Friday, July 24, 2009

வலையுலகும் விலங்குணர்ச்சியும் - சிக்மண்ட் ஃபிராய்ட்

சிக்மண்ட் ஃபிராய்ட்(Sigmund Freud)


சிக்மண்ட் பிராய்ட்(1856-1939) - உளவியலின் மேதையான (உளவியலின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர்) இவரின் கருத்துகள் மனித இனத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தையே உருவாக்கின. தொடக்கத்தில் நரம்பியல் தொடர்பான விசயங்களில் ஆர்வம் காட்டிய இந்த மருத்துவர், உடல் பாதிப்பு எதுவும் இல்லாத நேரத்திலும் மனத்தால் மட்டுமே பாதிக்கப்படும் நோயாளிகளைப் பற்றி தனது கவனத்தைத் திருப்பினார்.

மனநோய், மனித உளவியல், கனவுகளின் உட்பொருள், மனச்சிக்கல், மனச்சிதைவு, மனித மனத்தின் பரிணாம், அன்றாட வாழ்க்கையில் உளவியல் தாக்கம், மனித இனத்தின் பரிணாமம், சமூகம், மதம், மதத்தின் தோற்றம் இவற்றைப் பற்றி உளவியல் ரீதியான இவரது ஆராய்ச்சிகளும் கட்டுரைகளும் பலமடங்கு ஆர்வத்தைத் தூண்டுபவை.

பரிணாமம் பற்றி விளக்கும்போது அவர் சொல்கிறார் ''மனித மனமானது இரண்டு பிரிவுகளைக் கொண்டது, 'விலங்குணர்ச்சி' - 'பண்பாட்டு உணர்ச்சி'. மனிதன் ஒரு சமூகமாக வாழப் பழகிக் கொண்டிருந்த அந்த ஆரம்ப காலங்களில் 'விலங்குணர்ச்சி'யே மனித மனத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மனிதன் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்து சமூக அமைப்பு உருவான பின்பு, சில வரைமுறைகளுக்கு உட்பட்டு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களால் மிருகமாக இருந்த மனிதன் மனம் பண்படத் துவங்கியது''.

இந்த பண்பாட்டு உணர்ச்சி, மனதின் மற்ற பகுதியை ஆக்கிரமித்து 'மிருக உணர்ச்சியை' கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது. ஆனால் 'மிருக உணர்ச்சி' அடிக்கடி வெளிப்படுவதில்லையே தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அது வீரியத்தோடு எழுந்து தன் வேலையைக் காட்டிவிடுகிறது. அந்த வகையில்தான் உலகில் நடக்கும் யுத்தங்கள் - தேவையில்லாத வன்முறைகள் வருகின்றன. இவையெல்லாம் மனித மனத்தின் 'மிருகத் தன்மையை' அவ்வப்போது காட்டிக்கொண்டிருக்கின்றன.

அதேபோல, வலையுலகில் நடக்கும் 'தேவையில்லாத மோதல்களுக்கு' இந்த கொஞ்சூண்டு இருக்கும் 'மிருகத்தனம்' கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆதி மனிதன் வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதத்தோடு கிளம்பினான். இன்று நாம் நம்முடைய பலவித திறமைகளை வைத்து வாழ்க்கையில் வேட்டையாடிக்கொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும்போது அந்த திறமைகளை வைத்து மோதிக் கொள்கிறோம். இது கருத்துமோதலாக இருக்கம் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையேல் சிக்மண்ட் பிராய்ட் சொன்ன, இன்னும் அழியாமல் இருக்கும் 'விலங்குணர்ச்சியே' இதற்குக் காரணம் என்றும் கூறலாம்.

ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நடக்கும் சில காமெடிகளைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

சிக்மண்ட் ஃபிராய்ட் பற்றி படிக்க:
கூகிள் புக்ஸ்ஸில் 'inauthor:"Sigmund Freud' என்று தேடுங்கள், பின்பு இந்த புத்தகங்களைப் படிக்கலாம்.
The Interpretation of Dreams
The psychopathology of everyday life

26 comments:

Thamiz Priyan said...

நல்ல தகவல்! நன்றி!

ஊர்சுற்றி said...

தமிழ் பிரியன், நன்றி.

Sundararajan P said...

//வலையுலகில் நடக்கும் 'தேவையில்லாத மோதல்களுக்கு' இந்த கொஞ்சூண்டு இருக்கும் 'மிருகத்தனம்' கூட ஒரு காரணமாக இருக்கலாம்.//

:):):)

Anonymous said...

may be.. right...:)

வால்பையன் said...

//இதையெல்லாம் தாண்டி நடக்கும் சில காமெடிகளைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. //

இதுதான் கடவுள் உணர்ச்சியாக இருக்குமோ!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இவரப் பத்தி இன்னும் எழுதுங்க தல...,

புருனோ Bruno said...

