Tuesday, July 21, 2009

எனக்கு விருதெல்லாம் வேண்டாமுங்கோ!

முதலில் பட்டாம்பூச்சி பறந்தது. அப்பறம் என்னவெல்லாமோ வந்தது. முக்கியமா 'கரப்பான் பூச்சி விருது'. அத நானே எடுத்து மாட்டிகிட்டேன் (அதான அதோட சிறப்பம்சமே). இப்போ லேட்டஸ்ட்டா 'சுவாரசிய பதிவர் விருது' நம்ம இம்சை அரசர் ஆரம்பிச்சி வைச்சிருக்கார்(நட்பு விருது கூட ஒண்ணு உலாவிகிட்டு இருக்குதுங்கோ). நானும் ஆரம்பத்துல ரொம்ப சீரியஸா எடுத்துக்கல, அது ஒரு 'காமெடி பீஸு'ன்னு நினைச்சி விட்டுட்டேன். ஆனா மக்களே, பதிவுலகமே பத்தி எரிஞ்சி, ரணகளமா ஆகிக் கிடக்கிற(!) இந்த நேரத்தில இந்த மாதிரி ஒரு விருது எதுக்காக? யாராவது யோசிச்சீங்களா?


இப்படி வாங்க, உட்கார்ந்து சாவகாசமா பேசுவோம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'பிரபலம்'ங்கற வார்த்தை பிரபலமானது உங்க எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி முன்னை விட கொஞ்சம் சுவாரசியமா இப்போ இந்த வார்த்தை பதிவுலகத்தில புழங்கிகிட்டு இருக்கு (அட இதுவும் உங்களுக்குத் தெரியும்). இந்த மாதிரி நேரத்தில ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கிற பிரபலங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் - எந்த பிரபலத்தைத் தாக்குவது என்கிற குழப்பம் ஏற்படும்தானே?

இந்த மகா உன்னதமான நோக்கத்தோடுதான் எங்க அண்ணன் இந்த விருதை வாரி வாரி வழங்கி எல்லாரையும் பிரபலப் படுத்தணும்னு ஆசைப்படுகிறார். ஆனா நான் இதிலெல்லாம் சிக்கிடுவேனா என்ன? அதனாலதான் இம்புட்டு நாளா வலதுபக்கமா கீழ இருந்த இந்த 'கரப்பான் பூச்சி வருத' மேல தூக்கிட்டு வந்திருக்கேன். அதனால மக்களே, உங்க எல்லாருக்கும் சொல்லிக்க விரும்புறது என்னான்னா, இந்த விருது கிருதெல்லாம் கொடுத்து என்னை பிரபல பதிவராக மாற்றி வம்புல இழுத்து விட்டுடாதீங்க-ங்கறதுதான்.

மக்களே, பிரபலப் பதிவர்களின் மேல் யாராவது 'காண்டா' க இருப்பது தெரிந்தால் முதலில் இந்த மாதிரி விருது சமாச்சாரங்களை டக்குன்னு அவர்களுக்குத் தந்து நாலைஞ்சு குத்து குத்தி (தமிலிஷ் - தமிழ்மணத்துல ங்க) சீக்கிரத்திலயே 'பிரபல' பதிவரா மாத்திவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். :) ஹிஹிஹி...

இந்த இடுகைக்குக் குத்தாதீங்க...ப்ளீஸ். முடிஞ்சா தமிழ்மணத்தில "-" ல வரவைங்க! :)

12 comments :

ஸ்ரீ.... said...

விருது வேணுமா? வேணாமா?

ஸ்ரீ....

நட்புடன் ஜமால் said...

இன்னாதான் சொல்லுதிய ...

வால்பையன் said...

உங்களுக்கு யாரும் கொடுக்கலையா!

அப்ப நீங்க தான் அடுத்த பிரபலம்!

சென்ஷி said...

:))))))))))

ராஜா | KVR said...

உங்க இடுகை படிச்ச பாதிப்புல நானும் ஒண்ணு போட்டுட்டேன் (இடுகையை தான்)

ஷ‌ஃபிக்ஸ் said...

அங்க சுத்தி, இங்க சுத்தி, விருது மேலேயே கைய வச்சுட்டீரா? விருது வழங்குவோர் சங்கத்திலிருந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!!

ஊர்சுற்றி said...

ஸ்ரீ, நட்புடன் ஜமால்,

வேண்டாம் வேண்டாம்...தயவு செய்து என்னை பிரபல பதிவரா மாத்திடாதீங்க!
:)

வால்பையா,
ஐயகோ! பிரான்ஸ் தேசத்திலே கி.பி.1888ல் பிறந்த அந்த .... விடவா நான் பிரபலமாகப் போகிறேன்!

நன்றி சென்ஷி.

ஊர்சுற்றி said...

ராஜா,

உங்க பதிவில இருந்து நாமக்கல் சிபி அவர்களின் பக்கம்வரை சென்று வந்துவிட்டேன்.

எனக்கு 'எஸ்' ஆகத்தான் ஆசை. :)

ஊர்சுற்றி said...

ஷஃபிக்ஸ்,

சங்கத்தில செயற்குழுவ கூட்டுங்க...
நீங்க எதுனாச்சும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிற மாதிரி இருந்தா, இருக்கவே இருக்குது பதிவுலக லேட்டஸ்ட் டெக்னிக் - இடுகையை 'டெலிட்' பண்ணுவது.

:))))

அத்திரி said...

ம்ஹும்..........

ஊர்சுற்றி said...

வாங்க அத்திரி...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

:))))))))))))))))))