Tuesday, July 14, 2009

22-ம் தேதி சூரியகிரகணம் - உங்க வீட்டு நாய் ஒண்ணுக்கு போகாது!

வரும் 22ம்-தேதி முழு சூரியகிரகணம் நிகழவிருப்பதால் பூமியில் பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் வீட்டு பைப்பில் தண்ணீர் வராது, பக்கத்து வீட்டுப் பெண் மொட்டை மாடியில் வந்து செல்போன் பேசமாட்டாள், நீங்கள் திருட்டுத் தனமாய் சைட் அடிப்பதை உங்கள் மனைவி பார்த்துவிட வாய்ப்பு இப்படி எல்லாமே கெட்டதாய் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

முக்கியமாக 'பூச' நட்சத்திரத்தில் பிறந்த நாய்கள் எல்லாம் 7.5 (7 1/2) சனி ஆட்சியில் உள்ளன. இவைகளுக்கு முக்கியமான பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக இவை ஒண்ணுக்குப் போவதில் நிறைய சிக்கல்கள் வரும். எனவே பக்கத்தில் உள்ள கம்பமோ, கல்லோ - நீங்களே சென்று ஒரு அர்ச்சனை செய்துவிடுவது நல்லது (பூசாரி 7 1/2 ல இருக்காரோ 8 1/2 ல இருக்காரோ - அவர் எந்த நட்சத்திரத்தில பிறந்தாரோ யாருக்குத் தெரியும்! அவரும் பரிகாரம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் அர்ச்சனை பலிக்காமல் போகலாம்).

இந்த ரேஞ்சில் 'தினத்தந்தி' சென்னை பதிப்பில்5-ம் பக்கத்தில் இன்று 'ஜோதிடர் கணிப்பு' ஒன்று வெளியாகியுள்ளது. மைக்கிள் ஜாக்ஸன் இறப்பு உள்பட உலகத்துக்கே பல முன்னறிவிப்புகளை அறிவித்து அகில உலக புகழ்பெற்ற(!!!) ஜோதிடமணி 'நம்புங்கள் நாராயணன்' சொன்னதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

2000 வது ஆண்டில் 4 சூரியகிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழ்ந்ததாம், அதனால் நிறைய விபத்துகள் பேரிடர்கள் ஏற்பட்டனவாம்.

1980-ல் சூரியகிரகணம் ஏற்பட்டதாம், அடுத்தநாளே எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டதாம்(அடங்கொய்யால, இது அவருக்குத் தெரியுமா!). 1898-ல் ஏற்பட்ட கிரகணத்தால் இந்தியாவில் 'பிளேக்' பரவியதாம்.

பல லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சந்திரனால் நிகழும் நிகழ்விற்கு, பக்கத்து தெருவில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 'சிவன்-பார்வதிக்கும்' சனீஸ்வர பகவானுக்கும் அர்ச்சனை செய்வது பரிகாரம் என்கிறார் இந்த 'பிரபல' ஜோதிடர்.

பரிகாரம் செய்து உங்கள் வீட்டு நாயையும் உங்களையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

''சூரிய தேவனே போற்றி போற்றி - உன் வீரியத்தைக் குறைப்பாய் போற்றி!'' - ''பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, சூரிய கிரகணத்தின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பீராக!''.

6 comments :

ஷ‌ஃபிக்ஸ் said...

கிரகணம் எதுவும் செய்யுதோ இல்லையோ, நம்மாளுங்க அத வச்சு என்னனவோ செஞ்சுருவாய்ங்க, நல்ல நகைச்சுவையுடன் கூடிய பதிவு.

லவ்டேல் மேடி said...

இந்த கிரகணத்துக்கு அப்புறம் அவுருனால பேசவே முடியாதாம் .....!! இது அவருக்கு தெரியுமா ....??


காரணம் : ஒரு நாள் இல்லாம ஒரு நாள் , மக்களெல்லாம் சேர்ந்து இந்த ஈருகுச்சி மண்டையனோட வாய கிழிக்கப் போரானாக.......!!!

புருனோ Bruno said...

இவர்கள் எல்லாம் தேர்தலுக்கு முன்னர் கூறிய விஷயங்களுக்கு தேர்தல் முடிவுகளுக்கும் தூரம் எவ்வளவு

ஊர்சுற்றி said...

ஷஃபிக்ஸ், லவ்டேல் மேடி, புருனோ

உங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....

சொல்லப்போனா இந்த இடுகையை நான் அப்படியே மறந்துபோய்ட்டேன். தாமதமாக பதிலிட்டதற்கு மன்னிக்கவும்.

M.S.E.R.K. said...

இப்பொதுத் தான் படித்தேன்..நல்லப் பதிவு. இதுக்கு அவங்களை .........பாலே அடித்திருக்கலாம். அப்பவும் உறைக்காது இந்த முண்டங்களுக்கு. அடிக்கடி போட்டுகிட்டே இருங்க நண்பா!

ஊர்சுற்றி said...

நன்றி M.S.E.R.K.

அடுத்தும் ஆரம்பிச்சாச்சி... வாங்க நீங்களும் வந்து கும்முங்க.