சில வாரங்களுக்கு முன்பு 'சூரியகிரகணம்' நிகழ்ந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு 'நம்புங்கள் நாராயணன்' சொன்னார் என்று சொல்லி சில பயமுறுத்தும் விசயங்களை வெளியிட்டது இந்த தினத்தந்தி (அது எதுவும் நடக்கவில்லை என்பது வேறுவிசயம்).
அதே போல சமீபத்தில் நடந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 12-8-2009 தேதியிட்ட சென்னைப் பதிப்பில் இரண்டாம் பக்கத்தில் அதே 'நம்புங்கள் நாராயணன்' சொன்னார் என்று சில வரிகள் வெளியிட்டுள்ளார்கள். அந்த ராசி, இந்த நட்சத்திரம் அது அங்க இருந்தது இது இங்கே இருக்குது... என்று நீளுகிறது அந்த பத்தி.
இது போதாதென்று இப்போது நம்மை 'முகமூடி' வீரர்களாக மாற்றி வரும் 'பன்றிக் காய்ச்சல்' வேறு வந்துள்ளது அல்லவா, இதைப்பற்றியும் சில தகவல்களுடன் இதே 12-8-2009 நாளிதழில் ஒரு அடி முட்டாள்தனமான விசயமும் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் 'பலன் வெண்பா' என்று ஒன்று உள்ளதாம். தற்போதைய 'விரோதி' ஆண்டிற்கான பலன் வெண்பாவில் இந்தப் பன்றிக்காய்ச்சல் பற்றி சொல்லப்பட்டுள்ளதாம். ஏதோ ஒரு ஜோதிடர் சொன்னாராம்.
''அடேய்! அப்படின்னா முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போரெல்லாம் நடந்து முடிஞ்சு 60 வருடம் கழிச்சி திரும்பவும் உலகப் போர் வந்ததா?'' என்றுதான் எனக்கு கேட்கத் தோன்றுகிறது.
இதுபோல, குழப்பத்தை உண்டு பண்ணும் விதத்தில் சில விசயங்கள் அடிக்கடி தினத்தந்தியில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
'தினத்தந்தி' சாதாரண வாசகர்களையும் சென்றடையும் செய்தி ஏடு. இதில் இந்த மாதிரி அறிவியலுக்கு சிறிதும் ஒத்துவராத விசயங்களை வெளியிடுவதைத் தவிர்க்கலாமே. அப்படி வெளியிட்டுத்தான் ஆவது என்றால் உங்களின் 'ஜோதிடம்' போன்ற இலவச இணைப்புக்களில் வெளியிடுங்களேன். ஒரு செய்தித் தாளை, செய்திகளை வழங்க மட்டுமே பயன்படுத்துங்களேன். இந்த மாதிரி அடிப்படையில்லாத - செய்தியே இல்லாத 'ஊகங்களை' தயவு செய்து நிறுத்துங்களேன்.
12 comments:
அட விடுங்க பாஸ் கன்னிதீவு த்விர அதுல ப்டிக்கிறத்துக்கு வேற எதுவுமே இல்ல
இந்த மாதிரி அர வேக்காடு மண்டையனுங்குல.... நடு ஆத்துல தூக்கி போட்டு முதலைய உட்டு கடிக்க வெக்கோனுங்க தலைவரே.....
நல்ல வேண்டுகோள், அவிங்களுக்கு கேட்க்குமா?
சர்க்குலேசந்தான் முக்கியம்.............இப்ப அதுதான் எல்லா பத்திரிக்கையிலும் நடக்கிறது
ada paavigala....
ஆதித்தனார் காலத்தில் இருந்து அதில் வந்த ஒரே உருப்படியான பகுதி ' வரலாற்றுச் சுவடுகள்' தான் என்று நினைக்கிறேன். ஒருக் காலத்தில் மக்களின் வாசிப்பு ஆர்வத்தை டீக்கடைகளிலும், சலூன் கடைகளிலும் வைத்து வளர்த்து இருக்கலாம். ஆனால் நாரயயணன் போன்ற 'நம்மவூர் போலி நாஸ்ட்ராடாமாஸ்களை' உருவாக்கி, மக்களை பண்டாரக் கும்பல்களாக மாற்றுவது மன்னிக்கமுடியாதது. நாட்டின் பெரியத் தலைகளே இதுப் போன்ற பேர்வழிகளின் கால்களில் விழும்போது, சாதரண மக்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம். இவைகளெல்லாம் ஒழியும்போதுத்தான் நம்மவர்கள் உருப்படுவர். நிலைமை போகப்போக இன்னும் மோசமாகத்தான் ஆகிறதே தவிர எதுவும் சரியாகப் படவில்லை நண்பர்களே.
வணிக நோக்கத்தில் நடக்கும் நிறுவனங்கள் அப்படித்தான் இருக்கும். திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல, அவரவராய்ப் பார்த்து, எது சரி எது தவறு என்று மாற்றிக் கொண்டால் தவிர வேறு உடனடியான தீர்வு கிடையாது.
கோடைக் காலத்தில், நா வறட்சியைப் போக்கிக் கொள்வதற்காக, குளிர் பானங்கள், மோர், தர்பூஸ், முலாம்பழ ஜூஸ் என்று எது கிடைக்கிறதோ, அதைப் பயன்படுத்தித் தற்காலிகமான தீர்வைத் தேடுவது போல, கஷ்டப்படுகிற மனித மனம், அதற்கான் நிரந்தரத் தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக, இந்த மாதிரி சுலபமான வழிகளை நாடுவதே, பெரும்பாலான மனிதர்களுடைய பலவீனமாகவும், அதைப் பயன் படுத்திக் கொள்கிற உத்தியாக சிலரும் கைக்கொள்வதில் வியப்பொன்றுமில்லை.
வாருங்க அக்னி, லவ்டேல் மேடி, ஷஃபிக்ஸ், அத்திரி.
கல்யாண், அப்பப்போ வந்துட்டு போ. :)
M.S.E.R.K.
உங்கள் கவலை மிகவும் உண்மையானது.
கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
உங்கள் கருத்துதான் எனக்கும்.
http://www.payanangal.in/2009/08/blog-post_13.html பார்க்கவில்லையா :) :) :)
வானம்பாடிகள், நன்றி.
புருனோ சார், பார்த்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். :)
Post a Comment