Monday, April 27, 2009

பதிவர் பட்டறை - ஏதாவது செய்யணும் பாஸ்!

வெகு காலத்திற்கு முன்னால் 'தேன்கூடு தேன்கூடு' என்று ஒருதிரட்டி(இணையத்தின் வளர்ச்சியில் இந்த மாதக்கணக்கெல்லாம் வெகுகாலம்தான்) ஒன்று இருந்தது. அதன் சுவையிலேதான் இந்த பதிவுலகத்தின்கதவுகள் Chronicles of Narnia போல திறந்தது (இன்றும் அவ்வப்போது 'Bookmarking" ல் உள்ள அந்த லிங்கை கிளிக்குவது உண்டு, ஒருவேளை தேன்கூடு திரும்பவும்வந்திருக்குமா என்று).

தேன்கூடு கலைந்து விட்டாலும், அங்கு ரசித்த 'சுடர் ஒட்டம்' இன்னும் சுகமாகஇருக்கிறது. அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு 'பதிவர் பட்டறை' பற்றியும்தெரிந்துகொண்டேன். மிகவும் ஆசைப்பட்டும் அந்தப் பட்டறையில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

கடந்த 'பதிவர் சந்திப்பில்(05-04-2008, சென்னை)' 'ஏன் இன்னொரு பதிவர்பட்டறை' நடத்தக்கூடாது/நடத்த இயலவில்லை?' என்று கேள்வி எழுந்தது. " 2007 பட்டறையை நடத்திய "தன்னார்வத் தொண்டர்கள்" இப்போது ஒரே இடத்தில் இல்லை" என்பது அனுபவமிக்க பதிவர் 'பாலபாரதி' அவர்களின்கருத்தாக இருந்தது. புதிதாக தொண்டர்கள் வருவார்களா என்றுதெரிந்துகொள்வது அல்லது தன்னார்வம் மிக்கவர்களை ஒன்றுதிரட்டுவது, பின்அவர்களை ஒருங்கிணைத்து ஒரு பட்டறை நடத்துவது, இதில் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனை தீவிரமாக யோசித்து யோசித்து என் மீசையில் பாதி காணாமல் போய்விட்டது (ஆமாங்க மீசையை வருடிக்கொண்டே யோசித்தால் மூளை இன்னும் வேகமாக வேலை செய்யுமாம்!). அப்போதான் நம்ம வலையுலக ஹீரோ 'நர்சிம்' மின் மின்னல் தலைப்பு 'ஏதாவது செய்யணும் பாஸ்!' ஞாபகத்துக்கு வந்தது. நர்சிம் இறுதிவடிவம் கொடுத்துவிட்டாலும் 'ஏதாவது செய்யணுமே' என்கிற ஏக்கத்தில் தலைப்பை இட்டுவிட்டேன்.

இன்று பதிவர்களின் எண்ணிக்கையும் அதன் வீச்சும் 2007ல் இருந்ததைவிட பலவிதங்களில் அதிகரித்திருப்பது எல்லோரும் அறிந்ததே. வலையுலகின் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் ஏதேனும் ஒருவிதத்தில் சாதாரண பொதுமக்களைக் காட்டிலும் சற்றே அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்; பரந்த பார்வையுடன் உலகத்தை பார்க்கும் திறனையும் பெற்றுவிடுகிறார்கள் என்பது என் எண்ணம். எனவே, புதிய பதிவர்களின் வரவையொட்டியும் இந்த பதிவுலகத்தை மேலும் வளர வைக்கவும் முயற்சிகள் எடுக்கவேண்டியது, ஒவ்வொரு பதிவரின் கடமையாகிறது.

அதற்காக இந்த 'பதிவர் பட்டறை' யை நடத்த ஒரு 'தன்னார்வத் தொண்டனாக' என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். ஏற்கெனவே நண்பர் 'ஸ்ரீ' பதிவர்சந்திப்பு பற்றிய தன்னுடைய இடுகையில் தன்னை ஒரு தொண்டனாகஅறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதை நடத்துவதில் ஏதேனும் 'நுண்ணரசியல்' மேலும் மைக்ரோ, நேனோஅரசியல்கள் அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் அதை மூத்தபதிவர்கள் அலசி ஆராய வேண்டும். அவற்றை களைந்துவிட்டு வெகு விரைவில் 'பதிவர் பட்டறை' நடத்துவது குறித்து மூத்த பதிவர்கள் யாரேனும்முன்னெடுத்துச் வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னைப் போன்ற 'அஞ்சா நெஞ்சர்'கள்(!!!) களத்தில் இறங்கி பணிபுரிய காத்திருக்கிறோம்.

பதிவர் பட்டறைக்கு எனது பங்கு 1 கோடி - 2 கோடி என்று 'ஆத்துல
போடுற கதையா(!)'க ஏலம் விட்டுவிட்டு சும்மா
இருந்து விடாமல்,
ஏதாவது செய்யணும் பாஸ்.

