CLASSMATES:
*2006ல் மலையாளத்தில் வெளியாகி 'ஹிட்' டான ஒரு திரைப்படம்.
*நான் முழுமையாகப் பார்த்த முதல் மற்றும் கடைசி மலையாளத் திரைப்பட்ம்.
*கல்லூரியை கருவாகக் கொண்டு வெளிவந்த இன்னும் ஒரு படம்.
*ஒரு த்ரில்லர் என்றுகூட சொல்லலாம்.
*குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு தரமான திரைப்படம்.
*நண்பர்களோடு சேர்ந்து ரசித்துப் பார்க்கலாம்.
*காதலையும் கதையோடு சேர்த்தே சொல்கிற ஒரு படம்.
*நகைச்சுவையும் இயல்பாக இணைந்து செல்கிற படம்.
*அருமையான ரசிக்கக் கூடிய பாடல்களைக் கொண்ட திரைப்படம்.
இப்படி பல விசயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கதை:
கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரே வகுப்பு மாணவர்கள்
பல வருடங்களுக்குப் பிறகு திட்டமிட்டு ஒன்றாக
சந்திக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து
சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கச் செல்லுகிறார்கள். அந்த
இரவு நடக்கும் ஒரு கொலை முயற்சியில் இருந்து
தப்பிக்கிறார் கதையின் நாயகன். "நாயகனைக் கொல்ல
முயற்சி செய்தது யார்?" என்ற கேள்வியோடு கதை
ஆரம்பித்து, அவ்வப்போது பின்னோக்கிச் செல்கிறது.
கதையில் காட்டப்படும் முக்கியமான பாத்திரங்களுக்கும்
நாயகனுக்குமான தொடர்பு, கோபம், மற்ற காரணங்களை
கொசுவர்த்தி சுருள் இல்லாமல் பின்னோக்கிச் சென்று
காட்டுகிறது திரைக்கதை. கதையில் கல்லூரியில்
காட்டப்படும் சம்பவங்களை எனக்குத் தெரிந்து எந்தக்
கல்லூரியிலும் பொருத்திப் பார்க்க இயலாததால், ஒருசில
காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. ஆனால், கேரளத்து
கல்லூரி பின்னணிகளையும் அந்த கால வரலாறுகளையும்
கேட்டபின்பு அவை இயல்பானவையாக மனதில்
பதிந்துவிட்டன.
நட்பு, காதல், கல்லூரி சம்பவங்கள் அத்தனையும் மிக
சுவாரசியமாகக் காட்டியதில், திரைக்கதை கச்சிதம்.
விகடன் மாதிரி மார்க் போட்டா 46 போடலாமுங்கோ!
இயக்கம்: லால் ஜோஸ்
இசை: அலெக்ஸ் பால்
உங்களுக்காக படத்திலிருந்து ஒரு மிகச்சிறந்த பாடல்.
டிஸ்கி:
*'கிளாஸ்'மேட்ஸ் என்று தமிங்கிலிஸில் எழுதினால் - டாஸ்மாக் ஞாபகம் வர வாய்ப்பு இருப்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க வேண்டியதாகிவிட்டது!
*வரும் வெள்ளிக்கிழமை வெளிவர இருக்கும் 'நினைத்தாலே இனிக்கும்' படத்துக்கான திரைவிமர்சனம் இதுவல்ல.
*நினைத்தாலே இனிக்கும்-2009 படம் மேலே கூறிய "Classmates" படத்தின் மறுபதிப்பு என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியுதில்லை.
3 comments:
// *'கிளாஸ்'மேட்ஸ் என்று தமிங்கிலிஸில் எழுதினால் - டாஸ்மாக் ஞாபகம் வர வாய்ப்பு இருப்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க வேண்டியதாகிவிட்டது!//
சும்மா இருந்தவனுக்கு ஞாபகப்படுத்தி விட்டுடிங்களே!
நல்லா சுற்றினேன்.
வருகைக்கு நன்றி வால்பையன் மற்றும் நட்புடன் ஜமால்.
Post a Comment