நினைத்தாலே இனிக்கும்
*நான் படம் நெடுக கடுப்புடன் பார்த்த மற்றுமொரு திரைப்படம்.
*கல்லூரியைக் கருவாக்க கொண்டு வெளிவந்திருக்கிற மற்றுமொரு திரைப்படம்
*த்ரில்லர்-னெல்லாம் சொல்ல முடியாதுங்க!
*குடும்பத்தோடு பார்க்கலாம், ஆனால் தரமான படமெல்லாம் கிடையாது.
*நண்பர்களோடு சேர்ந்து கடுப்பாகலாம்.
*காதலை திரைக்கதையில் திணித்திருக்கிறார் இயக்குனர்.
*நகைச்சுவை ஏதோ பெயருக்கு இருக்கிற திரைப்படம்.
*ரசிக்கக் கூடிய பாடல்கள் என்று எதுவும் இல்லைங்க.
இப்படி பல கொடுமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
எனது பார்வை:
இந்த கதையின் மலையாளப் படத்தைப் பார்த்திருந்தாலும், அதனை முடிந்தவரை தவிர்த்துவிட்டே இந்தப் படத்தை பார்க்கத்தொடங்கினேன்.
அருமையான கதையை மோசமான திரைக்கதையால் சொதப்பியிருக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேல். படத்தின் முதல் பாதியில் பார்வையாளனை படத்தோடு ஒன்ற விடவே இல்லை. அந்த முதல் பாடல் - மனதில் ஒட்டவே இல்லை. நண்பர்ளின் கல்லூரி வாழ்க்கையை சித்தரிக்க வேண்டிய பாடலில், சும்மா கடலில் நான்கு பேரை விட்டு பாடவும் ஒடவும் வைத்துவிட்டது, அவர்களின் நட்பைப் பற்றி எந்த தடயத்தையும் படத்தில் விடாமல் செய்துவிட்டது. 'செக்ஸி லேடி' பாடல் வந்தபோதே கடுப்பும் சேர்ந்து வந்து ஒட்டிக்கொண்டது (அந்தப் பொண்ணு அழகாக ஆடியதைக் கூட ரசிக்க முடியாமல் போய்விட்டது!). வெறும் சண்டை போட மட்டுமே கல்லூரியைக் காட்டியிருக்கிறார்கள். இப்படி எந்த தமிழகக் கல்லூரி இருக்கிறது என்று தெரியவில்லை. முதல்பாதியில் படத்தின் முக்கிய முகங்களை நம் மனதில் பதியவைக்க இயக்குனர் தவறுவதால், இரண்டாம் பாதியில் என்னதான் கதை வேகமாகச் சென்றாலும், பார்வையாளனாக கதாப்பாத்திரங்களின் உணர்வுகளோடு ஒன்றமுடியவில்லை.
எனது கோபங்கள்:
இயக்குனர்களே, அரவாணிகளை வைத்து கிண்டல் செய்துதான் படமெடுப்பேன் என்று சொன்னால் - தயவுசெய்து நீங்கள் படமெடுக்க வராதீர்கள்.
இந்தமாதிரி கழுத்தறுக்கும் இயல்புக்கு மீறிய வகுப்பறை காட்சிகளை, இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் எங்களுக்கு காட்டப் போகிறீர்கள்?
ஒரு அழகான கதைக்கு சற்றும் பொருந்தாத இசையைக் கொடுத்து, கெடுத்து விட்டார் 'விஜய் ஆன்டனி'.
எனது கேள்விகள்:
+மலையாள வாசனை நிறைந்த (மேலதிக விமர்சனம் - என்வழி) ஒரு திரைப்படத்தை தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ப மாற்றும்போது அதற்கான கல்லூரி சம்பவங்களை வைக்க வேண்டாமா?
+500 பேர் தங்கியிருக்கிற விடுதியில், ஒரே ஒரு சமையல் மாஸ்டர்தான் இருப்பாரா? அவரேதான் ஜெனரேட்டரையும் ஸ்விட்ச் ஆன் பண்ணுவாரா?
+முதல் பாடலில் கடற்கரையில் 'ப்ரியாமணி' வரவேண்டிய அவசியம் என்ன?
+கல்லூரியில் நடந்த விபத்து பற்றி, கல்லூரி முதல்வர் அந்த மாணவனின் வீட்டுக்கு வந்தபின்தான் விசாரிப்பாரா?
+இசை என்கிற பெயரில் இந்த அமைதியான படத்தில், விஜய் ஆன்டனியை 'வன்முறை' நிகழ்த்த அனுமதித்தது ஏன்?
+பாடலில் அங்கங்கு 'Information Technology Block' , 'Machines Shop', 'Auditorium' இப்படியெல்லாம் காட்டினால், கல்லூரியில்தான் படம் நடக்கிறது என்ற உணர்வை பார்வையாளனுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று எண்ணமோ?
மேலேயிருக்கிற படத்தைப் பாருங்கள். எனது முந்தைய இடுகையில் இருக்கிற படத்தையும் பாருங்கள். உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வுகள் தோன்றுகின்றன. அதைத்தான் இந்த தமிழ் பதிப்பில் இயக்குனர் செய்திருக்கிறார்.
6 comments:
செம ஹாட்! :)
பயங்கர கோபமா இருக்கீங்க போல. நான் மலையாள படத்தை ரீலிசான அப்பவே பார்த்துட்டேன். அருமையான திரைக்கதை. தமிழ்ல எடுக்க போறேன்னு சொன்னப்பவே தலையில அடிச்சுகிட்டேன்.
அதுல வர்ர எலக்ஷன் சீன்ஸ் எல்லாம் எப்படி இதுல மேனேஜ் பண்ணினாங்க்ன்னு தெரியல. தமிழ்நாட்டுல கல்லூரிக்கு அது ஒத்து போகாது
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நன்றி நான் ஆதவன்.
தமிழுக்கு ஏத்த மாதிரி மாத்துறதும் சரி, முதல் பாதியில் படத்தோட ஒன்ற வைக்கிறதும் கதாபாத்திரங்களை உறவாட விடுவதிலும் சரி - தமிழில் இயக்குனர் பெரிய கோட்டை விட்டிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன்.
அப்ப மலையாள படம் மாதிரி இல்லையா?
யோ வாய்ஸ்,
ஆமாங்க. அந்த த்ரில் அனுபவம் இல்லீங்க.
Post a Comment