தினமும் நான்கைந்து மின்னஞ்சல்கள், ஏழெட்டு குறுஞ்செய்திகள் - நடிகர் விஜயைக் கலாய்த்து வராவிட்டால் அன்றைய பொழுதில் ஏதேனும் பிழையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு மின் ஊடகங்களில் விஜய் பற்றி ஏகப்பட்ட கதைகள், துணுக்குகள், கிண்டல்கள்.
இவற்றை உட்கார்ந்து பொறுமையாகத் தயாரிப்பவர்கள், யோசிப்பவர்கள் ஏன எத்தனைபேர் தங்கள் பொன்னான(!) நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஏன் இவர்களுக்கு இந்த ஆர்வம்? விஜய் பற்றி கடுமையாகக் கிண்டலடித்து குறுஞ்செய்தி அனுப்புவதிலோ, அல்லது மின்னஞ்சல் அனுப்புவதிலோ இவர்களுக்கு என்ன இன்பம் கிடைக்கிறது?!
- தமிழகத்தில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்
- ஒருசில ப்ளாப்புகள் கொடுத்த நேரத்திலும் மற்ற நடிகர்களைப் போல் மார்க்கெட் சாயவில்லை
- அரசியலுக்கு வரலாம் என்று தகவல் வெளியானதுமே பரபரப்பானது பத்திரிகை உலகம்
- நன்றாக நடிக்கத் தெரியாதவர் என்று விமர்சிக்கப்படுபவர்
- மூன்றாம் தலைமுறை நடிகர்களில் முதலில் டாகடர் பட்டம் பெற்றவர்
இப்படி எத்தனையோ முகங்கள் நடிகர் விஜய்க்கு. இவற்றில் பெரும்பாலாக கிண்டலடிக்கப்படுபவை, விஜயின் நடிப்பு, டாக்டர் பட்டம் மற்றும் அரசியல். இந்த மூன்றிலும் விஜயை விட பல படிகள் மேலே கிண்டல் அடிக்கப்படவேண்டிய பிரபலங்கள் நம் தமிழகத்திலேயே உண்டு. அவர்களை விட்டு விட்டு, விஜய் மேல் மட்டும் அதிகம் தாக்குதல் நடத்தப்படுவதற்குக் காரணம் என்ன?
விஜய் பற்றி கிண்டலடித்து வரும் மின்-செய்திகளில் வெறும் கிண்டல் மட்டும் இல்லாமல் ஒருவித கடுப்புணர்வு(காண்டு) இருப்பதை நன்றாகக் காணமுடிகிறது. அது ஏன்?
விஜய் பற்றி பகடையடித்து பரவிவரும் விசயங்களில், கடந்த ஒருமாதமாகவே சற்று அதிகமான தாக்குதல் இருப்பதையும் உணரமுடிகிறது(வேட்டைக்காரன் கூடிய விரைவில் வெளவிரவிருப்பதால் இருக்குமோ?).
விஜய் பற்றி நையாண்டி செய்யப்படும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், யூடியூப் விடியோக்கள் - இவற்றை மெனக்கெட்டுத் தயாரிப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?
''சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் கிடையாது, அஜித் மாதிரி தன் திறமையால் சினிமா உலகத்திற்குள் நுழையவில்லை, விக்ரம் மாதிரி பல கெட்-அப் கிடையாது, படங்கள் கூட அப்பப்போ பிளாப் ஆகுது - இருந்தாலும் இவனுக்கு எப்படிய்யா இத்தனை ரசிகர்கள்?'' இந்த மாதிரியான எண்ணமாக இருக்குமோ?!!!
ஒரு விசயம்:
அந்த வன்முறை பின்னூட்டங்களில் வெளிப்படுவதைத் தவிர்க்க பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்படுகிறது.
