Wednesday, April 15, 2009

குழந்தைகளுடன் சிறுத்தை! - மழலையர் பள்ளி ஆண்டுவிழாவில் திருமாவளவன்


வேளச்சேரி, நல்ல மேய்ப்பர் மழலையர் பள்ளி - 22 வது ஆண்டுவிழாவில் திருமாவளவன்

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் ௧௪, (ஏப்ரல்-14, 2009) அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மாலை 6:30 மணியளவில் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி சிறு உரையையும் நிகழ்த்தினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

மழலையர் பள்ளி என்பதால் முடிந்தவரை சீக்கிரமே செல்ல நினைத்து, வழக்கம்போல் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தேன். பக்கத்து தெருவில் நடந்த நிகழ்வு என்றாலும் பாரிமுனையிலிருந்து (இன்னொரு விடயமாகச் சென்றிருந்தேன்) வருவதற்கு தாமதமாகிவிட்டது.

வேளச்சேரி 'சோதனைச் சாவடி' (Check Post) பேருந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி, வண்டிக்காரன் தெருவில் நுழைந்து, முதலாவதாக வரும் இடது சந்தில் திரும்பினால் 'நேரு நகர்' வந்துவிடும். இந்த தெருவில் சற்று தொலைவில் இருக்கிறது 'நல்ல மேய்ப்பர் மழலையர் ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளி' (குட் ஷெப்பர்ட் நர்சரி & பிரைமரி ஸ்கூல் - Good Shepherd Nursery & Primary School).

நான் சென்றபோது, குழந்தைகள் தலையையும் கையையும் மட்டுமே ஆட்டி நடனமாடிக்கொண்டிருந்தார்கள் அல்லது பாடல் பாடிக்கொண்டிருந்தார்கள். இதோ புகைப்படங்கள்.




ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு நடுவிலும், தொகுத்து வழங்கிய ஒரு ஆசிரியை மிகவும் வேண்டி வேண்டி கைதட்டும்படி சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த வேண்டுகோள், கடுப்படித்தது.

ஒரு பாடலுக்கு ஆட வந்த குழந்தைகளில் நடுவில் நின்ற இருவர் கடைசிவரை அசராமல் ஆடாமல் நின்று அசத்திவிட்டனர்! இதோ பாருங்கள்...

அந்த பாட்டு முடிந்ததும் தொகுத்துவழங்கிய மற்றொருவர், 'அசராமல் ஆடாமல் நின்ற அந்த இரண்டு பேருக்கும் நல்லா கைதட்டுங்க' என்று சொல்லி ்கூட்டம் முழுவதையும் வெகுநேரம் கைதட்ட வைத்து அசத்திவிட்டார்.

திருமா வந்து, பேசிவிட்டுச் சென்றுவிட்டாரோ என்று நினைத்திருந்த நேரத்தில், வெடிகள் வெடித்தன, புகைப்படக் கருவிகள் மேடைக்கு எதிரே திரும்பின. நானும் திரும்பிப் பார்த்தேன். வண்டிக்காரன் தெருவில் இருந்து திருமாவளவன் நடந்து வந்துகொண்டிருந்தார்.


அவரது நடையில் அத்தனை இயல்பு. எந்த பந்தாவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக நடந்து சென்று மேடையேறினார். விரல்விட்டு எண்ணும் அளவுடைய தொண்டர்களே சில கட்சிகளில் உள்ளனர் என்றாலும், அதன் தலைவர்கள் காட்டும் அலப்பறைகளை நினைக்கும் போது, திருமா பலபடிகள் மேலே இருக்கிறார்.



திருமாவளவன் அத்துணை மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். சில மாதங்களுக்கு முன் சென்னை, சானடோரியத்தில் 'தேசிய சித்த மருத்துவ நிறுவனம் - விடுதி திறப்பு விழா' - வில் வைத்து பார்த்தபோது இருந்த அந்த ஆவேசம் இல்லை. குத்துவிளக்கு ஏற்றிவிட்டு பேசினார். சற்றுமுன்னர்தான் முதல்வர் 'கருணாநிதி'யை சந்தித்துப் பேசிவிட்டு வருவதாகக் கூறினார்.
'விடுதலைச் சிறுத்தைகள்' கட்சி சார்பாக, வேளச்சேரி 'வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில்', கட்டடத்துடன் வாங்கப்பட்ட இடத்தில் 'மருதம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி' தொடங்கப்பட இருப்பதைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தான் ஒண்டிக்கட்டையாக இருப்பதால், சென்னைக்கு வந்தால் தங்குவது அந்தக் கட்டடத்தின் ஒரு அறையில்தான் எனவும் தூங்குவதற்கு ஒரு பாயை மட்டும் பயன்படுத்துவதாகவும் சொன்னார்.


மயிலை மாங்கொல்லையில் 'விருதுகள் வழங்கும் விழா' விற்கு செல்ல வேண்டும் என்று கூறி இருபது நிமிடங்களில் விடைபெற்றுச் சென்றார்.

நானோ, எனது புகைப்படக் கருவியின் 'மின்கலம்' தீரும்வரை குழந்தைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

12 comments:

Unknown said...

அட பாவமே.......!! உங்களை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது.....!! தொல்.திருமாவளவனுக்கு வாய்ஸ் ரொம்ப கம்மி... ( மாத்தி மாத்தி ஜால்ரா அடுச்ச்சா இப்படித்தான்....) .... !!! அவரு எங்க தூங்குனா யாருக்கென்ன ... அத அங்க சொல்லி அரசியலாக்கனுமா........??? எல்லாம் வெளி வேஷம்.......!!!

வால்பையன் said...

//"குழந்தைகளுடன் சிறுத்தை! - மழலையர் பள்ளி ஆண்டுவிழாவில் திருமாவளவன்"//

2019 ல் ஆட்சிய பிடிக்க இப்பவே மயற்சியை தொடங்கிட்டார்!

தேவன் மாயம் said...

குழந்தைகளின் புகைப்பட தொகுப்பு அருமை!!!

ஊர்சுற்றி said...

லவ்டேல் மேடி,

அவருக்கு வாய்ஸ் இல்லேன்னாலும், வருங்கால அரசியலில் முக்கியமான ஆள் அவர். அப்புறம் எங்க தெருவு பக்கத்திலேயே நடந்தது வேறு. அதைப் பதிவு பண்ணலன்னா ஏப்படி... அதான். இதுல அரசியல்லாம் ஏதும் இல்லைங்க.

ஊர்சுற்றி said...

வால்பையா,
அது அப்படியா....அது எனக்குத் தெரியாதே!!!

ஊர்சுற்றி said...

Thevanmayam,

நன்றி.

அப்துல்மாலிக் said...

நல்ல தகவல்...

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா

ஊர்சுற்றி said...

வாங்க அபுஅஃப்ஸர்,

நன்றி.

Anonymous said...

நல்ல தொகுப்பு படங்களுடன்... நன்றி நண்பரே!

ஊர்சுற்றி said...

நன்றி ஷீ-நிசி

கடைக்குட்டி said...

ஊர் சுற்றின்னு கரெக்டாத்தான் பேர் வெச்சு இருக்கீங்க!!!!

ஊர்சுற்றி said...

நன்றி கடைக்குட்டி....