இடம்: சென்னை, வேளச்சேரி - விஜயநகர்.
இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் வந்துள்ள இளம் கன்னியர்/காளையர் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள சென்னை மாநகரின் முக்கியமான இடம் (திருவான்மியூர் - பெசன்ட் நகருக்கு அடுத்தபடியாக).
விஜயநகர் - தாம்பரம்
விஜயநகர் - தரமணி
விஜயநகர் - கிண்டி
கடந்த ஒரு வருடமாக கவனித்து வருகிறேன். இங்கு போக்குவரத்து போலீசார் குறைந்தது நான்கைந்து பேர் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள். தற்போது இங்கு புதியதாக போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் சிக்னல் நிறுவப்பட்டுள்ளது (வெள்ளோட்டமோ என்னவோ? - இதற்கு இவ்வளவு நாள் ஆனது மிகமிக அதிகம்)
அதை நன்றாக கவனித்தவர்களுக்கு தெரியும், 'நடை பயணிகளுக்கு' (பாதசாரிகள்) என்று தனியாக எந்த விளக்கும் இங்கு வைக்கப்படவில்லை. பெரும்பாலான வாகன ஓட்டிகள், குறிப்பாக மாநகர பேருந்து ஓட்டுனர்கள் இந்த சிக்னலை எல்லாம் மதித்ததாகவே தெரியவில்லை. நடை பயணி்கள் 'வளை'யிலிருந்து வெட்டிவிடப்(வெளிப்)பட்ட எலிகள் போல அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள். நடைபயணிகளுக்கு முன்னுரிமை - அதுகூட இல்லை, ஒரு அஞ்சு செகண்டாவது கொடுத்து, ஓட சொல்லியிருக்கலாம்.
"ஒரே 'ராக்கெட்'டில் 12 செயற்கைக்கோள்களை அனுப்புகிறோம், நிலவில் மனிதனால் செய்யப்பட்ட பொருளை இறக்கிய நான்காவது நாடு" என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் ஒரு முச்சந்தியில் 'சிக்னல்', - அதை ஒழுங்காய் வைக்க நமக்கு தெரியவில்லை.
ஒருசில 'Intel' அல்லது 'PIC' அல்லது ஏதோ ஒருவகை 'மைக்கரோகன்ட்ரோலரை' (Microcontroller) வைத்து, சிலநாள் அந்த இடத்தை பற்றிய 'கள ஆய்வு' மற்றும் சில வார உழைப்பு இவற்றுடன் செய்து முடிக்கிற வேலை. பல ஆயிரம் 'லூப்'புகள் உள்ள ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவத் தெரிந்த நமக்கு "இங்கே எங்கே 'லூப்' இருக்கிறது?" என்று தெரிந்துகொள்வது மிக அவசியமானது.
9 comments:
i thought to post a blog about this signal and the pedastriant problem but you did it.
crossing the road in vijaya nagar signal is a big issue.
the traffic police did a fair job before the signals.
appadippoduraa! oorsuttri! ozhunga oru signal vaikka theriyalla. aduththavan thaninaaddu pirachchanaiyaiyil maraimugama thalaiyiddu oru inaththu viduthalai poraaddaththaiye azhikkappaakkuraan.
the same kind of problem being faced by the people everywhere in tamilnadu..(all corporations)/may be Dist.hq.rs.)
will the department concerned look into it.
bask
DHANS,
தங்கள் கமென்டுக்கு நன்றி.
அனானி அவர்களே உங்களுக்கும் சேர்ததுத்தான்.
Not only in Vijaya Nagar. Most of the pedestrains face this problem in Chennai. In particular at T. Nagar. It's hectic.
வாங்க வண்ணத்துப்பூச்சியாரே.
நீங்க சொல்றது உண்மைதானுங்க.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்,
நம்மூர்ல சாலை விதிகளை மதிக்கிறவங்கதான் கஷ்டப்படவேண்டியதிருக்கு.
ஆமாம். நேற்று சைதையில் நடைபயணிக்களுக்காக என் பைக்கை நிறுத்தியதற்காக ஒரு பல்லவன் (டிரைவர் இல்ல பஸ்ஸே தாங்க} லைட்டா முதுகில் இடித்து போ என்கிறான்.
ஆண்டவா....
//லைட்டா முதுகில் இடித்து போ என்கிறான். //
அப்பப்பா - பதறிப்போயிட்டேன்!
நான் இன்னும் பெரிய லெவல்ல டீல் பண்ண ஆரம்பிக்கவில்லை. மாருதி800 போன்ற வாகனங்கள்தான் என்னை இடித்துக் கொண்டிருக்கின்றன.
TAMIL DATASHEETS
www.tamildata.co.cc
தமிழ் தரவுத்தாள் தளம்
Post a Comment