Tuesday, May 12, 2009

இளம் பதிவர்களே, இந்த வாரம் போணியாகுமா?! - வாரப் பலன்!

புதிய பதிவர்களின் பிறந்த தேதி மற்ற விவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில் இந்த வாரப் பலனை பலவித நுண்ணிய ஜோதிட முறைகளின் துணைகொண்டு(!) கணித்துள்ளேன். தொடர்ந்து படியுங்கள்....(காலையில் தொலைக்காட்சியில் வந்து ராசி பலன் சொல்பவர் போல் படித்தால், ஏதோ கொஞ்சம் நன்றாக இருக்கும்)

வலையுலக இளம் எழுத்தாளர்களே!
எழுத்துலகில் புகழ்பெற 2, 5 மற்றும் 7.5 வீ டுகளின் தொடர்பு தேவை. இந்த வாரம் இந்த வீடுகள் காலியாக உள்ளதாலும் 13-ம் தேதியில் தேர்தல் வருவதாலும் உங்களில் பெரும்பாலானோருக்கு சாதகமான பலன் இல்லை. நடப்பு 'தேர்தல் திசை', வரும் சனிக்கிழமை உச்சத்தை அடைவதால் நீங்கள் உங்கள் எழுத்துலக புது முயற்சிகளை சற்று ஒத்திவைப்பது நல்லது. முக்கியமாக, சுக்கிரதிசை உச்சத்தில் உள்ள யாரேனும் 'உண்ணாவிரதம்' இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பதிவிடுவது நல்லது.

'தேர்தல் திசை' காலத்திற்கு பின்பு வரும் காலம் எப்போதும் போல் இல்லாது இம்முறை கொஞ்சம் சிக்கலாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் சூப்பரான பதிவுகள் இட்டாலும் பதிவுக்கு பின்னூட்டம் தேடி வீண் அலைச்சல், டென்ஷன், கொஞ்சம் பொருட்செலவுகளும் இருக்கும்.

இந்த நிலை அடுத்த வெள்ளிவரை(மே, 22) தொடரும் என்பதால், அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது. கும்மி பதிவர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

தேர்தல் அதிபதி 'சூரியன்' மதுரையில் உச்சத்தில் இருப்பதால் தேர்தல் பற்றிய செய்திகளும், தேர்தல் முடிவுகள் பற்றிய விவாதங்களும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் பற்றிய குழப்பங்களும் வலையுலக வியாபாரத்தில் மறைமுகப் போட்டியை உண்டுபண்ணும். லக்கிலுக், உண்மைத்தமிழன், தமிழ் சசி, இன்னும் சிலரது பதிவுகள் வழக்கத்தைவிட அதிகம் கவனிக்கப்படும். உண்மைத்தமிழன் அவர்களின், முழுதாகப் படிக்காமல் விட்ட பழைய இடுகைகளைக்கூட தேடிப்பிடித்து தூசுதட்டி படிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: கருப்பு, சிவப்பு, மஞ்சள். ('எம்பா பச்சையை விட்டுட்டியே?!' என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு விழுகிறது!).
அதிர்ஷ்ட திசை: தமிழ்நாட்டுக்கு நடுவில் (மதுரை).
திசைக்கு துரதிர்ஷ்டம்: கிழக்கு மற்றும் தென்கிழக்கு.

19 comments:

வால்பையன் said...

எல்லோருக்கும் ஒரே பலன் தானா?

Raju said...

\\தமிழ்நாட்டுக்கு நடுவில் (மதுரை).\\

நாங்க தெற்கே இருக்குறோம் சாமியோவ்....!

Raju said...

\\தமிழ்நாட்டுக்கு நடுவில் (மதுரை).\\

அதுக்காக எல்லா தொகுதியிலயும் அவரே நிக்க முடியுமா...?

கண்ணா.. said...

கலக்கல்...

அப்பிடியே ஃபாலோ பண்றோமுங்கோ....

அப்துல்மாலிக் said...

இந்த வார பலனை ரொம்ப அமோகமா தெரிவிச்சிட்டீங்க‌

நாங்க மத்தியிலே இருக்கோம்... இங்கெ ஒன்னும் அஃபெக்ட் பண்ணாதே

பதி said...

//உண்மைத்தமிழன் அவர்களின், முழுதாகப் படிக்காமல் விட்ட பழைய இடுகைகளைக்கூட தேடிப்பிடித்து தூசுதட்டி படிப்பார்கள்.//

ஏதாவது நடக்குற காரியமா சொல்லுங்க...

நினைச்சாலே கலவரமா இருக்கு....

ஊர்சுற்றி said...

வால்பையா,

எல்லோருக்கும்னா.... எங்கள மாதிரி இளம் பதிவர்களுக்கு!!! ஹிஹிஹி... நீங்கெல்லாம் இப்போ மூத்த பதிவராகிட்டீங்களே!!!

ஊர்சுற்றி said...

டக்ளஸ்,

நீங்க தெற்க எந்தப் பக்கமா இருக்கீங்க?

ஊர்சுற்றி said...

கண்ணா, அபுஅஃப்ஸர், பதி...

நன்றி.

அபுஅஃப்ஸர்,

அதெல்லாம் எந்தப் பாதிப்பும் இருக்காது, தாராளமா புகுந்து விளையாடுங்க! நாங்கல்லாம் இருக்கோமுல்ல, பார்த்துக்க மாட்டமா?!!

Unknown said...

சுவாமி ... இதற்க்கு ஏதாவது பரிகாரம் உண்டா....???

ஊர்சுற்றி said...

//சுவாமி ... இதற்க்கு ஏதாவது பரிகாரம் உண்டா....??? //

அரசு வண்ணத் தொலைக்காட்சியில் 'அரசு கேபிளில்' வரும் திரைப்படங்களைப் பார்த்து கொட்டாவி விடுவது! :)))

(அரசு கேபிள் என்றால்.. அது எங்கே? என்று கேட்கக் கூடாது! குடும்பமே கழகம், கழகமே குடும்பம்)

வெட்டிப்பயல் said...

good one :-)

ஊர்சுற்றி said...

வெட்டிப்பயல் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி... :)))

அக்னி பார்வை said...

சரியா போச்சு

Anonymous said...

:-)))
எங்களைப் போல வாசகர்களுக்கும் பலன் என்னன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

கோவி.கண்ணன் said...

//இந்த நிலை அடுத்த வெள்ளிவரை(மே, 22) தொடரும் என்பதால், அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது. கும்மி பதிவர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். //

கலக்கல் !

மற்றும் தேவையான பதிவு !

Vishnu - விஷ்ணு said...

//எழுத்துலகில் புகழ்பெற 2, 5 மற்றும் 7.5 வீ டுகளின் தொடர்பு தேவை. இந்த வாரம் இந்த வீடுகள் காலியாக உள்ளதாலும் 13-ம் தேதியில் தேர்தல் வருவதாலும் உங்களில் பெரும்பாலானோருக்கு சாதகமான பலன் இல்லை //

வீடு காலியா இருக்குன்னு சொன்னீங்களே. யாருங்க ஓனர், வாடைக்கு விடுவாங்களா?

ஊர்சுற்றி said...

நன்றி அக்னி பார்வை, அனானி அப்புறம் கோவி.கண்ணன் அவர்களே.

அட விஷ்ணு... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

ஓனர்..... தெரியலீங்களே!!! 7.5 வீட்டுக்கு ஒனர் தெரியும். அது... வேலியில போறதை தூக்கி வேட்டியில விடுற எல்லாருமேதான். :)))))

Anonymous said...

gg