:) :)

SUFFIX said...

நல்ல பகிர்வு, மிருகமா மாத்திடாதேன்னு கர்ஜிக்கறது இதுனாலத்தானோ என்னவோ?

ஊர்சுற்றி said...

நன்றி சுந்தரராஜன், Mayil,வால்பையன்.

நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)- கட்டாயமா எழுதுறேன்.

நன்றி புருனோ சார், நன்றி ஷஃபிக்ஸ் - இருக்கலாம் இருக்கலாம்.

sury siva said...

// இதையெல்லாம் தாண்டி நடக்கும் சில காமெடிகளைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. //

உங்கள் பதிவுக்கு திரு.கே ஆர் எஸ் அவர்களின் அண்மைப் பதிவு கிரகணம் பற்றிய பதிவு வழியே
வருகிறேன்.

ஊர் சுற்றி எனும் தங்களது பெயரே புதுமையாக உள்ளது. நமது ஊரைச் சுற்றும்பொழுதும், இல்லை ஊரைக்
கடந்து உலகத்தையே சுற்றும்பொழுதும், பல்வேறு காட்சிகள் காண்கின்றோம். பல்வேறு நபர்களைச் சந்திக்கின்றோம்.
பல்வேறு கருத்துக்களைக் கேட்கின்றோம்.


இவை யாவையுமே நமது பண்புக்கும், பண்பாட்டுக்கும், நாம் வளர்ந்த நாடு, மொழி, குடும்பம், ஊருக்கு, அதனால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட
நமது கருத்துக்களுக்கு
ஒத்தவையாக இருக்கவேண்டும் எனத் தேவையில்லை. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு " என்பார் வள்ளுவர். " எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பது அறிவு" என்றும் சொன்னார். பார்ப்பதிலும் கேட்பதிலும் நல்லவை எவை எனப் பகுத்து ஆராய்தல்
அறிவாம். நல்லவை எவை என நாம் நினைக்கிறோமே அவற்றினை உலகத்தே எல்லோரும் வழிமொழியவேண்டுமென எதிர்பார்ப்பதும் இயலாது. நல்லது, கெட்டது எல்லாமே ஒருவகையில் சார்புடையதாம்.
( ரிலேடிவ் என ஆங்கிலத்தில் சொல்லலாம்.) . உங்களது மற்றொரு பதிவில் சொல்லியிருப்பது போல உலகத்திலே
சமமான மற்றும் எதிர்மறையான துகள்கள் இருப்பது போல கருத்துக்களும் உலகம் தோன்றிய முதலேயே உள்ளன.

ஆகையால், இன்றைய வலைப் பதிவு உலகில் "ஊர் சுற்று" கையில் பல நேரங்களில் சிரிப்பு வருவதைத் தவிர்க்க இயலாது என்பது மெய்யே. நானும் சிரிப்பதற்காகவே வலை உலகில் தினம் புதிதாக ஒரு பத்து வலைப்பதிவுகளுக்குச்
செல்கின்றேன். அறிந்தவர், அறியாதவர், மட்டுமல்ல, தாம் அறியவில்லை என்பதை அறியாதவரும் அறிந்தது
போல் எழுதுவதும் செயல்படுவதும் மெய்யே. இவர்கள் பொதுவாக எல்லாத்துறைகளிலும் உளர் என்பதும் உண்மை.

அறியாதவர் அறியாதனவற்றை அறிந்தவர் போல், ஒரு தோறறம் எடுத்து, அரிதாரம் பூசிக்கொண்டு சொல்வதை, செய்வதை, திரை உலகிலே பார்க்கிறோம் அல்லவா ! அது போலவே தான் இதுவும் !
ஆகவே சிரியுங்கள்.

சிரிப்பு மனித மன நலத்திற்கு முக்கியமான மருந்து. சிரிப்பு பல நேரங்களில் ஆக்கவழிகளில் சிந்தனையைத்
திருப்பிவிடவும் கூடும்.

சிரித்து வாழ வேண்டும் , பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.




.

வால்பையன் said...

மிஸ்டர்.சுப்புணி!

ஐ டிடிண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

sury siva said...

வால்பையன் said:

// மிஸ்டர்.சுப்புணி! //

சுப்புணி என்று எனது தாத்தா அழைப்பாரென்று எங்க அம்மா சொல்லியிருக்கிறார். உங்களுக்கு
எப்படி தெரிந்தது !!!!! ?????
எங்க தாத்தா இப்ப இருந்தால் அவருக்கு 142 வயதிருக்கும்.
எனக்கே 68 வயதாகிவிட்டது.

//ஐ டிடிண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ!//

எதிர்பாராதவை, எதிர்பாராத நேரங்களில், எதிர்பாரா நபர்கள் வழியே
எதிர்கொள்பவையே வாழ்க்கையின் நிஜம்.

