Sunday, July 5, 2009

நாடோடிகள் - விமர்சனத்திற்கு என்ன தலைப்புகள் வைக்கலாம்?

நாடோடிகள் - 'அரிப்பெடுக்கும்' (போலி) காதலர்களுக்கு சவுக்கடி.
நாடோடிகள் - மொக்கை காதல் இயக்குனர்களுக்கு 'பொளே'ரென செருப்படி.
நாடோடிகள் - நட்பின் நீளம்.
நாடோடிகள் - நட்பும் காதலும் கலந்த கலவை.
நாடோடிகள் - நட்பின் வெற்றியும் 'புனிதக்(!) காதல்களின்' வீழ்ச்சியும்.

காதல் செய்கிறோம் என்று ஊரை எமாற்றும் அரிப்பெடுத்த அல்லது அரைகுறை காதலர்களுக்கு செருப்பால் அடித்து பாடம் புகட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. ''இதற்கு முன்னால் இதைப் போல ஒரு திரைப்படம் தமிழில் வந்திருக்கிறதா என்ன?'' எனக்குத் தெரிந்து இல்லை.

நம்ம தமிழ் சினிமா இயக்குனர்களும் சரி - பதிவர்களும் சரி, காதலை ரொம்ப ஒவராக தலையில் வைத்துக் கொண்டாடி 'புனிதமானது', 'யோக்கியமானது', 'அழியாதது', 'மனிதனாக்குவது'.... இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது எதுவுமே - சரியாகப் புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக, அரிப்பெடுத்து வரும் காதல்களுக்குச் செல்லாது என்பதை உணர்ந்துள்ளார்களா என்று தெரியவில்லை!

பார்த்தவுடன் காதல், பேசியவுடன் காதல், உனக்காக என்ன வேணுண்ணா செய்வேன் என்று கூறி அவுத்துப் போட்டால் காதல், பழகுவோமா என்றவுடன் காதல், என்று அரைகுறைகளின் காதல்களுக்கு வக்காலத்து வாங்கும் இயக்குனர்கள் அதிகம்பேர் இங்கு இருப்பதால்தான் காதலர்கள் மீதான விவாதம் சற்று தேக்கமடைந்திருக்கிறது. 'நாடோடிகள்' பட விமர்சனங்களில் கூட பதிவர்கள் - இந்த அரைகுறை (அ) அரிப்பெடுத்த காதல்கள் பற்றி விமர்சிக்காதது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

அதனால்தான் என் பங்குக்கு இந்த விமர்சனம்.

நாடோடிகள்:

மூன்று நண்பர்கள்(சசிகுமார், பரணி, விஜய்) - இவர்களில் சசிகுமாருக்கு மட்டுமே தெரிந்த நண்பனான இன்னொருவனின் காதலுக்கு(!) மற்றவர்கள் இருவரும் உதவி செய்து திருமணம் செய்து வைத்து, தப்பிக்க வைத்து, தனியாக வசிக்க அனுப்புகிறார்கள். தப்பிக்க வைக்கும்போது இன்னொரு நண்பரும் சசிகுமார் - மற்ற இருவருடனும் சேர்ந்துகொள்கிறார்.

இந்தப் போராட்டத்தில், சசி தனது உண்மையான காதலையும், விஜய் தனது ஒரு காலையும், பரணி தனது காது கேட்கும் திறனையும் இழக்கிறார்கள்.

இதுபற்றித் தெரியாமல் - தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லாமல் சேர்த்து வைக்கப்பட்ட காதல்(!) ஜோடிகள் (மிகவும் வசதியாக வாழ்ந்தவர்கள்) தங்கள் இயல்பான வாழ்க்கை தொலைந்து போனதை நினைத்து ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி பழிசுமத்தி ஒருசில நாட்களிலேயே பிரிந்துபோகிறார்கள். இவள், இந்த காதல் மற்றும் கல்யாண அனுபவத்தை 'கனவு' என்கிறாள், அவனோ 'அவளைப் பத்தி நினைச்சாலே எரிச்சலா வருது' என்கிறான் (நல்ல காதலர்கள்!).

இந்த நாதாரிகளை சேர்த்து வைக்க போராடிய மற்ற மூவரும் கோர்ட், கேஸ் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள். இந்த மூவருக்கும் எவ்வளவு கோபம் வரவேண்டும்?.

'அட நாயிங்களா, எதையெல்லாமோ இழந்து உங்களை சேர்த்து வைச்சா, நீங்க என்னடான்னா 'கனவு' - 'எரிச்சல்' னாடா பினாத்துறீங்க?' என்று - சாட்டையை எடுத்து விளாசு விளாசு என்று விளாசுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.

தமிழ்சினிமா:

மேற்கூறப்பட்ட அறைகுறை காதல் எப்படிப் பூத்தது(!) என்று படத்தில் காட்டப்பட்ட சம்பவங்கள், கீழே.

