Monday, March 9, 2009

யார் இந்த 'ஜோ' மல்லூரி?!!!

இந்த வருட சென்னை புத்தகக் காட்சிக்கு வந்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.

தனி அரங்கில், முகம் முழுக்க தாடியுடன் தமிழ்த்தாய்க்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார். (நுழைவாயில் புகைப்படங்க்ளில் தாடி இல்லாமல், அது உங்கள் பார்வைக்கு இங்கே). 'ஜோ' அவர்களின் அரங்கத்தில் புத்தகத்தின் ஒலிவடிவமோ (அ) புத்தகத்தை பற்றியோ எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.



கடந்த மாதத்தில் 'திருநெல்வேலி' சென்றிருந்த போது, அங்கு நடந்துகொண்டிருந்த 'மனோ' புத்தகத் திருவி்ழா - வை காணும் வாய்ப்புக் கிடைத்தது. அரங்குகள் 'மே'மாதக் கல்லூரி வளாகம் போல காட்சியளித்தாலும் அங்கேயும் பின்னணி ஒலியுடன் ஒரு அரங்கு இருந்தது. வேறு யாருமல்ல, நம்ம 'ஜோ மல்லூரி' அவர்களுடையதேதான்.

தாய்மடித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனராம், கவிஞராம், இன்னும் என்னென்னவோ?

யாராவது இவரை பற்றி மேலதிகத் தகவல்கள் தந்தால் தேவலை! இவருடைய வரலாறு தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது.

டிஸ்கி:
இவரை பார்த்ததும் அல்லது இவரை பற்றி கேள்விப்பட்டதும், சில பல 'கவிஞர்'களோ அல்லது மிகச் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய மூன்றெழுத்தில் சுருக்கமாக அழைக்கப்படும், பதிவர்களின் 'ஆல் டைம் ஃபேவரிட்' நடிகரோ உங்கள் ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

2 comments:

Anonymous said...

ஜோ மல்லூரி, பெயரே புதியதாய் கேள்விபடுகின்றேனே... நீங்க சொல்றது உண்மைதான்... பார்த்ததும் எதோ ஒரு ஆக்டர் போலவே இருக்கிறார்.. :)

ஊர்சுற்றி said...

ஷீ-நிசி அதாங்க எனக்கும் புரியல!!!