// அவ்வ்வ்வ்வ்வ்வ் //

இந்தக்கிழவனுக்கு புரியும்படி சொல்லுங்கள். நான் ஒரு ட்யூப் லைட்.

சுப்பு ரத்தினம்.

வால்பையன் said...

இம்புட்டு சீரியஸான பின்னூட்டம் இதற்கு தேவையானு!

வடிவேலு ஸ்டைலில் ஒரு செல்ல அழுகை!

அதான்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

-- said...

நல்ல தகவல்!
நன்றி!

ஊர்சுற்றி said...

மிகவும் நன்றி சுப்பு ரத்தினம்.
எனக்கு மகிழ்ச்சியில என்ன சொல்றதுன்னே தெரியல. பின்ன... என்னோட பதிவுல இவ்ளோ நீள பின்னூட்டம் முதல் முறையா வாங்கியிருக்கேனே. நன்றி நன்றி. சிரிக்கலாம்.

ஊர்சுற்றி said...

பேருந்துக் காதலன்,
நன்றி.

priyamudanprabu said...

வலையுலகில் நடக்கும் 'தேவையில்லாத மோதல்களுக்கு' இந்த கொஞ்சூண்டு இருக்கும் 'மிருகத்தனம்' கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆதி மனிதன் வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதத்தோடு கிளம்பினான். இன்று நாம் நம்முடைய பலவித திறமைகளை வைத்து வாழ்க்கையில் வேட்டையாடிக்கொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும்போது அந்த திறமைகளை வைத்து மோதிக் கொள்கிறோம். இது கருத்துமோதலாக இருக்கம் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையேல் சிக்மண்ட் பிராய்ட் சொன்ன, இன்னும் அழியாமல் இருக்கும் 'விலங்குணர்ச்சியே' இதற்குக் காரணம் என்றும் கூறலாம்.
///

வாஸ்தவம்தானுங்க

ஊர்சுற்றி said...

பிரியமுடன் பிரபு,
நன்றி.

Sanjai Gandhi said...

ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நடக்கும் சில காமெடிகளைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. //

ஹிஹி..

ஏற்கனவே ஃப்ராய்ட் பற்றி ஒரு புத்தகம் வாங்கி வச்சிருக்கேன். அதுவே படிக்கலை இன்னும்.. :)

ஊர்சுற்றி said...

SanjaiGandhi,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
சீக்கிரம் படிங்க, படிச்சதுக்கு அப்புறம் 'ஃபிராய்டு' பைத்தியம் பிடிக்க வாய்ப்பு இருக்கு! :)

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் சொன்னது:
/இதுதான் கடவுள் உணர்ச்சியாக இருக்குமோ!/

கடவுளை மறுக்கிற உந்துதலாகவும் இருக்கும்!

கிருஷ்ண மூர்த்தி S said...

அடிப்படை உணர்வுகள் என்று நாற்பத்துமூன்று மிருக உணர்வுகளை இனம் கண்டு உளவியல் சொல்கிறது. மனிதனுடைய பரிணாம வளர்ச்சி, இந்த மிருகவுணர்வுகளை அடக்குவதில் அல்ல, பண்படுத்துவதில் தான் இருக்கிறது.

கவியரசர் கண்ணதாசன் பாடலில் [சட்டி சுட்டதடா..] வரும் ஒரு வரி ..."பாதி மனதில் தெய்வம் இருந்து...மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா! இதை வெகு அழகாகச் சொல்கிறது!

அர்த்தமுள்ள பதிவு!

geethappriyan said...

இன்றைய சூழ்நிலைக்கு தேவையான பதிவுங்க நண்பரே.
நல்ல எழுத்து நடையில் சிகமன்ட் பிராய்ட் பற்றி புரிய வைத்தமைக்கு நன்றி.
நீங்கள் ஏன் இந்த பதிவை வெளியிடவில்லை? நிறைய பேர் பயனடைவார்கள்.

ஊர்சுற்றி said...

கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
எனக்கு அந்த வகைப்படுத்துதலைப் பற்றி தெரியாது. சரியான பாடல் வரிகளைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

கார்த்திகேயன்,

ஏதோ ஒரு ஞாபகத்துல விட்டுட்டேன். அப்புறம் கொஞ்சநாளா இந்தப் பக்கம் வரலையா... அதான். நாளைக்கு திரட்டிகளில் இணைத்துவிடுகிறேன் - கொஞ்சம் சூடா இருக்கும்போது. :)

sritharan said...

இவருடைய தமிழாக்க புத்தகம் எங்கு பெற்றுக்கொள்ளலாம் தெரிந்தவர்கள் இந்த முகவரிக்கு தெரியப்படுத முடியுமா? தயவுசெய்து eniyavan@hotmail.com

sritharan said...

ivarudaya puththakam tamil mozhi peyarpu engu kidaikum ?plz mudinthan "eniyavan@hotmail.com" ku bathil anuppavum