காதலன் பல்லைக் காட்டிக்கொண்டு அந்த சூப்பர் ஃபிகர் முன் போய் நின்று 'ஐ லவ் யூ' என்கிறான் - 'போடா காதல் எல்லாம் வராது' என்கிறாள் அவள் - 'காதல் வர்ற வரைக்கும் உம்பின்னால வருவேன்' என்கிறான் இவன். விதவிதமாய் வருகிறான், என்ன செய்தால் காதல் வரும் எனக் கேட்கிறான். - 'உயிரை விடு, அப்ப வரும்' என்கிறாள். - கடலில் குதிக்கிறான் (நீச்சல் தெரியாது) - காப்பாற்றுகிறார்கள் - அவளுக்குக் காதல் வருகிறது.

இப்படித்தானே இன்று பெரும்பாலான தமிழ்சினிமாக்கள் காதல் என்ற பெயரில் கண்ட கருமாந்திரங்களையும் சுமந்துவருகின்றன. கடற்கரையில், பூங்காக்களில் மறைவிடங்களில், கண்ட கண்ட கழுதைகளெல்லாம் காதல் செய்துகளாம்(!).

எனது பார்வை:

இப்படி ஒரு அரைகுறையை சேர்த்து வைத்துவிட்டோமே என்று, எவ்வளவு கோபம் அந்த நண்பர்களுக்கு இருக்கும். படம் பார்க்கிற ஒவ்வொருவரும் 'அட நாயிங்களா, உங்களுக்காக என்னவெல்லாம் இழந்து நிக்கிறாங்க. நீங்க என்னடான்னா 'கனவு' 'அரிப்பு' ன்னாடா பேசுறீங்க' என்று கடைசிவரையிலும் படம்பார்த்த பிறகும் கோபம் கொதிக்க நினைக்க வைக்கிறார் இயக்குனர். அபாரம்! படத்திலும் இதைச் சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டியும், காதலுக்காக என்றுமே நண்பர்கள் துணைநிற்பார்கள் என்ற நம்பிக்கையை மேலும் நான்கைந்து ஆணிகளைக் கொண்டு அறைந்து பலப்படுத்துகிறார் சமுத்திரக்கனி.

வாழ்க 'நாடோடிகள்' வளர்க தமிழ்சினிமா!

12 comments:

ஊர்சுற்றி said...

நமக்கெல்லாம்,
அஜீத், விஜய், சூர்யா, தனுஷ் - காதலித்தால் அது தெய்வீகமான, உண்மையான காதல் என்ற ஒரு நம்பிக்கை திணிக்கப்பட்டிருக்கிறது - ஒருசில இயக்குனர்களின் மூலம் ஒருசில திரைப்படங்களின் மூலம்.

தேவன் மாயம் said...

இதையெல்லாம் தாண்டியும், காதலுக்காக என்றுமே நண்பர்கள் துணைநிற்பார்கள் என்ற நம்பிக்கையை மேலும் நான்கைந்து ஆணிகளைக் கொண்டு அறைந்து பலப்படுத்துகிறார் சமுத்திரக்கனி. ///

நல்ல அலசல்!! படம் பார்த்துவிடுவோம்!!

தேவன் மாயம் said...

அட நாயிங்களா, எதையெல்லாமோ இழந்து உங்களை சேர்த்து வைச்சா, நீங்க என்னடான்னா 'கனவு' - 'எரிச்சல்' னாடா பினாத்துறீங்க?' என்று - சாட்டையை எடுத்து விளாசு விளாசு என்று விளாசுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.///

இயக்குனருக்குப் பாராட்டுக்கள்!!

ramalingam said...

இதற்கு முன்னால் லவ் டுடேயில் ஒரு இயக்குனர் காதலின் இன்னொரு முகத்தைக் காட்ட முயற்சி செய்திருந்தார்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

தலைவரே.... உங்குளுக்கு ஏன் இத்தனை கொலை வெறி.....

அப்பாவி முரு said...

எல்லாவற்றிர்க்கும் மேலாக, நல்லம்மாள் என்ற பாத்திரத்தின் நடிப்பு பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஊர்சுற்றி said...

நன்றி தேவன் மாயம், ramalingam, லவ்டேல் மேடி, அப்பாவி முரு.

அனைவருக்கும் நன்றி.

நையாண்டி நைனா said...

நல்லா அடிச்சிருக்கே மாமு...

Raja said...

பாஸ் நீங்க உண்மையிலேயே நல்லா அலசி ஆராஞ்சி தான் எழுதுறிங்க .. கலக்குங்க :).. நான் படத்த பார்த்த அங்கிலும் நீங்க பார்த்த அங்கிலும் ரொம்ப வித்யாசம் :)

ஊர்சுற்றி said...

நையாண்டி நைனா, Raja இருவருக்குமே நன்றிகள்.

Raja இத்தன நாளைக்கு அப்புறமும் வந்து பின்னூட்டம் போடுறீங்களே. நீங்க ரொம்ப நல்லவங்க. :))))