அட ஆமாங்க. இல்லேண்ணா இப்படி ஒரு பதில் வருமா?
ஆ.வி. "ஹாய் மதன்: கேள்வி - பதில்"
19.11.2008
எம்.கதிர்வேல், சென்னை-116.
*பாரி கீழே கிடந்த முல்லைக் கொடிக்கு ஆட்களிடம் சொல்லி பந்தல் போட்டிருக்கலாம். மயிலுக்கு குளிர் அடிக்காமல் கதகதப்பான கூண்டில் அடைத்திருக்கலாம் பேகன். அரசர்கள் தத்துப்பித்தென்று எதையாவது செய்ய, அதை நாமும் காலங்காலமாக பாராட்டிக்கொண்டு இருக்கிறோமே. ஈ.வெ.ரா. பெரியார் நம்மைப் பகுத்தறிவோடு சிந்திக்கச் சொல்லியும் கேட்பாரில்லை. தவறில்லையா?
மதன்: நீங்கள் கேட்டிருப்பது கேள்வி இல்லை - ஒரு குட்டி கட்டுரை. நீங்கள் உடனே BLOG ஆரம்பிப்பது நல்லது.
அது என்னதுங்க, கேள்வியே இல்லாத ஒண்ணை எதுக்காக "கேள்வி - பதில்" -ல வெளியிடணும். வழக்கமான மதன் பாணி இல்லாம, சம்பந்தமே இல்லாம BLOG ஆரம்பிக்க ஐடியா கொ்டுக்கணும்.
BLOG-பதிவு, வலையுலகம் - இந்த வார்ததையெல்லாம் கேட்ட உடனே மதனுக்கு பெரியார்தான் கண்முன் வருகிறாரா? அந்த அளவுக்கு வலையுலகம் பெரியாரிய மக்களால் நிரம்பி வழிகிறதா?!!!
செய்தி:
'இணைய ஊடகத்தில் பெரியாரின் குழந்தைகளுடைய பங்களிப்பு' குறித்து சுப.வீ. அவர்களின் மகிழ்ச்சியை இந்த பேச்சினூடாக காணலாம். UTMA - ஆண்டுவிழாவில்.
http://www.youtube.com/watch?v=4sx0zxjgF50
6 comments:
விகடனை இன்னுமா படித்து கொண்டு இருக்கிறீர்கள்,
ஞானியின் ஒ பக்கங்களை போட தைரியம் இல்லை, வியாபாரத்திற்காக பத்திரிக்கை தர்மத்தை தூக்கி எரிந்த விகடனை புறக்கணியுங்கள் (ஆச்சு வடிவில் உள்ள விகடன் மற்றும் இணையம் வடிவில் உள்ள விகடன், இரண்டையும் புறக்கணியுங்கள்).
குப்பன்_யாஹூ
கேள்வி கேட்டவர் பெரியாரிய சிந்தனை உடையவராக இருப்பதனால மதன் அப்படி சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. இப்படி யோசிப்பவராக இருப்பவர், வலைப்பூவில் தன் கருத்தை பக்ரியாலாம் என்று சொன்னதாக நான் கருதுகிறேன்.
மதனைப் பற்றிய தங்களது ஆங்கிலப் பதிவையும் படித்தேன். அப்படி என்ன அவர் மீது உங்களுக்கு காண்டு ;)
குப்பன்,
எதையும் விட்டுவிடுவதில்லை.
எல்லாவற்றையும் படித்துவிடவேண்டும் என்கிற ஒரு ஆசை.
அரவிந்த்,
மதன் மீதும் அவர் எழுத்துக்களின் மீதும் எந்தக் கோபமும் இல்லை. ஆனால் குழப்பும்படியான குதர்க்கமான அவருடைய சில பதில்கள் மீதுதான்...
எதை வேணா எழுதறத்துக்கு தான் ப்ளாக் என்கிற அர்த்ததில் சொல்லியிருக்காரோ..?
Absolutely casual concurrence
Post a Comment