I do not want to repay my Debts

Jana said...

நான் எழுதலாம் என்று எடுத்துவிட்டு பின்னர் எழுதாமல் விட்ட ஒருபதிவு. நன்றாக உள்ளது. வால்பையன் சொன்னதுபோல ஃபெயிலியராபோய்விட்டதாகத்தான் நானும் அறிந்தேன்!

பீர் | Peer said...

2012 மேட்டர் இன்னும் முடியலையா?

ஊர்சுற்றி said...

வால்பையன் & Jana,
அது போன வருசம்.

இந்த வருசம் ரிப்பேர் பண்ணி திரும்பவும் நவம்பர்ல தலைப்புச் செய்தியாகப் போகுது.

பின்னூட்டத்திற்கு நன்றி.

Jana,
உங்களுக்கும் இயற்பியலில் ஆர்வமுண்டா! மைண்ல வச்சுக்கிறேன். :)

ஊர்சுற்றி said...

அக்னி பார்வை - :)

பீர், இத விடுறதா இல்ல.
இன்னும் 5 வித காரணங்கள் இருக்குதே. ஒவ்வொண்ணையும் தனித்தனியா எழுதலாம்னு இருக்கேன் (நேரம் கிடைக்கும்போது). :)

2012 படம் வேற வருது. ட்ரெயிலர் கலக்கலா இருக்குது. அதுல என்ன சொல்ல வர்றாங்கன்னு வேற பார்க்கணும். அப்புறம் அது சம்பந்தமா கூட ஒரு இடுகை போட வேண்டியது இருக்கு. 2013 லதான் இதை மறப்போம். :)))

பின்னோக்கி said...

என்னங்க இது இப்படிய பீதிய கிளப்புறீங்க 2012 அவ்வளவுதானா ..மொத்தமா அப்பீட் ஆகிடுவோம்னு சொல்றீங்களா.

எனக்கென்னவே..சயன்டிஸ்ட் மூளைக்காரங்க...அதுனால ஜாக்கிரதையாதான் ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...பார்ப்போம்

இய‌ற்கை said...

pls visit

http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_23.html

to see the intro about your blog

Busy said...

The Dooms Day will be come truely, If u See in Quran & Prophet Mohammed (SAW) life u stood Understood, Some Evidence r gone, Still Some evidence to be happen, But Not in 2012, if u see http://www.islamkalvi.com/portal/?p=2523

http://islamkural.com/home/?p=2081

http://eegarai.darkbb.com/-f7/--t710.htm

Busy said...

http://www.onlinepj.com/books/p_2/