Wednesday, July 15, 2009

பெவிகானை உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பது எப்படி?

பெவிகான்/ஃபெவிகான் (பெவிகால் இல்ல) - அப்படின்னா FavIcon = Favorite + Icon இப்படின்னு அர்த்தம். அதாவது உங்களோட வலைப்பூவிற்கு அல்லது இணையத்திற்குன்னு தனியாக பளிச்சுன்னு தெரியற மாதிரி ஒரு படத்தை வடிவமைச்சு அதை ஒரு சின்ன அளவில, ப்ரௌவ்சரோட தலைப்பக்கமா தெரியவைக்கிறது. ஃபேவரிட் ஐகான் - விருப்பப் படம் (அ) அடையாளப் படம் -னு வைச்சிக்கலாம் (யாராவது நல்ல தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்).

மனுசனோட மூளை எப்பவுமே படங்களை எளிதா ஞாபகத்தில வச்சுக்குது. இப்போ நாலைஞ்சு URL இருக்குன்னு வச்சுப்போம், அத ஒண்ணு ஒண்ணா வாசிச்சி, பிரிச்சி பார்க்கிறதுக்கு பதிலா ஒவ்வொண்ணுக்கும் ஒரு படம் இருந்தா, பார்த்த உடனே வால்பையனோடது இது, ஊர்சுற்றியோடது இதுன்னு சட்டுன்னு கண்டுபிடிச்சிடலாம் இல்லையா - அதான், அங்கேதான் பெவிகான் உதவுது.

உதாரணத்துக்கு கீழே இருக்கிற படத்தைப் பாருங்க.

எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரியுது, ஆனா பெவிகான் இருக்கிற கீழே உள்ள முகவரிகளைப் பாருங்க - ஒரு அழகு தெரியுது.

இப்போ என்னோட வலைப்பூ - பெவிகான் இல்லாமல்:

பெவிகான் இல்லாமல் எக்ஸ்ப்ளோரரில்

பெவிகான் இல்லாமல் ஃபயர்ஃபாக்ஸில்

பெவிகான் இல்லாமல் சஃபாரியில்
பெவிகான் இல்லாமல் க்ரோமில்

என்னோட வலைப்பு பெவிகானுடன்:

ஊர்சுற்றி - பெவிகானுடன் எக்ஸ்ப்ளோரரில்
ஊர்சுற்றி - பெவிகானுடன் ஃபயர்ஃபாக்ஸில்

ஊர்சுற்றிக்கு பெவிகான் சேர்த்த பின்பு

ஒவ்வொரு இணையத்துக்கும் அதுக்குன்னு இருக்குற படத்தை வச்சி ரொம்ப சுலபமா கண்டுபிடிக்கலாம் - அதோட ஒரு அடையாளமாவும் இருக்கும். நமக்குன்னு ஒரு தனி அடையாளம் இருக்கறது எப்பவுமே ஒரு மகிழ்ச்சிதானே?!
அதனால வாங்க நாமளும் நம்மோட வலைப்பூவுக்கு இதை உருவாக்கலாம்.

மொத்தம் மூன்றே மூன்று படிதான்:
1. உங்களுக்குன்னு ஒரு ஃபெவிகான் வடிவமைக்க வேண்டும்.
2. இதை இணையத்தில் ஒரு இடத்தில் சேமிக்க வேண்டும் (அப்லோட்).
3. அந்த URL ஐ - ஃபெவிகானுக்கான HTML குறியீட்டுடன் சேர்த்து, உங்கள் வலைப்பூவிற்கான(அ) இணையத்திற்கான நிரலில் தலைப்பகுதியில் (Header) சேர்த்துவிடவேண்டும்.

1. நீங்களே பெவிகானை உருவாக்க/வடிவமைக்க:

இந்த இணையப் பக்கத்துக்கு போங்க.

2. உங்களிடம் உள்ள படத்திலிருந்து பெவிகானை உருவாக்க:

இங்கே வாங்க

3-A. வலைப்பூவில் இணைப்பது:

படத்தை ".ico" என மாற்றியபின்பு, அதை இணையப் பக்கத்தில் எங்கேனும் இணையேற்றி விட்டு (google sites போன்றவை) - பின்வரும் HTML குறியீட்டில் அந்த அப்லோட் செய்யப்பட்ட URL முகவரியைத் தரவேண்டும்.

<link href='Your Icon URL' rel='shortcut icon'>

அதன்பின் இந்த HTML குறியீட்டை உங்கள் வலைப்பூவின் ''layout" -> "Edit HTML" சென்று தலைப்பகுதிக்குள் ( க்குள் ) ஒட்டிவிடுங்கள்(படம் கீழே).


3-B. ரொம்ப சுலபமா பெவிகானை இணையத்தில் தரவேற்றி - அதன் HTML கோடையும் பெற:


பெவிகானை இணையத்தில் எற்றிய பின் HTML குறியீடும் சேர்ந்து கிடைக்கும் தளம்


கவனிக்க வேண்டியவை:
1. இணையப் பக்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் ரூட் டைரக்டரியில் விருப்பப் படம் தரவேற்றப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ளவும். டைரக்டரி மாறியிருந்தால் கூட சிலசமயம் பெவிகான் தெரியாமல் போகலாம்.
2. குரோம் மற்றும் சஃபாரியில் 'விருப்ப ஐகான் (பெவிகான்)' தெரியவில்லை. யாருக்காவது இதனை சரிசெய்ய வழிமுறைகள் தெரிந்திருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்.