25 comments:
சகா, முதலில் இதை ஆரம்பித்தவர்கள் ajithfans.com என்ற தளத்தை நடத்துபவர்கள். அது கொஞ்சம் பிரபலாமான உடனே ஆளாளுக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் அஜித்தை கலாய்த்து பல வீடியோக்களும் மெயில்களும் தயாரித்தார்கள். ஆனா செத்த பாம்பை அடிப்பதை யார் பார்ப்பார்கள்? விஜயின் மீதான் இந்த நக்கலே அவர் இப்போது இன்னும் உயரம் சென்றுவிட்டார் என்பதை காட்டுகிறது. இதில் கொடுமை என்ன்வென்றால் வலையுலகில் பலர் இந்த மாதிரி குறுஞ்செய்திகளை மட்டுமே எனக்கு அனுப்புவார்கள். அதில் என்ன சந்தோஷமோ என்று நானும் விட்டுவிடுவேன்.
நீங்க வேணும்ன்னா பாருங்க சகா, 18ஆம் தேதியே இந்த கிண்டல் ராஜாக்கள் எல்லாம் படம் பார்த்துட்டு அயோ தலைவலி, கால் வலி ** வலின்னு புலம்புவாங்க... லூசு பசங்க
அது எப்படி கார்க்கி. நான் உங்களுக்குத் தனியா இந்த இடுகையைப் பற்றி மின்னஞ்சல் அனுப்பணும்னு நினைச்சிட்டு இருந்தேன். விஜய்-னதும் பறந்து வந்து முதல் ஆளா பின்னூட்டம் போடுறீங்களே?!! எப்படி எப்படி எப்படி?!!!
onnumillai summaa time passingu thaan
நல்ல பதிவு...
ஆனால் என்னவோ விஜய் மட்டுமே குறி வைத்து தாக்க படுவதாகவும், அவரின் ரசிகர்கள் எல்லாம் புத்தர் பாதி, காந்தி பாதி கலந்த கலவைகள் என்பது போல் குறிப்பிட்டிருப்பது முரணாக தெரிகிறது. அஜித் பட வெளியீடு சமயங்களில் அதை கிண்டல் செய்து குறுஞ்செய்திகள் வருவதும் உண்டு.. விஜயை தாக்கி அதிகம் வருகின்றதென்றால் அவரை பிடிக்காதவர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும்.
ரசிகர்களை விடுங்கள் சம்பந்தப்பட்ட நடிகரே அவரது பல படங்களில் அவருக்கு போட்டியாக கருதப்படும் நடிகர் அஜித்தை கேலி செய்து வசனம் பேசியதை ஊரறியும். அவர்கள் விதைத்தார்கள் இப்பொழுது அறுவடை செய்கிறார்கள்.
திருவாளர் கார்க்கி சொல்வதிலும் எனக்கு மாற்று கருத்துண்டு. Ajithfans.com தொடங்கப்பட்டது ஆகஸ்ட், 2003 இல் ஆனால் புதிய கீதை படம் வெளிவந்தது மே 2003 இல்... யார் துவங்கியது முதலில்.. படம் பார்த்திருந்தால் ஏன் சொல்கிறேன் என உங்களுக்கு புரியும்..
நடிகர் விஜய் அவர்களுக்கு,
சம்பளமில்லா பி.ஆர்.ஓ கணக்காய் பதிவு போட்டுள்ள ஊர் சுற்றி அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். திரை பிம்பங்களால் கவரப்படுவது சுய இன்பம் மாதிரி ஒரு நிலை மட்டுமே. அதை தாண்டி வரவேண்டும் என்று நான் சொன்னால் ஊர் சுற்றிக்கு எரிச்சல் வரலாம். ஆனால் நானும் அதை தாண்டித்தான் வந்தேன் (ரஜினி ரசிகனாய்) . ஜெயகாந்தனின் "சினிமாவுக்கு போன சித்தாளு " படிக்கும்படி ஊர் சுற்றிஅவர்களுக்குசொல்வது யார் ? ஊர் சுற்றி போன்ற இளைஞர்கள் விஜய் போன்றோரின் சதுரங்கத்தில் பலிகடா ஆகிவிட கூடாது என்பதே என் விருப்பம்
சித்தூர்.எஸ்.முருகேசன் அவர்களுக்கு,
தங்கள் விருப்பத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.
ஜெயகாந்தனின் "சினிமாவுக்குப் போன சித்தாளு" இரண்டுமுறை படித்திருக்கிறேன். இன்றும் எங்கள் வீட்டு குட்டி லைப்ரரியில் இருக்கிறது.
