நகரங்களின் முட்டிமோதும் மூளையுள்ள மனிதர் நடமாடும்
தெருக்களில் அல்ல,
ஏதோ ஒருசில மூலைகளில்
ஒளிபார்த்தறியாத பள்ளங்களில்
தினமும் நீரூற்றும் தொட்டிச்செடியில்
மின்னஞ்சலின் கடவுச்சொற்களில்
பார்க்கத் தவறிய புன்னகைகளில்
நண்பனின் தாமதங்களில்
பரிமாறிக்கொள்ளாத வாழ்த்துக்களில்
கைபேசியின் தவறிய அழைப்புகளில்...
உண்மைகள் சிதறிக்கிடக்கின்றன.
---
சாலையின் விளிம்புகளில் 'டேக் ஆஃப்' ஆகி,
நான் நிஜமாகவே பறக்கிறேன்
தூரத்தில் ஒருவன் எலும்பு நொறுங்க
அடிவயிற்றிலிருந்து தொண்டைவரை 'த்ரில்'
நான் இன்னும் வேகமாய்
கூட்டம் அவனை வேடிக்கை பார்க்க
நான் (அதோ) சாலையின் மறுமுனையில்
இன்னும் வேண்டும் 'த்ரில்'
வேகம், வேகம்...
என் 'பைக்' நூறுக்கு மேல் போகாதே!
இல்லையே, நான் பறக்கிறேனே 110, 120, 125....
கூட்டத்தின் நடுவில் எனது கவசத்துடன் அவன்
அது நானும்தான்!
----
10 comments:
கூட்டத்தின் நடுவில் எனது கவசத்துடன் அவன்
அது நானும்தான்!]]
6th senseஆ!
//உண்மைகள் சிதறிக்கிடக்கின்றன. //
உண்மை தான்... :(
//கூட்டத்தின் நடுவில் எனது கவசத்துடன் அவன்
அது நானும்தான்!//
அது பைக்கா கால(ன்) யந்திரமா?
நல்ல படைப்பு நண்பரே .தொடருங்கள்
எனது கன்னி வெளியீட்டிற்கு உரமளித்த உள்ளங்களே,
நன்றி நன்றி.
ஊர் சுற்றி...... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!! நல்லா இருக்குங்கோ!
//சாலையின் விளிம்புகளில் 'டேக் ஆஃப்' ஆகி,
நான் நிஜமாகவே பறக்கிறேன்//
என்ன தல இது.., ரொம்ப சாதாரணமா...,
வரிகள் அருமை
நன்றாக ஊர் சுற்றுங்கள். வாழ்த்துக்கள்
ஷஃபிக்ஸ் நன்றி.
SUREஷ் ரொம்ப சாதாரணமா இருக்கா...
முதல் முயற்சிதானே மன்னிச்சி விட்ருங்க. வரும் காலங்களில் கொஞ்சம் சிக்கலானதா போடுறேன்.
இது நம்ம ஆளு, யோ வாய்ஸ்..
நன்றி நன்றி.
Post a Comment