Monday, September 14, 2009

சிருகதை பட்டரையிள் பிள்ளைகள் - என்ன கொடுமை இது!

8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கண மின் புத்தங்களின் தொடுப்புகள் கீழே!

8-ம் வகுப்பு - தமிழ் இலக்கணம் என்ற பிரிவில்.
9-ம் வகுப்பு - தமிழ் இலக்கணம் என்ற பிரிவில்.
10-ம் வகுப்பு - தமிழ்த் துணைப்பாடம் என்ற பிரிவில்.
11-ம் வகுப்பு - சிறப்புத் தமிழ் என்ற பிரிவில்.
12-ம் வகுப்பு - சிறப்புத் தமிழ் என்ற பிரிவில்.

என்ன கொடுமை இது! சிறுகதைப் பட்டறை என்று வைத்துவிட்டு 'உங்களில் பிழையில்லாமல் தமிழில் எழுத எத்தனை பேரால் முடியும்' என்ற கேள்விக்கு பளிச்சென்று பதில் சொல்ல ஏன் யாராலும் முடியவில்லை?

யுவன் சந்திர சேகரும், பா.ராவும் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்கள் - பட்டறையில்.

பா.ரா. பேசும்போது, வலைப்பூக்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், 200 வலைப்பதிவர்களில் ஒருவர், தமிழில் பிழையின்றி எழுதுவதைக் கண்டுபிடிப்பதே(தேறுவது) மிகவும் கடினமாக இருக்கிறதென்றும் கூறினார்.

நானும் இந்தக் குட்டையில் ஊறிய மட்டைதான் என்று கூறிக்கொண்டு, எற்கெனவே இதுசம்பந்தமாக எனது பழைய இடுகை...

11 comments:

Dr.Sintok said...

//
பா.ரா. பேசும்போது, வலைப்பூக்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், 200 வலைப்பதிவர்களில் ஒருவர், தமிழில் பிழையின்றி எழுதுவதைக் கண்டுபிடிப்பதே(தேறுவது) மிகவும் கடினமாக இருக்கிறதென்றும் கூறினார்.//
இதே பாரா தான் தனது புத்தகத்தை ஆங்கில தினிப்போடு எழுதுவார்....அதுவும் எப்படி....பக்கத்தில் இருந்து பார்த்தது மாதரி...

அ. நம்பி said...

தமிழில் வழுவின்றி எழுதுவது அரிய செயலன்று.

பிழை நீக்கி எழுதவேண்டும் எனும் எண்ணமும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஓரளவு முயற்சியும் இருந்தால் போதும்.காலப்போக்கில் வழுக்கள் தாமாகவே நீங்கிவிடும்.

Unknown said...

”சந்திப் பிழைகள் ஒரு அறிமுகம்” - இதிலேயே ஓர் இலக்கணப்பிழை இருக்கிற மாதிரி இருக்கே ;-)

வால்பையன் said...

சந்திப்பிழைகள் குறித்து எனக்கும் பல சந்தேகங்கள் இருக்கின்றன!

ஊர்சுற்றி said...

Dr.sintok,
அப்படியா?! நான் நிறைய படித்தது கிடையாதுங்க!

அ.நம்பி,
உங்கள் பார்வைக்கு நன்றி.

ராஜா|KVR,
அதுல ஏதும் பிழை இருக்கிற மாதிரி தெரியலீங்களே!

வால்பையன்,
வாங்க வாங்க... எனக்கும் நிறைய இருக்கு! ஹிஹிஹி... :)

Unknown said...

//ராஜா|KVR,
அதுல ஏதும் பிழை இருக்கிற மாதிரி தெரியலீங்களே!//

"ஒரு அறிமுகம்”, “ஓர் அறிமுகம்” எது சரி?

iniyavan said...

தலைப்பை வேண்டுமென்றே, "சிருகதை பட்டரையின்..."

எழுதினீர்களா?? இல்லை எழுத்துப் பிழையா??

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பு :)

- யெஸ்.பாலபாரதி said...

“ஓர் அறிமுகம்” எது சரி என்பதே சரி.. :)

அது சரி.. தலைப்பில் ஏன் இந்த கொலை வெறி..!

ஊர்சுற்றி said...

ராஜா|KVR,
ஓ... சரி சரி.

பாலபாரதி அண்ணே,
திருத்திக்கிறேன்.

அண்ணே, என்.உலகநாதன்,
தலைப்பு, சும்மா குதறலாமேன்னுதான். :)

ஊர்சுற்றி said...

நான் ஆதவன்,
நன்றி நன்றி.

வருகை தந்த எல்லோருக்கும் நன்றி. நாம் எழுதுவதில் பிழைகள் இருந்தால், கூச்சப்படாமல் சுட்டிக்காட்டுவோம், திருத்திக்கொள்வோம்.