நான் என்னளவில் கவனித்த விசயங்களை இடுகையாக இட்டுள்ளேன். இங்கு விஜய் பற்றி எந்த விளம்பரமும் இல்லை என்பதைக் கவனிக்க. எனது அத்தனை கருத்துக்களும் கேள்விகளாகவே இருக்கின்றன. அதையும் கவனிக்கவும்.
//ஊர் சுற்றி போன்ற இளைஞர்கள் விஜய் போன்றோரின் சதுரங்கத்தில் பலிகடா ஆகிவிட கூடாது என்பதே என் விருப்பம்//
இது எந்த நிலையிலும் நடந்துவிடாது என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.
லோகு,
//அவரின் ரசிகர்கள் எல்லாம் புத்தர் பாதி, காந்தி பாதி கலந்த கலவைகள் என்பது போல் குறிப்பிட்டிருப்பது முரணாக தெரிகிறது. //
நான் இங்கு யார் சார்பாகவும் பேசவில்லை. கடந்த சில நாட்களில் நடந்துவரும் நிகழ்வுகளைக் கொண்டே இந்த இடுகை எழுதப்பட்டுள்ளது.
மற்றபடி யார் ஆரம்பித்தது, யார் முடிப்பது என்பதல்ல பிரச்சனை.
இந்த மாதிரி அதீத தாக்குதல்கள் ஏன் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன? என்ற கேள்வியோடே இந்த இடுகை முடிகிறது.
//இங்கு யார் சார்பாகவும் பேசவில்லை. //
பதிவை படிக்கும் போது அப்படி தோன்றவில்லை.. நடுநிலையான பார்வையோடு நீங்கள் எழுதியிருக்கும் பட்சத்தில் மற்ற நடிகர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.. உங்களுக்கு அந்த மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் வருவதில்லையா...
//இந்த மாதிரி அதீத தாக்குதல்கள் ஏன் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன? என்ற கேள்வியோடே இந்த இடுகை முடிகிறது.//
இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன்.. விதைத்தவர்களே அறுவடை செய்கிறார்கள்..
//மற்ற நடிகர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.. உங்களுக்கு அந்த மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் வருவதில்லையா...//
கொஞ்சநாளாக வருவதில்லையே லோகு. மேலும், நடிகர் விஜய் பற்றி மட்டும் வரும்போது காரப்பொடி தூக்கலாக இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் இந்த இடுகை.
விடுங்க பாஸ்.. ரஜினிய சொல்லாததையா சொல்லிட்டாங்க.. இன்னைக்கு பேசுறவங்க பேசிட்டு போகட்டும்'ணா.. நாளைக்கு தெரிய வரும் நாம யாருன்னு..
ரொம்ப நாளா இத பத்தி எழுதவேண்டும் என்று நினைத்தேன். எழுதிவிட்டீங்க! நல்ல பதிவு.
விஜயை சர்தார் மாதிரி ஆக்கி விடுவார்கள் போல.. அந்த அளவிற்கு தினமும் மின்னஞ்சல் வருகிறது..
கிண்டலடிப்பது தவறில்லை அதுக்காக இது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது..
இருவரும் மாற்றி மாற்றி கிண்டலடித்துக்கொள்கிறார்கள்... இது எங்கே சென்று முடியுமோ!
படம் எப்ப வரும் என்று விஜய் ரசிகர்களை விட இவர்களே ஆர்வமாக இருக்கிறார்கள் "விமர்சனம்" எழுத... படம் வந்த பிறகு ஒரு வாரம் விஜய் டரியல் ஆவது உறுதி.
என்னமோ போங்க!
தாங்கள் என் மறுமொழியை புரிந்து கொண்ட விதமும், சினிமாவுக்கு போன சித்தாளு படித்துள்ளமையும் தங்கள் உறுதி மொழியின் நம்பகத்தன்மையை கூட்டுகின்றன. நன்றி
நன்றி சித்தூர்.எஸ்.முருகேசன்.
