தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலர்மீது எனக்கு, பேசித் தீராத கோபம் இருந்து கொண்டிருக்கின்றது. அது, காதல் காட்சிகளை இவர்கள் படமாக்கும் விதம். காதல் காட்சிகள் என்று சொல்வதைவிட 'காதல் அரும்பும்' காட்சிகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
மிகச் சமீபத்திய உதாரணம் 'அயன்'. ஒரு பையனைப் பார்த்த இரண்டாவது சந்திப்பிலேயே 'எதையோ வச்சிட்டு வந்திட்டேன், தொலைச்சிட்டு வந்திட்டேன்' என்று சொல்வதா காதல். சிறிது நாட்களுக்கு முன் 'படிக்காதவன்' என்றொரு படம். அதில் கதாநாயகனுக்கு காதல் வருவதாகக் காட்டப்பட்ட காட்சிகள் கொடுமையிலும் கொடுமை. காதல் செய்து கொண்டிருக்கும் அல்லது காதல் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் அன்பர்கள் யோசிக்க வேண்டிய விசயம். (அயன் - விமர்சனங்களில் இந்தக் கொடுமையெல்லாம் கவனித்து எழுதிய அன்பர்களுக்கு பாராட்டுக்கள்).
தமிழ்ப்பட இயக்குனர்களே, தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த மாதிரி காட்சிகளை எடுக்கும் நீங்கள் 'காதலே செய்யாதவர்களா?' அல்லது 'காதல்னா என்னான்னு தெரியாதவர்களா?'
காதலுக்குச் சரியான காரணமில்லாமல், நாயகன் - நாயகி என்கிற ஒரே அடையாளத்துக்காக மட்டுமே காதல் வரும் இந்த மாதிரி படங்களின் லிஸ்ட் போட்டால், திண்டிவனம் வரை வரும்... முக்கியமா 'பொல்லாதவன்', 'போக்கிரி', 'சிவாஜி'....ன்னு இந்த வரிசை மிக நீளமானது (விழுப்புரம் தாண்டி போகும்னு நினைக்கிறேன்). சொல்லப்போனால் இந்த மாதிரி இயக்குனர்களால் காதலே இல்லாத காதல்கள், இளம் பருவத்தினரிடையே நஞ்சுபோல் தூவப்படுகின்றன. இந்த மாதிரி கொஞ்சமும் இயல்பே இல்லாமல் முற்றிலும் செயற்கைத்தனமாக துளிர்விடும் காதல் காட்சிகளை வைத்துப் பார்க்கும் போது, 'கேடி' போன்ற படங்கள் எவ்வளவோ மேல் (தமிழில் 'இலியானா' நடித்த ஒரே படம் :) ).
'கண்ட நாள் முதல்' படத்தில் வருவது போன்ற இயல்பான காதல்களை ஏன் பெரும்பாலான இயக்குனர்களால் தர முடியவில்லை?
காதல் துளிர்க்கும் காட்சிகள்தான் உங்களுக்கு சொதப்புகின்றன என்றால் கதாநாயகனையும், நாயகியையும் நேரடியாகக் காதலிக்க விட்டு விடலாமே!(அயன் போன்ற படங்களில் இது ஒத்துவரும்!)
***'அடப்போடா, நாங்க என்ன நாட்டுல நடக்காததையா காட்டுறோம்? பொத்திட்டு போடா'
***'காதல் -னா இதுதான் என்று வரையறை செய்ய நீ யாரடா?'
என்றெல்லாம் நீங்கள் கேட்பது என்காதில் விழுகிறது.
ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், 'இதெல்லாம் காதல் இல்லை' என்று நான் சொல்லிவிட முடியும்தானே?!
உங்களுக்கும் இதேபோல் ஏதேனும் 'பேசித்தீராத'(!) கோபங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள் .
22 comments:
ம்ம்..ஒரு முடிவாத்தான்யா இருக்கீங்க..!
மச்சான் என்னா இது அவரு அப்படி வச்சது உடன் பாடு இல்லை, ஆனா பின்னாடி சூர்யா தமனா மீது சந்தேக பட இந்த காட்சி உதவியது
நீங்கள் குறிப்பிடும் அயன் படம் காதல் படமல்ல, இரண்டரை மணி நேர ஆக் ஷன் படத்தில், காதல் காட்சிகளுக்கு இருபதி நிமிடங்களுக்கு மேல் ஒதுக்கினால் திரைக்கதையில் தொய்வு விழும் (பாடல் காட்சிகள் தனி, அது ரசிகர்களை ஆசுவாச படுத்த).
அதனால் தான் காதலை மையமாக இல்லாத எந்த ஒரு ஆக்ஷன் படித்திலும் காதல் காட்சிகளுக்கு அதிக சீன்களையோ, சிரத்தையோ எடுக்க மாட்டார்கள். கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் கடத்திக் கொண்டு போக ஹீரோவின் காதலி வேண்டும்,அவ்வளவு தான் :)
காதலுக்கு கண் இல்லீங்க.அதனால காரணமும் இல்லீங்க.
சினிமாவுல போட்ட காச எடுக்கனம்.
அதுக்காக, gone with the wind,laila
majnu, ambikapathy amaraavathy,
தேவதாஸ், காதல் காட்ட முடியாதுங்க. இப்ப fast food/ATM
generation ங்கோ!
எங்க ஸ்கூல்ல ஒரு பொண்ணுக்கு பையன் மேல காதல் வந்திச்சு.எப்போ?
