Tuesday, July 21, 2009

ஒரு வெட்கம் வருதே வருதே - கிறங்கடிக்கும் பாடல்!

பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே!
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்

சமீபத்தில் ரசித்த பாடல்களுள் மிக அருமையான பாடல் - மனதோடு ஒட்டிக்கொண்டுவிட்டதும் கூட. திரையில் படத்தோடு பார்த்தபோது காட்சியமைப்பின் உன்னதத்தால் பாடலை இசையோடு ரசிக்க மறந்துவிட்டேன். ஆனால், அது முதல்முறை மட்டும்தான். அதன்பின்பு இந்த பாடல் செவிகளில் எ(இ)ப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


என்னன்னே தெரியலீங்க. இந்த பாட்டுக்கு உள்ளேயே நான் போய்விட்டேன். பாடலூடே சேர்ந்து வரும் நகைச்சுவைகள். கதாநாயகி புருவங்களை அசைப்பது, காதலர்கள் இருவரும் வேறு வேறு இடங்களில் அமர்ந்திருப்பது. இன்னும் எத்தனையோ...

ஒரு வெட்கம வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே.
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே.
போகச் சொல்லி கால்கள் தள்ள
நிற்கச் சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்ற சுகம்


மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே.
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே.
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறு போட்டுக் கொல்லும் இன்பம்
பற பற பற வெனவே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே


பாடலை கவனித்துப் பார்த்தால் புரியும்.
கதையின் போக்கிலேயே இந்தப் பாடல் நகர்வது,
இடையிடையே பல ரசிக்கச் செய்யும் நகைச்சுவைகள்,
சிறு சிறு குறும்புகள்,
சின்னப்பிள்ளைங்களோட நோட்டை காதலிக்குப் பரிசளிப்பது,
வைரமுத்துவின் கவிதையை தான் எழுதியதாக புருடா விடுவது,

இப்படி எத்தனையோ! இந்தப் பாடலை ரசிக்கும்படி செய்கின்றன. பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அருமை.

யு டியூப்பில் பார்க்க-கேட்க:

15 comments:

சோழன் said...

தமிழில் அனைத்து ரசங்களுக்கு ராசாவே தலைவன்,ஏழு நாட்கள் கேட்டபிறகும் இனிக்கும் எட்டு திக்கு கொடிநட்ட ரகுமானுக்கு நடுவே அவ்வப்போது மனதை வருடும் இசைவசந்தம் ,சிற்பி என பரந்த தமிழ் இசை பேரண்டத்தில் எவன் வருவான் . சின்னத்திரைகளை தாண்டி என இறுமாந்திருந்த வேளையில் என்மனதை வேட்டையாடிய இசை வேங்கை திரு .ஜேம்ஸ் வசந்தன் இசை பற்றிய

உங்கள் பதிவு மிக அருமை
கண்கள் இரண்டால் ,,,,,,,,,,,,,,,,,
பி.கு :யுவன் ,பிரகாஷ் மற்றும் தேவா விசிறிகள் மன்னிக்கவும்

முனைவர் இரா.குணசீலன் said...

ஆம்
மனதை வருடும் இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்...
பாடல் வரிகள், அதைப் படமாக்கிய விதம் ஆகியன என்னை மயக்கிவிட்டன..

ஊர்சுற்றி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சோழ ராஜாவே. :)

முனைவர் அவர்களே நன்றி.

நட்புடன் ஜமால் said...

வரிகளை சரியாக கவணித்து கேட்க்கவில்லை

ஆனால் அவர்களின் முகபாவங்கள் மிகவும் இரசிக்கும்படியாக இருந்தது.

Anonymous said...

ம்ம்ம்.. நடத்துங்க...உங்ககிட்ட scooty இருக்க?

எம்.எம்.அப்துல்லா said...

உண்மையிலேயே மிகவும் அருமையான பாடல். இரவுகளில் மெல்லிய ஓலியோடு கேட்டுப்பாருங்கள். :)

அக்னி பார்வை said...

பாட்டை கேட்டிருக்கிறேன் தனியாக வரிகளை படிக்கும் போது இன்னும் நன்றாக இருக்கிரது நல்ல ரசனை உமக்கு ... சரி அப்படியே யுடியுப் லின்க் கொடுக்க வேண்டியது தானே..

ஸ்ரீ.... said...

இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டுச் சொல்கிறேன். பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.

ஸ்ரீ....

ஊர்சுற்றி said...

நட்புடன் ஜமால்,
தாமரை தனது முத்திரையை மீண்டும் ஒருமுறை இந்தப் பாடலில் அழுத்தமாகவே பதித்துள்ளார்கள். வரிகள் கொள்ளை அழகு.

Viji,
என்கிட்ட இருக்கிறது ஒரு பழைய BSA சைக்கிள்தாங்க!

எம்.எம்.அப்துல்லா,
மிக மிக அருமை. பாருங்க இந்த நடுஇரவு-அதிகாலை நேரத்தில கூட நான் அதைக் கேட்டுகிட்டு இருக்கேன்.

ஊர்சுற்றி said...

அக்னிப்பார்வை,
காதலுக்குத் தனியே ரசனை தேவை
இல்லையே!

அப்புறம் யு டியூப் - இணைப்பு தந்தாச்சு. :)

ஸ்ரீ, கட்டாயம் படத்தைப் பாருங்கள்.
தமிழ்சினிமாவில் மைல்கல், அந்த கல் என்றெல்லாம் புரூடா விட்டுவிட்டு மொக்கைப் படங்களைத் தரும் இயக்குனர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம். மிக மிக அருமையான திரைப்படம். அதில் இந்தப் பாடல்... கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. கேட்டுகிட்டேதான் இருக்கிறேன்.

priyamudanprabu said...

நல்ல பாட்டு

ஊர்சுற்றி said...

பிரியமுடன் பிரபு,
நன்றிங்க.

Jackiesekar said...

எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல்

geethappriyan said...

நண்பர் ஊர்சுற்றி
ஜேம்ஸ் வசந்தன் ரொம்ப நல்ல இசை அமைப்பாளர்.அவரை நாம் இன்னும் நிறைய
படங்களுக்கு பயன்படுத்தவேண்டும்.
வெண்ணிலா கபடிகுழு செல்வகணேஷ் கூட நல்ல இசைஅமைப்பாளர்
இந்த பாடலுக்கான யூடியூப் சன்னலை உங்கள் தளத்திலேயே வையுங்கள்.

யூடியூப் சென்று.
embed:- என்னும் பெட்டியில் உள்ள குறியீட்டை காபி செய்து.
உங்கள் எடிட் ப்ளாக் சென்று வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள்.
பின்னர் உங்கள் பதிவிலேயே இந்த பாடலை கண்டு களிக்கலாம்.
ஒட்டு போட்டாச்சு.

ஊர்சுற்றி said...

மிகச்சரி கார்த்திகேயன்.

வெண்ணிலா கபடிகுழு இசையமைப்பாளர். அய்யகோ, சரியா கவனிக்கவில்லையே.

அப்புறமா 'யூடியூப்'ல நானே விடீயோவை தரவேற்றம் பண்ணிட்டு இடுகையிலயே இணைச்சிடுறேன். :)