உங்க கருத்தை நானும் ஒத்துக்குறேன் ஊர்சுற்றி. கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டிருக்காங்க. நம்ம சொன்னா மட்டும் கேக்க போறாங்களா என்ன...!
வருகைக்கு நன்றி அறிவு GV.
(பேர எப்படில்லாம் யோசிக்கிறீங்க!)
எல்லாம் வயத்தெரிச்சல்தான்..
பிரபலமா இருக்குறவங்களை மட்டம் தட்டினா.. ஒரு அல்ப சந்தோஷம்.
விஜய பத்தி தப்பா சொன்னா.. இவங்க என்னவோ பெரிய கலா ரசிகன்கனுங்கன் நினப்பு..
//சகா, முதலில் இதை ஆரம்பித்தவர்கள் ajithfans.com என்ற தளத்தை நடத்துபவர்கள். //
இது உட்சபட்ச அவதூறு. நீங்கள் ஏதோ வெள்ளைக்கொடி வேந்தர்கள் போலவும்.. நாங்கள் சண்டை பிடிக்கவே அலைவது போலவும் தவறாக செய்திகள் பரப்ப வேண்டாம். விஜய்யை ஏன் கிண்டல் செய்கிறீர்கள், வேண்டாமே என்றொருவர் சொல்லும் போது, எதற்கு இந்த கேவலமான Namedropping? எந்தவித ஆதாரமாவது உங்களிடம் இருக்கிறதா என்ன? (தலைவர் சக்திவேல் பாணி..?) உயரம் சென்ற விஜய்யின் லட்சணம் ஊர் சிரிக்கிறதே. 2007ல்/2008ல்/2009ல் எந்த படம் பில்லாவின் வசூலை முறியடித்தது? (இந்தத்தலைமுறை. தசாவும், சிவாஜியும் உட்டுருங்க)
//திருவாளர் கார்க்கி சொல்வதிலும் எனக்கு மாற்று கருத்துண்டு. Ajithfans.com தொடங்கப்பட்டது ஆகஸ்ட், 2003 இல் ஆனால் புதிய கீதை படம் வெளிவந்தது மே 2003 இல்... யார் துவங்கியது முதலில்.. படம் பார்த்திருந்தால் ஏன் சொல்கிறேன் என உங்களுக்கு புரியும்..//
சரியாக பாண்ட்டை பிடித்திருக்கிறீர்கள்.
அவர்களுக்கு தேவை நொட்டை சொல்ல ஒரு ஆள், அவ்வளவுதான்.
ஊர்சுற்றி. புஷ், லாலு, சர்தார், சாம் ஆண்டர்சன் எல்லோரையும் ஏன் கிண்டலடித்தார்கள் என்பதும் விஜய்யை இப்போது கிண்டல் செய்வதன் பிண்ணனிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
நன்றி ஊர்சுற்றி. என் குரு ஹாலிவுட் பாலா கூட இதேதான் சொன்னார்.
அப்டியே நம்ம ப்ளாக் பக்கம் வந்து பாத்துட்டு கருத்த சொன்னீங்கன்னா மகிழ்வேன்..!
வாங்க வெங்கிராஜா,
ட்விட்டர்லயும் குமுறிட்டீங்க. :)
அறிவு GV கட்டாயமாக வருகிறேன்.
எனக்கென்னமோ லோகு சொல்றது சரின்னு தோணுது...
பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு ஊர்சுற்றி
நன்றி நாஞ்சில் பிரதாப். :)
தங்கள் பதிவே வஞ்ச புகழ்ச்சி ரகமோ என்று சந்தேகம் அளிக்கிறது நண்பரே!
குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் வந்த வண்ணம் இருப்பினும், அவை சற்று உண்மை உரைப்பன என்றே தோன்றுகிறது ..எனினும் கமல் என்னும் மாபெரும் நடிகர் வாழும் காலத்தில்,நடிப்பின் இலக்கணம் கற்றுக் கொண்டிருப்பவருக்கு,முனைவர் பட்டம் கொடுத்திருப்பது கொஞ்சம் அதிகம் தான்...! இத்தனை ஆதரவாளர்களா என்று ஆச்சரியமும் தொற்றிக் கொள்கிறது!!!
Post a Comment