Wednesday, April 29, 2009

கற்றதனால் ஆன பயன் - பொட்டிதட்டுபவர்களின் பிதற்றல்கள்!

எத்தனை நாளுதான் எதிர் கவிதை / எதிரிக் கவிதையெல்லாம் எழுதறது?
எதிர் உரையாடல் எழுதினால் என்ன?
இந்த எண்ண ஓட்டத்தில் தோன்றியதுதான் இந்த இடுகை.
**********************

இன்றைக்கு எல்லோராலும் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயங்களாக எமது ஈழமக்களும் புலிகளும் மாறிப்போயுள்ளார்கள்.

இன்றுதான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது என்ற ரேஞ்சில், தமிழ்பட 'போலீசார்' பாணியில் ''CNN IBN", ''டைம்ஸ் நௌ'', போன்ற தொலைக்காட்சிகள் அலப்பறை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மௌண்ட் ரோடு மகா விஷ்ணுவும்(THE HINDU) வழக்கம் போல தீர்ப்பு சொல்ல எப்போதோ கிளம்பி விட்டார்.

இந்தச் சூழ்நிலையில் செல்வேந்திரன் கவிதை பாடிய, மேற்கூறிய இந்த ஊடகங்களையே 'கடவுளாக' நினைக்கும் ஒரு கும்பல் என்னென்னவெல்லாம் விவாதிக்கிறது என்று ஒரு இடுகையிட ஆசை. எனவே, சிலபல தருணங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களையெல்லாம் தொகுத்து ஒரு உரையாடல் வடிவத்தில் தருகிறேன். படித்துவிட்டு உங்களை கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

பொட்டிதட்டும் படித்த அறைகுறைகள்: பொ.த.ப.அ.கு. - சுருக்கமாக பொ.த.

பொ.த.-1: எதுக்காக இந்த பந்த் நடக்குது?

பொ.த.-2: பிரபாகரனுக்காக நடக்குது.

பொ.த.-1: ஒரு தீவிரவாதிக்காகவெல்லாமா பந்த்! இப்படியே போனா, ஒசாமா-வுக்கும் பந்த் நடத்த வந்திடுவாங்க. தமிழ்நாட்டுல மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும்.

நான்: தீவிரவாதின்னு எப்படி சொல்றீங்க, அவங்க சண்டை போடற காரணத்தை ஆராய்ஞ்சு பார்த்துதான் தீவிரவாதமா இல்லையான்னு சொல்ல முடியும்.

பொ.த.-2: பிரதமர் மன்மோகன் சிங்கே 'பிரபாகரன் ஒரு தீவிரவாதி'ன்னு சொல்லியிருக்காரு.

பொ.த.-1: இதோ பாரு, இந்த விக்கிபீடியா பேஜை. இதுல போட்டிருக்கே! இதுக்கு மேல இதைப்பத்தி பேசாத. இத்தோட விட்டுடு. வினை விதைச்சவன் வினை அறுக்கத்தான் செய்யணும்.

நான்: (அந்த விக்கி பக்கத்தை பார்த்தால், அது யார் வேணுண்ணா எடிட்ட கூடிய பக்கம் - இந்த கொடுமையை என்னான்னு சொல்ல!). ஏன் அவங்க சண்டை போடறாங்கன்னு, நான் ஒரு பக்கத்துல உங்களுக்கு எல்லாம் புரியுற மாதிரி English -ல எழுதியிருக்கேன் இதைப் படிச்சு பாருங்க (நான் ஆங்கிலத்தில் ஒருபக்க அளவில் எழுதினது).

பொ.த.-3: ஈராக்கோ, ஆப்கானிஸ்தானோ, இலங்கையோ - எங்கேனாலும் மனிதர்கள் கொல்லப்படக்கூடாது (ஏன் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க கொஞ்சமும் ஆர்வமில்லாமல்).

பொ.த.-2: தமிழ்ஸ் எதுக்கு அங்கே போயி சண்டை போடணும்?

நான்: நான் எழுதின அந்த பக்கத்தை படிச்சிட்டியா?

பொ.த.-2: படிச்சிட்டேன். ஆனா தமிழ்ஸ் எதுக்கு அங்கே போயி சண்டை போடணும்?

பொ.த.-4: இலங்கையில ஏதோ சண்டையாமே, டிவி-ல பார்த்தேன்!

