Monday, July 13, 2009

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வும் 14 ரூபாய் சாப்பாடும்

ஒருவழியாக, இந்த வருட பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் (கவுன்சலிங்) தொடங்கிவிட்டன. தற்செயலாக, கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தின் அத்தனை மொழிகளையும்(வட்டார மொழிகள்) ஒரே இடத்தில் கேட்கும் அரிதான வாய்ப்பு அது. நாஞ்சில் வாசத்து 'மக்களே' - கோவை 'ண்ணா' - நெல்லை 'லேய்' - என்று எல்லாம் ஒரே நேரத்தில் காதில் தேனாய்ப் பாய்ந்தது.

முன்பெல்லாம் தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோயம்புத்தூரிலும் கலந்தாய்வு நடைபெற்றது - அந்தந்த பகுதி மாணவர்கள் அருகிலேயே கலந்தாய்வில் கலந்துகொண்டு சீக்கிரம் வீடு சென்றுவிடுவார்கள். இப்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் வந்து செல்வதற்கான இருவழி பயணப்படி இரண்டு நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் கவுன்சலிங் நடைபெறும் இடத்தில் அத்தனை ஆயிரம் பேரை கையாள்வதற்கு சிறப்பான நடவடிக்கைகள் என்று எதுவும் எடுத்திருப்பதுபோல் தெரியவில்லை.


வழிகாட்டும் தட்டிகள் எங்கெங்கும் நிறுவப்பட்டுள்ளன - நன்று. தற்போதைய இடநிலவரம் குறித்து பெரிய திரைகளில் ஒரு தற்காலிக அரங்கத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். உட்கார வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
அதைத் தவிர வெளி இடங்களில் உட்காருவதற்கென்று எந்த வசதியும் இல்லை.
குறிப்பாக அவசர, ஆபத்து நிகழ்வுகளைக் கையாள்வதற்கு முன்னெச்சரிக்கை ஏதும் இருப்பதுபோல் தெரியவில்லை.

குடி தண்ணீர் என்று ஆங்காங்கே சில தொட்டிகள் வைத்திருக்கிறார்கள் - சென்னை தண்ணீர் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். கோயம்புத்தூர் பாசையில் ஒருவர் 'என்ன தண்ணியிது' என்று கூறிச்சென்றது காதில் விழுந்தது.

சாப்பிடுவதற்கு அண்ணா பல்கலைக்கழக உணவு விடுதிக்குச் சென்றோம். 14 ரூபாய்க்கு அளவுச் சாப்பாடு - அசந்துபோய்விட்டேன். சென்னையில் இத்தனை ரூபாய்க்கு சாப்பாடா! கண்ட கண்ட சாப்பாட்டுக்கு 25 முதல் 35 ரூபாய் வரை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பேச்சுலருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். ஒரு பிடி பிடித்துவிட்டேன். சாப்பாடும் குறைசொல்லும் அளவில் இல்லை.

2009 பொறியியல் கலந்தாய்வு இட நிலவரம் தெரிந்துகொள்ள இங்கே செல்லலாம்.

7 comments:

Unknown said...

அருமையான் பதிவுங்க அண்ணா...!! அழகு...!! மிக்க நன்றி....!!

Unknown said...

ஐ.... மீ தி ... பஸ்ட் அண்ட் செகண்ட்........!!!

கடைக்குட்டி said...

ம்ம்ம்.. உண்மைலேயே நல்ல இருக்கும் அங்க..

நாலு வருஷம் முன்னாடி நான் இந்தக் கலந்தாய்வுக்கு போனது ஞாயபகம் வருது சகா...

நட்புடன் ஜமால் said...

அம்பூட்டு படிக்கிலீங்கோ நாம ...

Admin said...

நல்ல பதிவுங்க வாழ்த்துக்கள்..

ஊர்சுற்றி said...

வாழ்த்து சொன்ன அம்புட்டு பேருக்கும் நன்றிங்கோ.

கடைக்குட்டி, நீங்க சாப்பாட்டைதானே சொன்னீங்க.

சந்ரு பின்னூட்டத்திற்கு நன்றி.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்