Thursday, February 19, 2009

கலைஞருக்கு 35 ஜெவுக்கு 5 - ஆச்சரியமான முடிவுகள்!

தலைப்பை பார்த்ததும், இது ஏதோ 'திமுக' ஆதரவு கருத்துக் கணிப்பு என்றோ, அல்லது 2009, ஏபரல் 10-ம் தேதியிட்ட 'தினகரன்' நாளிதழில் வெளிவரக் காத்திருக்கின்ற கருத்துக் கணிப்பு என்றோ எண்ணவேண்டாம்.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில(பல)வாரங்களில் வரவிருக்கின்றது. பல பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக்கொண்டு கருத்துக் கணிப்புகளை வெளியிட காத்திருக்கின்றன. நானும் முந்திக்கொண்டு, சும்மானாச்சுக்கும் இந்த கணிப்பை வெளியிடுகிறேன். என்று நீங்கள் கணித்தால்.... ம்ஹீம். அதுவும் இல்லை.

தலைப்பில் குறிப்பிட்ட எண்களை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் 'திருநெல்வேலி' வரை வரவேண்டியிருக்கும். அப்படியே காலாற போய் தெரிந்து கொண்டு வரலாம் வாருங்கள்.

கடந்த வாரம் நெல்லை வரை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஜங்கசனில் இருந்து 'புதிய பேருந்து நிலையம்' (?!!! 2002 லேயே திறந்து அது இப்போ அரதப் பழசாகி விட்டது, இன்னமும் இப்படியேதான் கூப்பிடறாங்கப்பா) வரை செல்ல பேருந்தில் ஏறினேன்.

அப்போது காதில் விழுந்த இரு சக பயணிகளின் உரையாடல் இதோ உங்கள் பார்வைக்கு...

'இந்த பஸ்லதான்யா எல்லா கூட்டமும் ஏறுது'
'ஆமா காத்திருந்துலா ஏறியிருக்கு'
'மெட்ராஸ்ல உட்ட மாதிறி இங்கேயும் பஸ் உட்டா யாரு ஏறுவா? இங்க எல்லாரும் சாதாரண வேலைக்குப் போறவனா இருப்பான், மூணு கிலோ மீட்டருக்கு 7 ரூபா கொடுக்கணும்னா யோசிக்க மாட்டானா ? LSS லயே 5 ரூபாதான் வாங்கறான்.'
'இந்த மந்நிரிகளுக்கெல்லாம் என்ன தெரியும், அவனுவ பாட்டுக்கு A.C. காருல வந்துட்டு போயிடுவானுவ'

பேருந்தை விட்டு கீழே இறங்கிய பின் இன்னுமொரு இடத்தில்....

'அது என்னது கருணாநிதி பஸ் - ஜெயலலிதா பஸ் ?'
'ஜெயலலிதா ஆட்சியில உட்டது அந்த பச்சை கலர் பஸ். இப்போ கலர் கலரா டிக்கெட் வெலையெல்லாம் கூட வச்சி வார பஸ்-லாம் கருணாநிதி பஸ்'

நான் நிதானமாக உட்கார்ந்து கணக்கு எடுத்ததில் 6 கருணாநிதி பேருந்துகளைத் தொடர்ந்து 1 ஜெயலலிதா பேருந்து வந்தது.
6:1 = 35:5 (தோராயமாக).

செய்தி 1:
'தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயராமலேயே தரமான போக்குவரத்துச் சேவை' - கடந்த வாரத்திலும்(!) வெளியான அரசு விளம்பரம்.
செய்தி 2:
முதல் கட்ட வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்பிலிருந்து எந்த வகை கருத்துக் கணிப்பையும் வெளியிடத் தடை - தேர்தலை ஆணையம்.

10 comments:

வாக்காளன் said...

6 : 1 = 30:5

7: 1 = 35:5

sothappiteengalae :)

ஊர்சுற்றி said...

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..."

ஹிஹிஹி....

கிரி said...

//2002 லேயே திறந்து அது இப்போ அரதப் பழசாகி விட்டது, இன்னமும் இப்படியேதான் கூப்பிடறாங்கப்பா//

:-)))

ஊர்சுற்றி said...

நன்றி கிரி...

ஊர்சுற்றி said...

அப்புறம் வாக்காளன் சார்,
சொல்ல மறந்துட்டேன்.

நான் தோராயமாக னு ஒரு வார்த்தையே (அடைப்புக்குறிக்குள்) கொடுத்திருக்கிறேன்.

மேலும் அந்த 35+5=40 (தமிழக மற்றும் புதுச்சேரி MP தொகுதிகளின் எண்ணிக்கை).
6:1 என்பது உண்மையாகவே நான் எண்ணிய பேருந்துகளின் எண்ணிக்கை.

இரண்டையும் இணைக்கும் போது...

அத்திரி said...

கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்த பொழுதுதான் கவனித்தேன்...... டீலக்ஸ் பேருதுகள் வலம் வருகிறது....... சென்னையிலதான் இந்த கொடுமைனா. இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்க.......... கண்டிப்பா இந்த மறைமுக கட்டண உயர்வுக்கு ஆட்சியாளர்கள் மக்களவை தேர்தலில் வாங்குவாங்க........

கலக்கல் பதிவு...........

மணிகண்டன் said...

நல்லா இருந்தது ஊர் சுற்றி

பாபு said...

எல்லா ஊரிலும் இதே நிலைதானா?
இந்த வேலையை,அதாவது மறைமுகமாக டிக்கெட் விலையை ஏற்றுவது , போன முறை ஆட்சிக்கு வந்தபோதே செய்தவர்தான் கலைஞர்

ஊர்சுற்றி said...

நன்றி அத்திரி.

ஆனா, தேர்தலில் இது எதிரொலிக்குமான்னு தெரியலயே!!!

ஊர்சுற்றி said...

நன்றி மணிகண்டன் & பாபு.