நான்: தமிழர்களும் காலங்காலமா அங்க குடியிருக்கிற பூர்வீக குடிமக்கள்தான், படிக்கிறதுல, அரசியல்ல சிங்களவர்களுக்கு ஒரு நியாயம் தமிழனுக்கு ஒரு நியாயம்னு இருக்கிறது, என்னு கேட்டா கீழ்த்தரமா நடத்துறது, அடிக்கிறது.... இன்னும் என்னென்ன கொடுமையோ நடந்திருக்கு. அதையெல்லாம் எதிர்த்து தட்டிக்கேட்டுத்தான் இந்த போரே நடக்குது. உன் பக்கத்து வீட்டில, தெருவுல இருக்குற அண்ணனும் அக்காளும் கொல்லப்படுவதை பார்த்துகிட்டு எத்தனை நாளுக்கு அமைதியா இருக்கமுடியும். அதனாலதான் புலிகள் ஆயுதத்தை எடுத்துகிட்டு சண்டை போட வந்தாங்க.

பொ.த.-2: என்ன இருந்தாலும் அது வேற நாடு. நாம எப்படி அங்க தலையிட முடியும்?

நான்: அப்போ, நீயும் நானும் கொடுக்குற வரிப்பணத்துல தயாராகிற ஆயுதங்கள் மட்டும் அங்கே தலையிடலாமா?

பொ.த.-4: நான் கூட டி.வீ.யில பார்த்தேன். ஆனாலும் நம்ம நாட்டுலயே எத்தனையோ பிரச்சினை இருக்கு. ஊழல் - சுகாதாரம் - போக்குவரத்துன்னு.... அதெல்லாம் விட்டுட்டு இது எதுக்கு நமக்கு?

நான்: இங்க இருக்கிற இந்த சில இலட்ச, கோடி ஊழலை விட சில நூறு, ஆயிரம் உயிர்களின் மதிப்பு ரொம்ப அதிகம்.

**********************

நானும் ஒரு அரைகுறைதான். என்னையே நான் நொந்து கொள்கிறேன். ஆனாலும் எனக்கு இருக்கிற குறைந்தபட்ச புரிதலைக் கொண்டு இவர்களுக்கு ஈழப்பிரச்சினைக்கான மேலோட்டமான காரணத்தைக் கூட புரியவைக்க முடியவில்லை. இங்கே கொடுமை என்னவென்றால், தமிழ் பேசும் நல்லுலகத்தோரும் இதில் அடக்கம். ஆங்கில ஊடகங்கள், பிரச்சனையின் இப்போதைய நிலவரத்தை மட்டுமே ஏதோ 20-20 ஆட்ட நிலவரம் போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது ஏன் தொடங்கியது? என்று ஒரு வார்த்தை கேட்பதில்லை. ஏன் என்று கேள்வி வந்தால்தானே, அதை எப்படி தீர்த்துவைக்கலாம் என்ற அடுத்த முறையான கேள்வி வரும்.

*********************

சாதாரண மக்களுக்குக் கூட, அங்கே செத்து மடிந்துகொண்டிருக்கும் உயிர்களின் வலி எளிதாகப் புரிகின்றது. ஆனால் சற்றே படித்துவிட்டு, பொட்டி தட்டிக்கொண்டிருக்கும் என்போன்றோரில் பெரும்பாலானோருக்கு இதைக் கவனித்துப் பார்க்கக் கூட நேரமில்லை. சமூகத்தைப் பற்றிய - அட அக்கறை கூட வேண்டாங்க - ஒரு பார்வை கூட இல்லாமல்தான் இருக்கிறார்கள்.

9 comments:

வால்பையன் said...

:(

Suresh said...

மனது கணக்கிறது

Suresh said...

/அட அக்கறை கூட வேண்டாங்க - ஒரு பார்வை கூட இல்லாமல்தான் இருக்கிறார்கள்.//

நச்

கடைக்குட்டி said...

என்னத்த சொல்றது.. மனசுலேர்ந்து சொல்லி இரூக்கீங்க..

ஹ்ம்ம்

யூர்கன் க்ருகியர் said...

சரியானமுறையில் சொல்ல இருக்கிறீர்கள் !

ஊர்சுற்றி said...

வால்பையா,
என்னத்தை சொல்ல...!
இங்க சிலபேரு பண்ணுற அலப்பறையைப் பார்த்தா... .

நானும் இப்படித்தான். மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.

ஊர்சுற்றி said...

நன்றி சர்வின்னா,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

ஊர்சுற்றி said...

நன்றி கடைக்குட்டி & ஜுர்கேன் க்ருகேர்.....

பின்தொடருவதற்கும் ஒரு நன்றி கடைக்குட்டி அவர்களே.

ஊர்சுற்றி said...

தமிலிஷில் குத்து குத்துன்னு குத்தி,
10க்கு மேலே கொண்டு சென்ற வலைஞர்களுக்கு நன்றி நன்றி நன்றி.