ஒரு முக்கியமான செய்தி:
ஆசிப் அண்ணாச்சியோட அசத்தலான கரப்பான் பூச்சி விருதை இந்தஇடுகைக்காக நானே எடுத்து மாட்டிக் கொண்டேன். :)

***********************************

இந்த இடுகையை இரண்டு வாரமாக டிராஃப்டில் வைத்துக் கொண்டே இருந்தேன். கடந்த சனிக்கிழமை (25-04-2009) பதிவர் சந்திப்பில் 'பதிவர் பட்டறை' நடத்துவதுநன்மையே என்பதை உறுதி செய்து கொண்டு இந்த இடுகையை இடுகிறேன். தலபால பாரதி' அவர்கள் இந்த பட்டறைகள் மூலம் பொதுஜன ஊடகங்களின் பார்வை பதிவர்கள் மேல் படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும், 2007-ல் நடந்த பட்டறை இந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சொன்னார். '

'பதிவர் பட்டறை எங்கே?' எனும் மற்றொரு இடுகை இங்கே.


*************************

தமிழ்மணத்தில் கையை உயர்த்திப்பிடிக்க இங்கே கிளிக்குங்க.

19 comments:

ஊர்சுற்றி said...

யாருமே இதைப்பத்தி பேசலன்னா அப்புறம் உண்ணாவிரதம் இருக்க வேண்டிவரும்(!!!). எனவே பதிவர்கள் தங்கள் மேலான ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Suresh said...

நல்ல பதிவு பகிர்தலுக்கு நன்றி நண்பா

Suresh said...

//'பதிவர் பட்டறை' நடத்துவது குறித்து மூத்த பதிவர்கள் யாரேனும்முன்னெடுத்துச் வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்./

தலைவா புதிய பதிவர்களுக்கு உதவியாய் சில பதிவுகள் டிராப்ட் செய்து வைத்துள்ளேன் கண்டிப்பா அவர்களுக்கு அது உதவியாய் இருக்கும்

Raju said...

ஊர் சுற்றி உண்ணாவிரதம் இருக்க காரணமான கலைஞர் அவர்களுக்கும் அவர் உண்ணாவிரதம் இருக்க காரணமான ஜெயலலிதாவுக்கும் இன்னும் எல்லா காரணங்களுக்கும் நன்றிகள்

Raju said...

ஏதாவது செய்யணும் பாஸ்..!

அப்துல்மாலிக் said...

நிச்சயம் என்னுடைய பங்கும் இருக்கும்

"ஏதாவது... செய்யனும் பாஸ்"


அட எதுனு சொல்லுங்கப்பு.. காத்திக்கிட்டுக்கோம்லே

ஊர்சுற்றி said...

சுரேஷ், வாங்க... சீக்கிரம் உங்க இடுகையெல்லாம் பப்ளிஷ் பண்ணுங்க... புதியதாகத் தகவல் தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஊர்சுற்றி said...

டக்ளஸ் அவர்களே...
இன்னும் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலீங்கோ....
அதுக்குள்ளே நீங்களே இருக்க வெச்சிடுவீங்க போல இருக்கே... :)))

ஊர்சுற்றி said...

அபுஅஃப்ஸர்,

நானும் அதான் காத்துகிட்டு இருக்கேன். பார்க்கலாம் பெரிய தலைகள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று.

பிராட்வே பையன் said...

உங்களை வழிமொழிகிறேன் ...

அகநாழிகை said...

all the best for your efforts.

ஸ்ரீ.... said...

பட்டறை குறித்த நேர்த்தியான பதிவு. விரைவில் அனைவருக்கும் உகந்த நேரமாகத் தேர்ந்தெடுத்து நடத்தியாக வேண்டும். இதுகுறித்து நானும் என்னாலான வழிகளில் முயற்சி செய்கிறேன்.

ஸ்ரீ....

ஊர்சுற்றி said...

ஹசன், வாங்க வாங்க.

ஊர்சுற்றி said...

அகநாழிகை அவர்களே...
நன்றி.

வாங்க ஸ்ரீ.
சேர்ந்து செய்வோம்.

பீர் | Peer said...

//ஒரு 'தன்னார்வத் தொண்டனாக' என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்..//

நானும் உள்ளேன் ஐயா..

//Suresh said...
தலைவா புதிய பதிவர்களுக்கு உதவியாய் சில பதிவுகள் டிராப்ட் செய்து வைத்துள்ளேன் கண்டிப்பா அவர்களுக்கு அது உதவியாய் இருக்கும்//

காத்திருக்கிறேன்...Suresh,

வால்பையன் said...

செய்வோம் பாஸ்!

எனக்கும் சொல்லி அனுப்புங்க!

Unknown said...

அடங்கொன்னியா ...!! ஆமாங்கோவ் ...!!!! கண்டிப்பா ஏதாவது செஞ்சுபோடோனுமுங்கோவ் ....!! இல்லீனா தெய்வ குத்தமாயிபோயிருமுங்கோவ் ....!!!

ஊர்சுற்றி said...

வாங்க மேடி,
ஆமா - குத்தமாயிரும்ல.
அதனால ஏதாவது செய்யணும் பாஸ்.

ஊர்சுற்றி said...

ஜில்பீர் அண்டு வால்பையா,

வாங்க - கட்டாயமா ஒண்ணா சேர்ந்துப்போம்.