Tuesday, August 11, 2009

சூரியகிரகண மேதாவிகளே!

சூரியகிரகணம் வரும்போது, சூரியன், பூமி, நிலா இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். நிலா மற்றும் சூரியன் ஒரே திசையில் இருப்பதால் ஈர்ப்பு விசை அதிகமாகும். இந்த அதிகப்படியான விசை புவியின் 'டெக்கான் ப்ளேட்டுகளை' நகர்த்தப் போதுமானதாக இருக்கும். எனவே 'சூரியகிரகணம்' அன்றோ அல்லது அதற்குப் பின்பு சிலநாட்களுக்குள்ளாகவோ நிலநடுக்கம் வரலாம். இந்த நிலநடுக்கம் காரணமாக 'சுனாமி' வரலாம். இன்னும் என்னென்னவெல்லாமோ வரலாம் என்று 'லாம்' கொட்டியவர்களே... உங்களுக்குத்தான் இந்த இடுகை.

நிலவும் - சூரியனும் ஒரே பக்கமா இருந்தா ஈர்ப்புவிசை அதிகப்படியா இருக்கும் - சரி. ஆனா நேத்து ராத்திரி நிலவும் சூரியனும் எதிரெதிராக (கொஞ்சமா விலகி) இருந்தது. அப்படின்னா ஈர்ப்புவிசையை கழிக்கத்தானே செய்ய வேண்டும். இப்போ இந்த நிலநடுக்கம் வந்ததுக்கு 'சூரியகிரகணம்' காரணமா இல்லையான்னு வந்து சொல்லுங்க மக்களே!

இல்லவே இல்லை. நாங்க, 'லாம்' னுதான் சொன்னோம் 'கும்' னு (நடக்க'லாம்'-நடக்'கும்') சொல்லவே இல்லைன்னு சொல்றவங்க, ஏதாவது ஆளெடுக்கிற அரசியல் கட்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதேமாதிரி கிரகணத்தையும் - ஆன்மீகத்தையும் சேர்த்து குழப்பி ஒரு சூப்பர் குருமாவாக பக்தகோடிகளுக்கும் வாசகர்களுக்கும் தந்துகொண்டிருக்கிறார்கள் சிலர். அவர்களுக்கும் சில கேள்விகள் தயாராக வைத்துள்ளேன். நீங்களும் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் அடுத்த இடுகையில் இணைக்கிறேன்.

11 comments :

வால்பையன் said...

இதுக்கு காரணம் தெரியாதா!

சனி மூணாம் வீட்லருந்து, நாலாம் வீட்லருக்குற செவ்வாயை சைட் அடிக்கிறதே காரணம்!

அவுங்கப்பன் ஜூபிடருக்கு கோபம் வந்து குண்டு போட்டுட்டான்! அது பூமி மேல கொஞ்சம் பட்ருச்சு தல!

அக்னி பார்வை said...

அவங எப்பவுமே இப்படி தான் பாஸ் நம்மல குழப்பிகிட்டே இருப்பாங்க

ஊர்சுற்றி said...

வாங்க வால்பையன், அக்னி பார்வை.

நிகழ்காலத்தில்... said...

\\இப்போ இந்த நிலநடுக்கம் வந்ததுக்கு 'சூரியகிரகணம்' காரணமா இல்லையான்னு வந்து சொல்லுங்க மக்களே!\\

நடக்கப்போவத பத்தி ‘லாம்’ சொல்றதே பலரோட பொழப்பா போச்சு,

சரி, நடந்து முடிஞ்ச நிலநடுக்கம் எதனால அப்படின்னு முழுசா சொன்னீங்கன்னா
தெரிஞ்சுக்குவமில்ல..!

Sabarinathan Arthanari said...

நண்பரே

உங்களுக்கான பதில் என்னுடைய பதிவில் சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை.

நன்றி

ஊர்சுற்றி said...

நிகழ்காலத்தில்,

நன்றி.

