சன் டீவியின் கடும் தொந்தரவிற்குப்(!) பிறகு, பல கல் தூரம் பிரயாணம் செய்து கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தப் படத்தைப் பார்த்தேன். :)
உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை 'கண்டேன் காதலை' என்கிற தமிழ்ப் படம் 'ஜப் வி மெட்' (ஹிந்தி) படத்தின் மறுபதிப்பு என்று. ''மகிழ்ச்சியாக இருக்கும் கதாநாயகி - துயரத்தில் நாயகன் - நாயகியைப் பார்த்து மனமாற்றம் - நாயகன் வெற்றி - நாயகிக்கு ஒரு சோகம் - நாயகன் உதவி - இருவருக்கும் காதல்'' இப்படி ஏற்கெனவே இதில் பல பரிணாமங்களை நாம் தமிழ்சினிமாவில் பார்த்துவிட்டோம் என நினைக்கிறேன்(ஒரே படத்தில் இல்லையென்றாலும் வேறுவேறு படங்களில்). மேற்கூறிய சங்கிலி ஒன்றாக வருவது இந்தப் படத்தில்.
திரைக்கதை, இயக்கம் - கண்ணன்:
ஹிந்திப் படத்தின் திரைக்கதையை (பெரும்பாலும்) அப்படியே வெளிக்கொண்டுவந்திருக்கிறார் கண்ணன், அதனால் கதைக்கு எந்தக் குந்தகமும் இல்லை. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ரயில்பயணம், அதில் ஓர் பெண்ணுடன் சந்திப்பு என்று ஆரம்பித்து பயணத்தை இனிதே தொடர்கிறது கதை. நாயகன் சோகமே வடிவாக இருக்க நாயகியோ சின்னக்குழந்தாக துள்ளிக்குதிக்கிற ஒரு பெண்.
முதல்பாதியில் சோகம் நிரம்பித் ததும்பும் அந்தக் கதாப்பாத்திரத்தோடு நம்மையும் ஒன்ற வைத்துவிடுகிறார் பரத். தமன்னா 'கரீனா கபூரின்' துள்ளலைக் கொண்டுவர மெனக்கெட்டு கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார் - பரவாயில்லை. தமன்னாவின் சில முகபாவங்கள் சற்று செயற்கையாய்த் தெரிகின்றன, மற்றபடி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில், பரத்திடம் இருந்திருக்க வேண்டிய அந்த சந்தோஷம், புதுத் தெம்பு ஏனோ கொஞ்சம் குறைந்திருப்பது போல ஒரு உணர்வு.
திருச்சிக்கான பயணம், திருச்சியிலிருந்து தேனிக்கான பயணம் இவற்றை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக படமாக்கியிருக்கலாம். திடீர்த் தடீரென்று கூட்டமாக ஆடுவதும் எங்கெங்கோ போவதும் ஏனென்று தெரியவில்லை! குறும்புப் பெண் தமன்னாவிடம் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதை வெளிக்காட்டுவதில் இரண்டாம் பாதியில் பரத் சற்றே சறுக்கியிருக்கிறார். வசனங்கள் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருந்திருந்தால் சற்றே தேவலை. 'சத்யம்' போல சரிந்துகிடக்கும் ஒரு நிறுவனத்தை மீட்கவேண்டிய நேரத்தில், பேசும் பேச்சுபோல அது இல்லை!
திரைக்கதையில் முக்கியமான மாற்றம் 'சந்தானம்' என்கிற கதாப்பாத்திரம். இதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். சந்தானம் மட்டும் இல்லையென்றால் சன் டீவி இந்தப் படத்தை நிச்சயமாய்ச் சீண்டியிருக்காது என்பது என் எண்ணம்.
படம் முழுக்க வண்ணங்களை வரவி விட்டிருக்கிறார்கள். உடை, பின்னணி, இடங்கள் எல்லாமே வண்ணங்களால் நிறைந்திருக்கின்றன - அழகு. ஹிந்திப் படத்தைக் காப்பியடித்திருப்பது தமன்னாவின் உடைகளிலும், பரத்-தமன்னா இருவரும் தனிமையில் இருக்கும் ஒருசில காட்சிகளிலும் பளிச்செனத் தெரிகிறது. அதுவும் படத்திற்கு அழகே!
நான் என்னதான் விமர்சனம் எழுதினாலும் சன் டீவியில் இது முதலிடம் பெறுவது திண்ணம்! ஜப் வி மெட்(மன்னிக்க) கண்டேன் காதலை - பார்க்கலாமுங்கோ!
8 comments:
//கண்டேன் காதலை - பார்க்கலாமுங்கோ!//
ம்ம்ம் கடைசியில பார்க்கலாமுன்னு சொல்லீட்டீங்க. ஆன்லைன்ல வரட்டும் கண்டிப்பா பார்த்துடுறேன் :)
ungala paatha rompa pavama irukku
படம் உங்களுக்கு பிடிச்சிடுச்சு போல... :-)
நானும் படம் பார்த்தேன். பறவாய் இல்லை பார்க்கலாம். என்னை பொறுத்த வரையில் வசனங்கள் நல்லா இருக்கு..
தொடர் பதிவுக்கு தங்களை அழைத்துள்ளேன். முடிந்தால் பதிவிடுங்கள்
http://nandhu-yazh.blogspot.com/2009/11/blog-post.html
இணைய இணைப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக உடனடியாக பதில் பின்னூட்டம் தர இயலவில்லை! வருந்துகிறேன்!
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
அக்னி பார்வை, என்னைய பார்த்தா ஏங்க பாவமா இருக்கு?!!!
அமுதா,
கட்டாயமாக வருகிறேன்!
padathai paarkkum interest pogavechutanga sun tv....sound overa kuduthutanga :)
Post a Comment