*வலையில பதிவெழுத ஆரம்பிச்சவங்க யாராவது இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கும்னு நெனைச்சி பார்த்தீங்களா?
*அவனவன் மொத்த பதிவுக்கும் அஞ்சாறு பின்னூட்டம் வாங்கும்போது ஒரு மொக்கை பதிவுக்கு இந்த சம்பவம் நடந்துகிட்டிருக்கே, இது உங்களுக்குத் தெரியுமா?
*பக்கம் பக்கமா எழுதினாக்கூட பார்த்து வாசிச்சிட்டு..... ப்பூ.. இவ்வளவுதானா, இதான் எனக்குத் தெரியுமே-ன்னு சொல்லிட்டு ஒத்த பின்னூட்டம் கூட இடாமல் போகும்போது, ஒண்ணுமே இல்லாத ஒரு இடுகைக்கு இந்த சம்பவம் நடந்துகொண்டிருப்பதை என்னன்னு சொல்றது?
*இன்னமும், ஒருவித வெறியோடு(!!!) 10,000 அடிச்சுட்டுதான் ஆட்டத்தை கலைப்போம் (அப்பவாவது கலைப்பீங்களா!!!) என்று வீரசபதம் எடுத்திருக்கும் எம்குலச் செம்மல்களை 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்'(!!! தேர்தல் நேரமப்பா... அப்படித்தான் வாயில வருது).
இந்த எல்லாத்துக்கும் காரணகர்த்தா, நம்ம அதிரை ஜமால் ஏற்கெனவே மொத்தமாக 10,000 பின்னூட்டங்களை தாண்டி விட்டார். மேலும் ஒரு 10 வரிக்கவிதையிலேயே(கவிதையா!!) 10,000 பின்னூட்டங்களை வரவைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு, என் மொக்கையான, ஆச்சரியம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
18 comments:
great success.
hi. how did u do that?
pinnootta mannan vaalga
மிக்க நன்றிங்கோ
அனைவருக்கும்.
தமிழ்நெஞ்சம் அவர்களே,
ஜமால் எதுவும் பண்ணல, எல்லாம் சமூகம் செய்த்து. செய்து கொண்டிருக்கிறது!!! ஹிஹிஹி....
:))))
ஜமால்,
ஜமாய்ங்க...!
விடக்கூடாது... 10,000த்தை.
\\ஜமால் எதுவும் பண்ணல, எல்லாம் சமூகம் செய்த்து. செய்து கொண்டிருக்கிறது!!! ஹிஹிஹி..\\
உண்மைதான்
தங்களுக்கும் அவர்களுக்கும் என்றென்றும் நன்றிகள்
ungalukum athu mathiri commets venuma solluga anna
ஹா ஹா ஹா
pinnootta mannan vaalga
வாழ்த்துக்கள் ஜமால்
என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்ட காயத்ரிக்கு நன்றி...
இப்போதைக்கு அந்த மாதிரி எதுவும் கும்மி வேண்டாமம்மா!!! நான் ஏதாவது மொக்கை இடுகைகள் இட்டால் தாராளமாக வந்து பின்னூட்டத்தில் கும்மு சகோதரியே. :)
சக்தி,
க்யூட் பேபி.... உங்களோடு சேர்ந்து ஜமாலை நானும் வாழ்த்துகிறேன்.
ஜமால்,இப்பிடி ஜமாய்க்கிறாரே.
வாழ்த்துக்கள்.போட்டி போட்டுத் தூங்காம முழிச்சிருந்து கும்மி அடிக்கிற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
அதுதான் என் பக்கம் யாரையுமே காணோம் இண்ணைக்கு.உப்புமடச் சந்தி வெறுமையாய் போய்க்கிடக்கு.
:)
இது ரிக்கார்டு பிரேக்!
இந்த அளவுக்கு யாரும் பின்னூட்டம் வாங்கியதில்லை!
//அதுதான் என் பக்கம் யாரையுமே காணோம் இண்ணைக்கு.உப்புமடச் சந்தி வெறுமையாய் போய்க்கிடக்கு.//
ஹேமா... அதேதாங்க... இன்னும் சிலநாட்களுக்கு மத்த பதிவுகளில் பின்னூட்ட பஞ்சம் இருக்கலாமென்று பதிவுலக இடுகைகளின் வானிலை அறிக்கை சொல்கிறது..!!!
வாங்க கோவி.கண்ணன். நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லை. வருகைக்கு நன்றி.
வால்பையா இது எப்பவுமே முறியடிக்க முடியாத ரெக்கார்டா மாறிடுமோ??!!!
ஜமாலுக்கு வாழ்த்துகள். எவ்வளவு பேருக்கு எத்தனை ஊக்கப் பின்னூட்டம் போட்டிருப்பார்? அதுவே அவருக்குத் திரும்பக் கிடைக்கிறது.
என் நினைவில் கவாஸ்கர் தான் முதலில் 10,000 அடித்தது. அது சரியாக இருக்கும் பட்சத்தில் ஜமாலை கவாஸ்கர் என்றுதானே அழைக்க வேண்டும்?
அனுஜன்யா
//அனுஜன்யா said...
ஜமாலுக்கு வாழ்த்துகள். எவ்வளவு பேருக்கு எத்தனை ஊக்கப் பின்னூட்டம் போட்டிருப்பார்? அதுவே அவருக்குத் திரும்பக் கிடைக்கிறது.//
அப்படியா சங்கதி!!!
//என் நினைவில் கவாஸ்கர் தான் முதலில் 10,000 அடித்தது.//
நமக்கு இந்த கிரிக்கெட்டுன்னாலே அலர்ஜிங்க. முதலில் 10,000 எடுத்தது யார் என்றெல்லாம் தெரியாது. கூகிளாண்டவரிடம் தேடி பெயரை எடுத்துக் கொண்டேன். நம்மூர் காரர்கள் முதலில் எடுத்திருக்க மாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கையிலும், முக்கியமாக, ஆலன், அதிரை... மோனைக்காகவும் அவரது பெயரை எடுத்துக் கொண்டேன். (இந்த மாதிரி ஆயிரக்கணக்கிலை எண்ணிக்கையே இந்த விளையாட்டில்தான் வருகிறது என்று நினைக்கிறேன், வேறு ஏதாவது இருக்கிறதா என்ன?).
Post a Comment