Saturday, September 12, 2009

2012 ல் உலகம் அழியும் - பைபிள் சொல்கிறதாம்!

2000ல் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்கள், இப்போது 2012 என்கிறார்கள். பெரிய வித்தியாசம் என்னவென்றால், இப்போது விதவிதமாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பைபிளி'லும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறது என்ற 'ஜெய்ஹிந்த்புரத்'தின் பின்வரும் ஒரு 'ட்வீட்' டைப் பார்த்தபின்தான் இந்த ''7 காரணம் மேட்டரைப்'' பற்றி தெரியவந்தது.

'ஜெய்ஹிந்த்புரத்'தின் ட்வீட்டு.
//7s to end world 2012-Mayan Calendar, Sun Storms, The Atom Smasher, The Bible says..(?), Super Volcano,The Physicists,Slip-Slop-Slap-BANG//

இணையத்தில் இதுபோல நிறைய உலாவுகிறது. கூகிளில் தேடினால் ஆயிரக்கணக்கில் பக்கங்கள் வந்து குவிகின்றன.

2012ல் பூமி அழிந்துவிடுமாம். அதற்கு ஏழு காரணங்கள்:
1) மாயன் காலண்டர்.
2)சூரியப் புயல்.
3)CERN ல் உள்ள லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (இயக்கத்தில் இருந்தால்).
4)பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.
5)சக்திவாய்ந்த எரிமலை.
6)இயற்பியலாளர்களின் கணிதம்.
7)புவிகாந்த துருவ மாற்றம்.

பைபிள்னு ஏதோ சொல்லியிருக்கிறார்களே, என்று மீண்டும் கூகிளினால் மேலதிகத் தகவல்கள் கிடைத்தன.

பைபிளில் என்னதான் உள்ளது?
''பூமியில் மிகப்பெரும் போர் நடக்கும். அந்தப் போரின் முடிவில், கடவுள் பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டு பூமியை ஆள்வார், அதற்குப் பிறகு இறந்த அனைவரும் மறு உயிர் பெற்று நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் கெட்டவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள்''. இதுதாங்க!


ஆனால் 2012ல்தான் இந்தப் போர் நடக்கவிருப்பதாக பலபேர் சொல்கிறார்கள். இது நடக்குமா, நடக்காதா? என்று தெரிந்துகொள்ளும் முன்பு பைபிளில் இது தொடர்பாக உள்ள விசயங்களைச் சிறிது 'விம்' பார் போட்டு அலசினால் நல்லது.

யார், எப்போது சொன்னது?
பைபிள் புத்தகங்களில் கடைசியாக உள்ளது 'திருவெளிப்பாடு (அ) வெளிப்படுத்தல்' (Revelation). இதை எழுதியவராகச் சொல்லப்படுபவர் 'ஜான்'. காலம், கி.பி.1 அல்லது 2 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி 'நாஸ்ட்ராடமஸ்' என்பவர் பல முன்னறிவுப்புகளை சொல்லிவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்களோ, அதேபோல் உலகத்தின் இறுதிநாட்களைப் பற்றி 'கடவுள் தனக்கு சொன்னதாக' இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூறிக்கொள்கிறார். இதில் 17 - ம் அதிகாரத்தில் மேற்கண்ட இறுதிப் போர் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு முந்தைய அதிகாரங்களில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும் முன்னறிவித்திருக்கிறார் ஜான்.


முந்தைய 16 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விசயங்கள் நடந்தால் மட்டுமே 17-ம் அதிகாரத்தில் வரும் விசயத்தையும் நாம் நடக்கும் என்று நம்ப முடியும். முதல் பதினாறு அதிகாரத்தில், ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு, புதிய இஸ்ரேல், ஏழு எக்காளம், அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும், நாடுகள் ஒன்றுதிரட்டப்படுதல்.... இப்படி பல விசயங்கள் நடக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நடந்துவிட்டனவா? அல்லது நடந்துகொண்டிருக்கின்றனவா? என்று கேட்டால், அதற்குச் சரியான பதில் இல்லை. அதேநேரம், இவை நேரடியாகச் சொல்லப்பட்டவை அல்ல, சில உருவகங்ள் குறிப்புகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

முந்தைய 16 அதிகாரங்களில் உள்ள விசயங்களை நிரூபிக்காமல் சும்மா மொட்டையாக "உலகம் அழிந்துவிடும்'' என்று சொல்லிக்கொள்வது அறியாமை. மேலும், மிகப்பெரும் 'போதகர்கள்' கூட நிச்சயம் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் - கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் ஒரு தொழிலை 2012 வரைக்குமா அவர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள்?


