Monday, May 11, 2009

பெண்களே உஷார் - இது ஒட்டுக் கேட்டதல்ல!

நம் பத்திரிக்கைகளில் இந்த 'உஷார்' என்கிற வார்த்தைக்கு பெரும்பாலும் ஒரே அர்த்தம்தான் இருக்கும் என நினைக்கிறேன். அதுவும் 'பெண்கள்' என்கிற வார்த்தை இதனுடன் முன்பாகவோ பின்பாகவோ வந்துவிட்டால் 100% இது எதைப்பற்றி என்று நீங்கள் கணித்துவிடுவீர்கள். 

அதேதாங்க... 

கடந்த வாரத்தில் ஒரு 'உணவு விடுதியில்' சாப்பிட்டுக்கொண்டிருந்த போது பக்கத்து இருக்கையில் ஒருவன் வந்து அமர்ந்தான். வயது 25 இருக்கும். தென்சென்னை ஆட்டோக்காரர்களுக்கு வருமானத்தை அள்ளித்தரும் ஏதோ ஒரு 'மல்டி நேஷனல்' கம்பெனியில் பணிபுரிபவனைப் போல உடையணிந்திருந்தான். அப்போது அவனுக்கு ஒரு 'தொலை அழைப்பு' வந்தது. தன்னுடைய 'கைபேசி'யை எடுத்து பேச ஆரம்பித்தான். இனி அவன் நடத்திய உரையாடலின் ஒரு பக்கம் இங்கே. 

***டேய் ஆமா என்ன ப்ளான் வச்சிருக்க?

***சனிக்கிழமை வர்றியா? ம்ம்... 

***சரி லாட்ஜ் எந்த மாதிரி பார்க்கணும்?

***ஊட்டிக்கெல்லாம் போகவேண்டாண்டா. இந்த சீசன் டைம்ல அங்க போனா நீ வேகவச்சிடுவ. சரி அவ என்ன சொன்னா?

***மகாபலிபுரம் வர்றியா? அங்க ___லாட்ஜ்ல ரூம் போட்றலாம். 800 ரூபாயில இருந்து 1200 ரூபாய் வரும். 

***அதெல்லாம் ரூம் குடுப்பாங்கடா. நம்மள மாதிரி ஆட்கள வச்சிதான பிஸினஸே நடக்குது. அங்க போயி எம்பேர சொல்லு, கொஞ்சம் அமௌன்ட்ட குறைப்பானுங்க. நான் போன வாரம்கூட போயிட்டுவந்தேன். 

***ஆமா, எப்படிடா அவ தனியா வர்றதுக்கு சம்மதிச்சா? 

***டேய், உனக்கு காதல் தோல்வியா - நீயாடா சோகத்தில இருக்க?

***பழைய ஆளு எப்படி இருக்கா, அதான் உங்களுக்கு எல்லாம் முடிஞ்சு போச்சே! ஆமா மூணுமாசம் கூட ஆகல. அதுக்குள்ள இவ எப்படி மாட்னா? 

***சோகத்துக்கு ஆறுதல் சொல்லுறாங்களாக்கும். அது எப்படி? நீ தாடியோட தெருவுல சுத்திகிட்டு இருந்தியா, காதல் தோல்விங்கற பேர்ல. நான் சொல்றேன்டா அது காதல் தோல்வியே இல்ல. வசதியாப்போச்சுன்னு, மேட்டர முடிச்சுட்டு எஸ்ஸாயிட்ட. அத காதல் தோல்வின்னு நினைச்சுட்டு இவ மடங்கிட்டாளா?

***சரி சரி, வந்துட்டு போ. 

மக்களே, இவன் எப்படிடா பொது இடத்துல இப்படி பேசிகிட்டு இருக்கான்னு நான் முழிச்சிட்டு இருந்தேன். அவன் TASMAC பார்ல இருந்து வெளிநடப்பு செய்த வாடை வந்தது.  அதனால எட்டுப்பட்டிக்கும் சொல்றது என்னான்னா....
'காதல்ங்ற பேர்ல சிலதுகள் பண்ற கண்றாவியை கண்டுபிடிச்சு அதுல இருந்து தப்பிச்சிகிடுங்கோ'ன்னு இளசுகளுக்கு சொல்லிப்புட்டேன் ஆமா. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு. என்ன நாஞ்சொல்றது?

11 comments:

Suresh said...

மிக சரியாக சொன்னிங்க நண்பா நல்ல விஷியம்... நானும் ஒரு சமயம் பேருந்தில் இருக்கும் போது ஒரு பையன் ஒரு பெண்ணை ( கல்யாணம் ஆக போகுது போல இன்னும் சில திணங்களில் பிளாக் மெயில் செய்து கொண்டு இருந்தான் )

பெண்கள் ஜாகிரதையாய் இருந்தால் சரி தான்

Raju said...

ம்ம்..ஏமாறாம இருந்தா சரிதான்..!

☀நான் ஆதவன்☀ said...

அடக்கடவுளே!!!

அப்துல்மாலிக் said...

புரியராப்ல தெளீவா புரியவெச்சிட்டீங்க தல‌

நல்ல அட்வைஸ், Ladies should care always

வால்பையன் said...

ஆண்களுக்கு மட்டுமல்ல!
பெண்களுக்கும் இப்போ இது சகஜம் தான்!

தெய்வீக காதல் எல்லாம் சினிமாவில் தான்!

Anonymous said...

அது சரி

இந்த இடுகைக்கும் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லையா

ஊர்சுற்றி said...

ஆமாங்க சுரேஷ், டக்ளஸ், நான் ஆதவன்.

ஊர்சுற்றி said...

நன்றி அபுஅஃப்ஸர்.

வால்பையன் அவர்களே,
பெண்களிலும் ஒருசில சதவீதம் அப்படி இருக்கலாம். எனில், தலைப்பை 'ஆண்களே....' என்று மாற்றிப் போட்டு படித்துக்கொள்ளவும்...ஹிஹிஹி...
:))))

Unknown said...

நாட்டாம..............................

தீர்ப்ப மாத்திச் சொல்லு......!!!! மொதல்ல சொம்ப மாத்து....!!!


பட் விஷயம் கர்ரக்ட்டுதான் ...!!! புள்ளைங்களா.... ... எல்லாரும் சூதானமா இருங்க....!!!!

கிரி said...

//லவ்டேல் மேடி said...
நாட்டாம..............................

தீர்ப்ப மாத்திச் சொல்லு......!!!! மொதல்ல சொம்ப மாத்து....!!! //

:-)))))))

ஊர்சுற்றி said...

லவ்டேல் மேடி,கிரி... நன்றி நன்றி...