Thursday, September 10, 2009

ராகுல் பூந்தி - தண்ணியக் குடிங்க, தண்ணியக் குடிங்க!

'பிரதேச'ங்களிலும் 'தான'ங்களிலும் வேண்டுமானால் உங்களின் வசீகரத் தன்மை மக்களை உங்கள் பக்கம் இழுத்துக் கொண்டுவரலாம். ஆனால் உங்களின் இந்த தமிழக வரவு எனக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை!

தேசிய அளவில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் இத்தனை இடங்கள் பெற்றதற்கு நீங்கள் முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம், தமிழகத்தில் காங்கிரஸ் தயவிலேயே ஆட்சி நடக்கலாம், நீங்கள் செல்லும் இடமெல்லாம் பத்திரிகை நிருபர்களிலிருந்து சாதாரண மக்கள் வரை கவர்ந்திருக்கலாம். ஆனால்... அதற்காக தமிழகத்தில் இது போன்று பேசுவது... உங்களுக்கே கொஞ்சம் அதிகமாகத் தோன்றவில்லையா!

செய்தி:
''தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தினால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியும்'' - ராகுல் காந்தி பேச்சு.

ஒருவன் குடும்பத்தைப் பற்றி தப்பாகப் பேசினால் அவனுக்கு எவ்வளவு கோபம் வரும், அதுபோல ஒரு இனத்திற்கு கோபம் வருமல்லவா?! ஆனால் அந்த கோபத்தையும் இல்லாது செய்கின்ற திறமை படைத்தவர்கள் எங்கள் தலைவர்களாக இருக்கும்போது, அதிகாரமும் பணமும் இங்கே பல உணர்ச்சிகளை அழித்திருக்கும் போது, அவர்கள் முன்னிலையிலேயே நீங்கள் இது போன்று பேசுவது 'உங்களுக்கு ஒரே நகைச்சுவைதான் போங்கள்!' என்று சொல்ல வைக்கிறது.



போங்க, போங்க சார். போயி 'பிரதேசங்களை'க் கவனியுங்கள்! கழகங்கள் இருக்கும்வரை, இங்கே உங்கள் (வட இந்திய)பருப்பு வேகாது!


டிஸ்கி:
தலைப்பில் உள்ள பெயர் லூஸுப் பையனிடமிருந்து சுட்டது!

10 comments:

Raju said...

அண்ணே, அந்த போட்டோல கத்திய பயபுள்ள எங்கவச்சுருக்குன்னு பாருங்கண்ணே..!
:-)

வால்பையன் said...

கழகங்கள் இருக்கும் வரை காங்கிரஸ் தான் அடுப்பே! பின் ஏன் பருப்பு வேகாது!?

அ. நம்பி said...

நல்ல மிண்டர்கள். (படத்தில் உள்ளவர்களைச் சொல்கிறேன்.)

kamesh said...

nanum ethai amotkran. ragul oru crzey

உங்கள் தோழி கிருத்திகா said...

pora poakka paatha congress aatchya pidichudum polarkke ....vijaykanth,vijay ivangakuda namma superstarum athula seraporatha oru pechu varuthe???:(

ஊர்சுற்றி said...

நன்றி ராஜூ,
வால்பையன்,
அ.நம்பி,
kamesh,
Kiruthiga.

ஊர்சுற்றி said...

வால்பையா,
என்னாங்க அடுப்புங்கிறீங்க!

அப்போ கழகங்கள் தனித்து நின்னாகூட,
காங்கிரஸ் தனித்து நின்னு பல இடங்கள்ல ஜெயிக்க முடியும்னு சொல்றீங்களா?!!!

எனக்கு இன்னமும் அரசியல் புரியலியா!!!

ஊர்சுற்றி said...

தமிலிஷில் கும்மாங்குத்து குத்தியவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. :)

அப்துல்மாலிக் said...

கடந்த மூன்று நாட்களா கழகங்களுக்கு வயிற்றுப்போக்காமுலே அப்படியா

ஊர்சுற்றி said...

அபுஅஃப்ஸர்,
கருத்துக்கு நன்றி.

எனக்கு என்னவோ கழகங்கள் கண்கலங்கத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

ராகுல் காந்தி, மேல்தட்டு மக்களை மட்டுமே கவருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. என்னைப்போல, மற்ற பொதுஜனம் ராகுலின் வரவினால் பாதிக்கப்படப் போவதில்லை என்பது உறுதி.

ஆனால், கழகங்கள் சும்மா இருக்கப்போவதில்லை என்பதும் உறுதி. நிச்சயம் இதற்கு ஒரு எதிர்விளைவை விரைவிலேயே எதிர்பார்க்கலாம்! :)