  • இந்த இடுகையைப் படித்து நீங்கள் மரணபயம் கொண்டால்(!) அதற்கு இந்த ஊர்சுற்றி பொறுப்பல்ல.
  • இந்த மாதிரி விசயங்களையெல்லாம் நம்பி 2011 வரை, எல்லா கேடித்தனமும் செய்துவிட்டு 2012 முதல் நாள் பாவமன்னிப்பு வாங்கிக்கொள்ளலாம் என யாரேனும் முடிவெடுத்தால் அதற்கும் இந்த ஊர்சுற்றி பொறுப்பல்ல!
  • ஜெய்கிந்த்புரத்தின் 'ட்வீட்'டில் இருந்து ஆரம்பித்திருப்பதால் இது அவருக்கு எதிரான இடுகை அல்ல.

தகவல்:
வரும் காலங்களில் மேலே கூறப்பட்டுள்ள 7 காரணங்களையும் தனித்தனியாக இடுகையிடலாம் என்று இருக்கிறேன். ஜெய்கிந்த்புரத்தின் 'ட்வீட்'டுக்கு நன்றி. :)

13 comments :

♠ ராஜு ♠ said...

இதைப் பற்றி நான் கயாஸ் தியரியின் படி, ஆய்வு செய்தய்ஹை இங்கே காணலாம்.

http://tucklasssu.blogspot.com/2009/09/100.html

Anonymous said...

"உலகம் அழிந்துவிடும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?"

ஊர்சுற்றி said...

ராஜூ படிச்சிட்டேங்க!
நன்று.

வருகைக்கு நன்றி.

இறையடியான்,
இப்படித்தான் 1999லேயும் நிறையபேர் சொல்லிக்கொண்டு திரிந்தார்கள்! நான் எதையும் நம்பலீங்க.

Subankan said...

இதுபற்றிய எனது பதிவை இங்கே காண்க

ஊர்சுற்றி said...

@Subankan,
என்னுடைய பதிவை எழுதும்போது உங்களுடைய அந்த இடுகையை வாசித்து பின்னூட்டமும் இட்டதை சுத்தமாக மறந்துவிட்டிருக்கிறேன். :(
மன்னிக்கவும்!

பீர் | Peer said...

ட்விட்டரில் இதைத்தொடர்ந்த சில சுவாரஸ்ய ட்விட்டுக்கள்...

Jaihindpuram @dynobuoy @orupakkam ஏதாச்சும் செஞ்சு கொஞ்சம் Ext. பண்ணிடுங்க...ஆனா 2ல ஆரம்பிக்கற நம்பர் வேணாம்.. அது ராசியில்ல. 3012, 4012 இருக்கட்டும் :)

---

orupakkam @jaihindpuram > Ext. பண்ணிடுங்க < அதெல்லாம் புரூஸ் வில்லிஸ், வெஸ்லி ஸ்நேப்ஸ், Gapடன், பாலையா காப்பாத்திருவாங்க. நீங்க தூங்குங்க நிம்மதியா:))

---

Jaihindpuram@orupakkam இந்த Will Smith நெனச்சாத்தான் பயமா இருக்கு "I’m the legend" :(

***

நல்ல பகிர்வு, இடுகை தொடர வாழ்த்துக்கள்...

ஊர்சுற்றி said...

பீர்,
பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

Anonymous said...

பைபிள்ள 2012ல் அழியும் என்று இல்லை. யாரோ தவறாக செய்தி சொல்கின்றார்கள். நிச்சயமாக உலகத்துக்கு வரும் கடைசிகால ஆபத்தைக்குறித்து பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. மாயன் காலண்டர்ல-தான் 2012, டிசம்பர் 21ன்னு சொல்றாங்க. பைபிள்ள இல்ல.

Robin said...

2012ல் உலகம் அழியும் என்று பைபிளில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ஹிட்ஸ் ஏறவேண்டுமென்பதற்காக தவறான தகவல்களை வெளியிடாதீர்கள்.

ஊர்சுற்றி said...

நானும் 2012-ல் உலகம் அழியும் என்று சொல்லவில்லையே அனானி அவர்களே Robin அவர்களே!

//ஹிட்ஸ் ஏறவேண்டுமென்பதற்காக தவறான தகவல்களை வெளியிடாதீர்கள்.
//
உண்மையிலேயே ஹிட்ஸ் ஏறுதா?!!!! :)

Anonymous said...

Bible says about only End of the World. not mentioned that, "the world end within this or that year. pls read bilble clearly. don't say from ur imagination.

Anonymous said...

If gospel reach all over the world then only world will be destroy. yet now lot of peoples don't know about Lord Jesus Christ.

dinul islam said...


1 - புகை மூட்டம்


2 - தஜ்ஜால்


3 - (அதிசயப்) பிராணி


4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது


5 - ஈஸா (அலை) இறங்கி வருவது


6 - யஃஜுஜ், மஃஜுஜ்


7 - கிழக்கே ஒரு பூகம்பம்


8 - மேற்கே ஒரு பூகம்பம்


9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்


10 - ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது
நூல்: முஸ்லிம் 5162.