பிடிச்சிருந்தா தமிழ்மணத்திலயும் தமிலிஷ்லயும் குத்திட்டுப் போங்க! :)

21 comments:

நட்புடன் ஜமால் said...

நல்லா விளக்கமா சொல்லியிருக்கீங்க

மிக்க நன்றி

விரைவில் செய்து பார்க்கிறேன் ...

முனைவர் இரா.குணசீலன் said...

பயளுள்ள செய்தி.........
முயற்சிக்கிறேன் நண்பரே...

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

ஸ்ரீ.... said...

பயனுள்ள இடுகை. நானும் ஏதாவது இணைத்துப் பார்க்கிறேன். உங்க வலைப்பூவைப் பார்த்ததுமே கேக்கணும்னு நினைக்கிறதுக்குள்ள இடுகை!!!!

ஸ்ரீ....

வால்பையன் said...

அண்ணே எனக்கு வாலுருக்குற மாதிரி ஒண்ணு செஞ்சு தாங்கண்ணே!

புருனோ Bruno said...

சூப்பர் பாஸ்

ஊர்சுற்றி said...

எந்தத் திரட்டியிலும் இணைக்காமலேயே வந்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி நன்றி.

ஆணிபுடுங்கவே நேரம் சரியா இருந்ததுங்க. தானியங்கி முறையில இடுகையை மட்டும் போடமுடியுது. :)

ஊர்சுற்றி said...

வால்பையன் அண்ணே,

முதல்ல உங்களோடதைதான் முயற்சிபண்ணி பார்த்தேன். சரியா அமையல. உங்களுக்கு அந்த 'வால்' படத்தை உருவாக்கி தந்தவங்ககிட்ட சரியா சதுரமா அதே மாதிரி ஒரு படத்தை செஞ்சு தர சொல்லுங்க. அப்புறம் நீங்க அதை அப்லோட் பண்ணி பெவிகானா மாத்திக்கலாம். இப்ப இருக்கிறது எழுத்தோட சேர்ந்து இருக்குதா, அதனால கொஞ்சம் சரியா வரலை.

ஊர்சுற்றி said...

புருனோ அவர்களே நன்றி நன்றி.

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

ஊர்சுற்றி said...

ஐயய்யோ!!!

இங்கயுமா?!!

ஊர்சுற்றி said...

நானும் புதுசா எழுதுறவந்தாங்க...

'பிரபல பதிவர்' லாம் இல்லங்க...!

priyamudanprabu said...

பயனுள்ள தகவல்
மிக்க நன்றி

http://www.priyamudanprabu.tk/

வந்து பாருங்க

Unknown said...

// 2. குரோம் மற்றும் சஃபாரியில் 'விருப்ப ஐகான் (பெவிகான்)' தெரியவில்லை. யாருக்காவது இதனை சரிசெய்ய வழிமுறைகள் தெரிந்திருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்.//

ப்ளாக்கரின் automatic header generationஆல் அங்கே அவர்களது ஐகான் லின்க் உருவாகுது. அதற்கு பின்னர் உங்களுடைய லிங்க் இருக்கு. அது கூட காரணமாக இருக்கலாம்.

ஊர்சுற்றி said...

பிரியமுடன் பிரபு, நன்றி.

ராஜா,

அதை சரிசெய்ய முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி. :)

geethappriyan said...

ரொம்ப அருமை ,குறித்துக் கொண்டேன்.
நல்ல பதிவு .
ஒட்டு போட்டாச்சு தொடர்ந்து நட்பில் இருப்போம் நண்பரே

கிரி said...

இதை இணைத்தால் நமது தளம் திறக்கும் வேகத்தில் ஏதும் பிரச்சனை வராதா?

அன்புடன் அருணா said...

நல்லா விளக்கமா சொல்லியிருக்கீங்க
பூங்கொத்து ..!
மிக்க நன்றி..!

ஊர்சுற்றி said...

நன்றி கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், தொடருவோம்.


கிரி said... //இதை இணைத்தால் நமது தளம் திறக்கும் வேகத்தில் ஏதும் பிரச்சனை வராதா?//

கட்டாயமா வராதுங்க. ஏன்னா நீங்க அப்லோட் பண்ணுற படத்தோட அளவு பார்த்தீங்கன்னா 2kb or 3 kb தான் இருக்கும். நீங்க என்னதான் மொக்கையான இன்டர்நெட் கனெக்ஷன் வச்சிருந்தாலும் 'பெவிகானால்' எந்த பாதிப்பும் வராது. :)

நன்றி அன்புடன் அருணா.

புதிதாக வந்த எல்லோருக்கும் நன்றிகள்.

இரா.ச.இமலாதித்தன் said...

வணக்கம்
ஊர்சுற்றி,

அருமையான....செய்முறை விளக்கத்தை சொல்லி உள்ளீர்கள்....உடனேயே செயல் படுத்தி விட்டேன் ....நன்றி வாத்தியாரே...
நீங்க "ஊ" வை வச்சி இருக்குற மாதிரி நான் "த" வை வச்சிகிட்டேன்...

கத்து தரத்துக்கும் ஒரு பெரிய மனசு வேணும்.....அது உங்க கிட்ட இருக்கு...மனசு ரொம்ப பெருசா போனா இதய சம்பந்தமான பிரச்சனைகள் வருமாம்...பார்த்துக்கோங்க வாத்தியாரே...

ஊர்சுற்றி said...

பாலாஜி.ச.இமலாதித்தன்,

ரொம்ப நன்றிங்க.