கடந்த ஆண்டில்தான் ஹிந்திப் படங்களும் பாடல்களும் பார்க்க, கேட்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் பாடல்கள் பலதடவைகள் கேட்கும்படியாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கீழே கொடுத்துள்ள இரண்டு பாடல்களும். இவற்றின் வீடியோ காட்சி பார்த்ததில்லை. ஆனால் பலதடவை பாடல்களைக் கேட்டுள்ளேன்.
1) சிங் இஸ் கிங் படத்தில் 'தேரி ஒரீ' என்ற பாடல்
பாடியவர்கள்: Shreya Ghoshal, Rahat Fateh Ali
இசை: Pritam
2) ராஸ் - த மிஸ்ட்ரி கன்டின்யூஸ் படத்தில் 'சோனியோ' என்ற பாடல்
பாடியவர்கள்: Shreya Ghoshal, Sonu Nigam.
இசை: Raju Singh
ராஸ் - த மிஸ்ட்ரி கன்டின்யூஸ் படத்துக்கு நான்கு இல்ல ஐந்து பேர் இசையமைத்திருக்கிறார்கள். வேறு வேறு பாட்டுக்கு வேறு வேறு நபர்கள்.
அப்புறம், இந்த 'ஸ்ரேயா கோஷல்' பொண்ணு இருக்கே, எப்படி பாட்டு படிக்குது பாருங்க! அழகா வேற இருக்கு :). தெரிஞ்சவங்க யாராவது இருந்தா ஊர்சுற்றியைப் பற்றி நல்லவிதமாக எடுத்துச் சொல்லி பரிந்துரைக்கலாம். :)
போனஸ் பாட்டு:
ஸ்ரேயா கோஷலுக்கு 2007 ம் ஆண்டுக்கான இந்திய அரசின் 'சிறந்த பாடகிக்கான' விருதைப் பெற்றுத் தந்த 'ஜப் வி மெட்' படத்தின் பாடல்.
2008-ம் ஆண்டுக்கான விருது இவ்விடுகையின் முதல் பாடலுக்காகவும் 2009-ம் ஆண்டுக்கான விருது இரண்டாம் பாடலுக்காகவும் ஸ்ரேயா கோஷலுக்குக் கொடுக்கப்பட்டால் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை!
பொறுப்பி(டிஸ்கி):
கபில் சிபில் தபில் எனது தூரத்து சொந்தமும் அல்ல!
இது மறைமுக ஹிந்தி திணிப்பு அல்ல!
குறிப்பு:
எம்பெட் ப்ளேயரில் உள்ள பாட்டு படிப்பதற்கு '>' (Play Next Song) என்ற பட்டனை அழுத்தவும் (Play பட்டனை ஒட்டினாற்போல வலதுபக்கம்).
7 comments:
வீட்டுக்கு போய் அப்பாலிக்கா கேட்கிறேன் தலைவரே. நன்றி
படத்தில் இருக்கும் பெண் தான் பாடகியா!?
//வால்பையன் said...
படத்தில் இருக்கும் பெண் தான் பாடகியா!?///
டூ வாலு!
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
இப்படியே பாடிக்கிட்டே போகலாம்
ஸ்ரேயா கோஷல் நற்பணி மன்றம்
தோஹா
நன்றி ஷஃபிக்ஸ்,
வால்பையன்,
இதே பொண்ணுதான்னு நினைக்கிறேன்.
எனக்கும் இதே சந்தேகம் இருக்கு. ஹிஹிஹி... ஆனா இதே பொண்ணுதான்
ஆயில்யன் வாழ்க!
உம் குலம் வாழ்க!
உம் தாத்தா பாட்டிகளெல்லாம் வாழ்க! உம் சந்ததியர் வாழ்க!
வாழ்க வாழ்க!
வாழ்க! :))))
என்னையும் நம்பி பின்தொடரும் அன்பர்களுக்கு நன்றி நன்றி. :)
பின்னூட்டம் போடமல் வந்து சென்றவர்களுக்கும் நன்றி.
ஏனுங்க அவங்க கந்தசாமில நடிச்சவங்க இல்லீங்களா?
யோ வாய்ஸ்(யோகா),
ஹிஹிஹி...
கந்தசாமி ஸ்ரேயா குரலை கேட்டதே இல்லீங்களே!
இதுல பாடுறது வேறயா!
அப்புறம்,
நான் அழகான பொண்ணுன்னு சொல்லியிருக்கிறதை நீங்க வாசிக்கலீங்களா?!
Post a Comment