பையன் பொண்ணோட டிபன் பாக்ஸ
திறந்துக் கொடுக்க உதவிய போது.
காதல்?? ஐயோ.. அது கெட்ட வார்த்தையாச்சே!!:)
எனக்கு கூட இந்த மாதிரி அபத்தமான காதல் காட்சிகளை பார்க்கும் போது எரிச்சலா வரும். எதுக்குடா நீங்க எல்லாம் படம் எடுக்குறீங்கன்னு கூட தோணும். என்ன பண்றது, எல்லாம் நம்ம தலை எழுத்து. உண்மையை சொல்லனும்னா அலைபாயுதே, மவுனராகம், மாதிரியான அழகான காதல் படங்களே ஏன் வர்றது இல்லை?
அட அவுங்களுக்கு என்ன வியாபார நிர்பந்தமோ ??? விடுங்க..
புடிக்கலனா பாக்காதீங்க.. (எதுக்கு தேவ இல்லாம பி.பி. ஏத்திக்கிட்டு..?? நம்ம ஃபார்முலா இதுதாங்க:-)
'பேசித்தீராத' என்ற வார்த்தையை ஆதிமூலகிருஷ்ண்னன் அவர்களின் இடுகையிலிருந்து உருவியதற்கு, முதற்கண் அவருக்கு நன்றி.
டக்ளஸ்,
நன்றி.
சுரேஷ்,
ஆனாலும், காதல் அரும்பியவிதம் முற்றிலும் மொக்கை.
Bleachingpowder.
நீங்க சொல்றது சரிதான்... ஆனா அந்த 20 நிமிஷத்தையும் நம்புறமாதிரி வைச்சா நல்லாயிருக்குமேங்கறதுதான் என் ஆதங்கம்.
அப்புறம்
//கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் கடத்திக் கொண்டு போக ஹீரோவின் காதலி வேண்டும்,அவ்வளவு தான் :)// :))))
ரவிஷங்கர்,
//டிபன் பாக்ஸ
திறந்துக் கொடுக்க உதவிய போது.//
டிபன்பாக்ஸ்-க்குள் மறைந்திருந்த காதலா?!!!
Thamizhmaangani,
நீங்களா இப்படி பேசுவது?!!!
Manikandavel,
கடைக்குட்டி,
நன்றி நன்றி...
கடைக்குட்டி,
//புடிக்கலனா பாக்காதீங்க.. //
அப்புறம் வருடம் முழுக்க, விரல்விட்டு எண்ணுற படங்கள்தான் பார்க்கமுடியும்!!! :)
repeatu bleachingpowder.. 20 nimishathula 2 paatu vera vandhaaganum.. so micham 10 nimishathula fantasy thaan kamika mudiyum ;-) .. ipdi mokkai irundha thaney poludu pogum..
Love mainstream iladha padangal-la logical/reality-ya love scenes irundhadhuku example iruka ?! need to check & see
போட்டு தாக்கிவிட்டீர்கள் :)
//நீங்க சொல்றது சரிதான்... ஆனா அந்த 20 நிமிஷத்தையும் நம்புறமாதிரி வைச்சா நல்லாயிருக்குமேங்கறதுதான் என் ஆதங்கம். //
அப்படி நேரம் இல்லை என்றால் அவர்கள் ஏற்கனவே காதலித்துக்கொண்டிருப்பதாகவே காட்டலாமே (உதாரணம் - ஆய்த எழுத்து சூர்யா)
நெம்ப கரக்க்டுங்க தலைவரே...!!! " கண்ட நாள் முதல் " , " பூ " , இதெல்லாமும் நெம்ப இயல்பான காதல் கதைங்கோ...!!!!
ரோட்டுல பீடா கட வெச்சுருப்பான் ஹீரோ.... செருப்பு தேச்சுகிட்டு இருப்ப ஹீரோயின்... ஆனா ரெண்டுபேரும் லிப்ஸ் ஸ்டிக் போட்டுருப்பாங்க , டூயிட்டுக்கு சுவிஸ் , ஆஸ்திரேலியா , அமேரிக்கா போவாங்கலாமாம்.... !! ரொம்ப கொடும....
”அழகிய தீயே”
கதலை பற்றி என்ன நினைக்கிறிங்க!
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!
யாத்ரீகன், (நீங்களும் நிறைய ஊர் சுற்றுவீங்களா?)
கருத்துக்கு நன்றி.
நீங்க கேட்கிற மாதிரி படங்கள் கட்டாயமா நிறைய இருக்கு. பாட்ஷா-சரியா?
புருனோ சார்,
//அப்படி நேரம் இல்லை என்றால் அவர்கள் ஏற்கனவே காதலித்துக்கொண்டிருப்பதாகவே காட்டலாமே (உதாரணம் - ஆய்த எழுத்து //
இதை நான் இடுகையிலேயே சொல்லணும்னு நினைச்சேன், நீங்க சொல்லிட்டீங்க..!!! ஹிஹிஹி... :)
வாங்க லவ்டேல் மேடி, வால்பையா....
நீங்க சொன்ன படங்கள் உண்மையிலேயே நல்ல படங்கள். எனக்கும் அவை மிகவும் பிடித்த படங்கள்.
குறிப்பா - அழகிய தீயே படத்தின் 'விழிகளின் அருகினில் வானம்...' பாட்டு எப்போவும் என்னுடைய விருப்பம்... படமும் இயல்பா இருக்கும்.
நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
இது நம்ம ஆளு...
வந்துட்டோம்ல. :)
அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்
Post a Comment