Sabarinathan Arthanari,

நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு ஒண்ணுமே புரியல. உங்களுக்கு அறிவியல் புரிஞ்சிருக்கா இல்ல நான் எழுதின இடுகை புரிஞ்சிருக்கான்னு தெரியல. நீங்களா எதையோ எழுதியிருக்கீங்க. இருந்தாலும், என் பதவுக்கு முதல் எதிர்வினை ங்கறதனால உங்களுக்கு நன்றி. :)

Sabarinathan Arthanari said...

நண்பரே

நான் கூற வந்தது இது தான்:-

சோதிடம் என்பது என்ன?

சோதிடம் என்பது வானியல் சூழ்நிலை மாற்றங்களுக்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை புள்ளி விவர அடிப்படையில் ஆராய்வதாகும்.

நவீன சோதிட அறிவியல்

ஒரு கணிணி அறிவியல் அறிஞர் புள்ளி விவர அடிப்படையில் மிகத்துல்லியமக கணித்த தற்போதய நில நடுக்கம். (நன்றாக கவனியுங்கள் இவர் அறிவியல் அறிஞர் கிடையாது. வானவியலுக்கும், சம்பவங்களுக்கும் இருக்கும் தொடர்பை வைத்து கணித்தார் அவ்வளவு தான்)

இது மிகச்சரியாக இப்போது நடந்துள்ளது. இது தான் Hi-Tech சோதிடம்.

http://www.tamilscience.co.cc/2009/08/blog-post.html

அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்க படாதவை யாவும் பொய் அல்ல. பிற்காலத்தில் அவை நிரூபிக்க படலாம்.

உங்களுடைய பதிவும், உண்மை அறிய தூண்டுவதாகவும், இடுகையை எழுதவும் தூண்டியது.

நன்றி!
வாழ்த்துக்கள்!!

ஊர்சுற்றி said...

//Sabarinathan Arthanari,

சோதிடம் என்பது என்ன?

சோதிடம் என்பது வானியல் சூழ்நிலை மாற்றங்களுக்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை புள்ளி விவர அடிப்படையில் ஆராய்வதாகும்.
//

அப்படிங்களா? வெறும் கிரகங்களின் நிலையையும் காலத்தையும் பொறுத்து கணிப்பது என்றுதானே நான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்வாமி ஓம்கார் கூட அப்படித்தான் சொல்கிறார். நீங்க புதுசா ஏதாவது ஜோதிடத்தைப் பற்றி சொல்கிறீர்களா?

வானம்பாடிகள் said...

நம்மளுக்குள்ள குடையிறது இது தான். மழை வர, நோய் போக, பஞ்சம் போகன்னு எல்லாத்துக்கும் பரிகாரம் சொல்றவங்க இதுக்கு மட்டும் ஏன் சொல்ல மாட்டாங்க. முன்கூட்டியே ஏதாவது சொல்லி பண்ண வெச்சி பொறவாலயும் வந்தா பின்னி பெடலெடுத்துடுவாங்கன்னு தானே? இப்படி பீதிய கெளப்புறதுல என்ன லாபம். பார்த்தியா நான் அப்பவே சொன்னேன்னு தம்பட்டம் அடிச்சா, சாமி சரியா சொல்லுதுடோய்னு அவனவனும் கோவணம் கட்ட கூட ஜாதகத்த தூக்கிக்கிட்டு ஓடி வரவா?

ஊர்சுற்றி said...

நல்லா சொன்னீங்க வானம்பாடி.

Sabarinathan Arthanari said...

// கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்வாமி ஓம்கார் கூட அப்படித்தான் சொல்கிறார்.//

//எல்லாத்துக்கும் பரிகாரம் சொல்றவங்க இதுக்கு மட்டும் ஏன் சொல்ல மாட்டாங்க. //

எல்லாத்துக்கும் பரிகாரம் சோதிடம் சொல்கிறது என தெரியுமா வானம்பாடி ?

முழு உண்மையின் ஒரு பகுதியை மட்டும் தான் கேள்விப்படுவதை விட, முழுவதும் அறிந்து கொண்டு எழுத கேட்டு கொள்கிறேன்.

நன்றி!