Sunday, August 16, 2009

வேளச்சேரி கூழ்வார்த்தல் திருவிழாவும் விஜயும் நாடோடிகளும்!

வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நகர், 10-ம் ஆண்டு ஆடி கூழ்வார்த்தல் திருவிழா கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. இதில் நேற்று 15-8-2009 (சனிக்கிழமை) இரவு 'லஷ்மண் ஸ்ருதி' யின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுமார் 3000 பேர் இந்த நிகழ்ச்சியை ரசித்தனர். பெரும்பாலும் இசைக்கச்சேரி என்றால், எல்லா நடிகர்களின் படங்களிலிருந்தும் அவர்களின் மிகப் பிரபலமான பாடல்களைப் பாடுவார்கள். ஆனால் இந்த கச்சேரியில் நடிகர் 'விஜய்' அவர்களின் படத்திலிருந்து அதிகமான பாடல்கள் பாடப்பட்டன. அதற்குக் காரணம், ஒவ்வொரு விஜய் பட பாட்டிற்கும் கிடைத்த கைதட்டல்கள்.

'வாடா மாப்பிள்ள...' என்றவுடன் அதுவரை அமைதியாக இருந்த கூட்டம் கைதட்ட ஆரம்பிக்கிறது, விசில் பறக்கிறது! பாடல்களை ரசிப்பது என்பதையும் தாண்டி அங்கே ஒரு நடிகரை முன்னிலைப் படுத்தியது மக்கள் கூட்டம்.

மேடையில் 'லஷ்மண் ஷ்ருதி'யின் தொடர்புக்கு என்று ஒரு தொலைபேசி எண் இருந்தது. அந்த எண்ணுக்கு சிலபேர் போன் செய்து ஒரு பாட்டை பாடச்சொல்லி ஒருமணி நேரமாக தொந்தரவு செய்தார்களாம். அந்த பாடல் 'டாடி மம்மி வீட்டில் இல்ல...' (அடப்பாவிகளா!). பக்கத்தில் நின்றவர் ''அஜித் ரசிகர்கள் யாருட்டயும் போன் இல்லயாடா?'' என்று கேட்டது காதில் விழுந்தது.

இது எல்லாவற்றையும் விட முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு நிகழ்வு - 'நாடோடிகள் படத்திலிருந்து ஒரு பாடல்' என்று சொன்னதும் இளைஞர்கள் பக்கமிருந்து கைதட்டல்களும் - சீட்டியடிப்புகளும் பட்டையைக் கிளப்பின. சசிகுமாருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இப்போதே உருவாகிவிட்டது உறுதி.

கோவில் மற்றும் நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு.








6 comments:

selventhiran said...

ஆஹா! அனேகமாக திருவிழா கச்சேரிக்கு முதல் விமர்சனம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

அக்னி பார்வை said...

//ஆஹா! அனேகமாக திருவிழா கச்சேரிக்கு முதல் விமர்சனம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
//

rippittikiReen

நட்புடன் ஜமால் said...

மேடையில் 'லஷ்மண் ஷ்ருதி'யின் தொடர்புக்கு என்று ஒரு தொலைபேசி எண் இருந்தது. அந்த எண்ணுக்கு சிலபேர் போன் செய்து ஒரு பாட்டை பாடச்சொல்லி ஒருமணி நேரமாக தொந்தரவு செய்தார்களாம். அந்த பாடல் 'டாடி மம்மி வீட்டில் இல்ல...' (அடப்பாவிகளா!). பக்கத்தில் நின்றவர் ''அஜித் ரசிகர்கள் யாருட்டயும் போன் இல்லயாடா?'' என்று கேட்டது காதில் விழுந்தது. ]]


அடப்பாவிகளா ...

ஊர்சுற்றி said...

அப்படியா!
நன்றி செல்வேந்திரன் & அக்னி பார்வை.

நட்புடன் ஜமால்,
நீங்க அஜித் ரசிகரா?!

சுசி said...
This comment has been removed by the author.
கிரி said...

//நாடோடிகள் படத்திலிருந்து ஒரு பாடல்' என்று சொன்னதும் இளைஞர்கள் பக்கமிருந்து கைதட்டல்களும் - சீட்டியடிப்புகளும் பட்டையைக் கிளப்பின. //

ஒரு வேளை அதில் வரும் குத்து பாட்டை நினைத்து உற்சாகமாகி இருப்பார்களோ :-)