Wednesday, March 18, 2009

விளம்பர உலகம் - திரை விமர்சனம்

படங்கள் அதிகமாகப் பார்ப்பதாலும், திரை விமர்சனம் பற்றிய இடுகைகள் கண்ணில் அதிகமாகப் படுவதாலும் (படிப்பதாலும்) தலைப்புல டங் ஸ்லிப்பாகிடுச்சுப்பா.. :)

'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' புத்தகத்தை பற்றி 'லக்கி' அவர்கள் முதல் இடுகை இட்டபோது, இது ஏதோ 'டுபாக்கூர்' இடுகை என்றுதான் நினைத்தேன். அதற்கு பலபேர் வாழ்த்து தெரிவித்தபோதுதான் லக்கி அவர்களின் 'சுயரூபம்' (!!!) புரிந்தது. நம்ப லக்கி அவர்களிடம் இவ்வளவு 'சரக்கு' இருக்கான்னு நினைச்சப்போ அப்படியே புல்லரித்தது. பலநாட்கள் லக்கி அவர்களின் சாதனைகளையும் சோதனைகளையும் ஒரு வாசகனாகவும், இப்போது சிறிது நாட்களாக சக பதிவனாகவும் கவனித்துக் கொண்டிருப்பதால்(அவர்கள் தி.மு.க.வில் இருக்கும்போதும் சரி இப்போதும் சரி - ஏப்ரல் மே மாதங்களில் லக்கி அவர்கள் மாம்பழம் விற்க போவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்கி அவர்களே இதை ஒரு பதிவர் கூட்டத்தில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்) அவரது இந்த முதல் முயற்சியை விமர்சிக்காமல் இருந்து, 'வலையுலக காளி' யின் சாபத்துக்கு ஆளாக நான் விரும்பவில்லை. எனவே... (கொஞ்சம் மூச்சு வாங்குது...) நாம் விமர்சனத்துக்கு வருவோம்.

சுண்டி...
விளம்பரங்களை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி தெரிந்து கொள்ள இயல்பாகவே ஆர்வம் தோன்றும். இந்த ஆர்வத்தை சரியாக பயன்படுத்தி முதல் அத்தியாயத்திலேயே வாசகர்களை 'சுண்டி' இழுத்து விடுகிறார் ஆசிரியர். விளம்பர உலகத்தை பற்றி சரியான அறிமுகத்துடன் அதன் வரலாற்றை இழுத்து வந்துவிடுகிறார். இந்த வரலாறு கூட 'மௌரியர்கள்' - 'ராஜபுத்திரர்கள்' என்று தூக்கத்தை வரவழைக்காமல் சுவாரசியமாக இருப்பது புத்தகத்திற்கு பலம்.

இழுக்கும்...
இந்த உலகத்தில் யாரெல்லாம் இயங்குகிறார்கள், எங்கிருந்து இதன் வேர் ஆரம்பிக்கிறது, எங்கே கிளை விரித்து பரவுகிறது, இதன் கனிகளை யார் ருசிக்கிறார்கள் - நீங்களும் இங்கே பழம் பறிக்க முடியுமா என வாசகனை இந்த தலைப்புடன் ஒன்றித்துவிட வைப்பதில் வெற்றி பெற்றுவிடுகிறார் 'யுவகிருஷ்ணா'.

விளம்பர உலகம்...
புத்தகத்தின் கடைசி கட்டத்திற்கு வரும்போது 'ஹாரிபாட்டரின் மாயஉலகம்' போன்ற ஒரு பிரமிப்பு நிச்சயம் எல்லா வாசகர்களுக்கும் (இந்த துறை பற்றி புதிதாக படிப்பவர்களுக்கு) வரும் என்பது என் நம்பிக்கை. கூடவே, இந்த துறையில் உள்ள பணிகள் என்னென்ன, இங்கு நுழைவது எப்படி, என்னென்ன படித்திருக்க வேண்டும் என்ற எல்லா அடிப்படை கேள்விகளுக்கும் பதிலை வைத்திருப்பதால் - புத்தகத்தை படித்துவிட்டு பரணில் வைத்துவிட மனது வரவில்லை.இவ்ளோ இருந்தாலும், புத்தகத்தை படிக்கும் போது (பாதி தூரத்தில்) டார்கெட் ஆடியன்ஸ், மார்க்கெட், கணிப்பு, புள்ளிவிவரம் போன்ற விடயங்கள் திரும்ப திரும்ப (திரும்ப திரும்ப) வருவது மட்டும் கொஞ்சம் போரடிக்கிறது. மற்றபடி ஒரு புது உலகத்தை பற்றிய அனுவத்தை இந்த புத்தகம் உங்களுக்கு தருவது உறுதி. தமிழில் இந்த விதமாக ஒரு புத்தகத்தை தந்த லக்கிலுக் என்ற 'யுவகிருஷ்ணா' வுக்கு நாம் எல்லோரும் நன்றியையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சொல்லியே தீர வேண்டும்.

வாழ்த்துக்கள் லக்கி, sorry 'யுவகிருஷ்ணா'.நூலின் பெயர்: சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
ஆசிரியர் : லக்கிலுக் (அல்லது) யுவகிருஷ்ணா
பக்கங்கள் : 152
விலை: ரூ 70.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

5 comments :

வால்பையன் said...

//லக்கி அவர்கள் மாம்பழம் விற்க போவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்கி அவர்களே இதை ஒரு பதிவர் கூட்டத்தில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்//

இதுல எதாவது உள்குத்து இருக்கா?
விளம்பர உலகம் அட்டைபடம் ஏன் தலைகீழா இருக்கு? அதுல எதாவது நுண்ணரசியல் இருக்கு?

ஒன்னுமே புரியலையே!

Anonymous said...

வால்பையன் கேட்டது போல விளம்பர படம் ஏன் தலைகீழ் நிலையில்..??

ஊர் சுற்றி said...

வாங்க வால்பையன், ஷீ-நிசி

'உள்குத்து' - 'வெளிக்குத்து' எல்லாம் குத்தும் இருக்கு.
'நுண்ணரசியல்' - 'பின்னரசியல்'
'நேனோ' அரசியலே இருக்கு!!!

ஹிஹிஹி... :)

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

லக்கியின் புதிய நூல் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி

ஊர் சுற்றி said...

நன்றி டாக்டர்.