Monday, September 7, 2009

திருமாவளவன் - பெயருக்குப் பின் ஒளிந்திருக்கும் எண்கள்!

மேற்கு வேளச்சேரியில் கண்ணில் பட்ட படங்கள் கீழே.



ஒருவேளை, ஏதாவது கைபேசி எண்ணாக இருக்குமோ? இல்லை ஏதேனும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியாக... அல்லது அவரது பிறந்தநாள்... சட்டென்று பார்த்தவுடன் இப்படித்தான் எண்ணத்தோன்றியது.

'சுழி'யில் (பூஜ்ஜியம்) இருந்து ஒன்பது வரையுள்ள எண்களை வைத்து எழுத்துக்களை எழுதி இந்த சுவரோவியத்தை வரைந்துள்ளார்கள். பார்க்க புதுமையாக இருந்ததால் 'க்ளிக்'கிவிட்டேன்.

இடம்: மேற்கு வேளச்சேரி

'க்ரியேட்டிவிட்டி'க்கு தமிழ்ப்பதம் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

15 comments:

அ. நம்பி said...

கிரியேட்டிவிட்டி: படைப்பாற்றல், படைப்புத்திறன் என்று சொல்லலாம்.

ஏன் எழுதினார்கள் என்று விளங்கவில்லை; ஆனால் அவர்கள் திறமை மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை.

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்ல கற்பனை!

blogpaandi said...

:)

வால்பையன் said...

எதோ சும்மா தோணுணதை எழுதியிருப்பாங்க!
உள்குத்து எதுவும் இருக்க வாய்ப்பில்லை!

Unknown said...

ஒரு வேல இது அவுரு கட்சி மாறுன கணக்கோ....?

SUFFIX said...

நல்லாவே யோசிக்கிறாங்கய்யா!!

Dominic RajaSeelan said...

அன்பர்களே இது தமிழ் எங்களுக்கு இணையான எண்கள். உதாரணமாக
5=௫

கிரி said...

சூப்பரா இருக்கு

ஊர்சுற்றி said...

நன்றி
அ.நம்பி,
யோ வாய்ஸ்,
blogpanndi,
வால்பையா,
லவ்டேல் மேடி,
ஷஃபிக்ஸ்,
Dominic Raja Seelan,
கிரி.

ஊர்சுற்றி said...

நம்பி,

வார்த்தை தகவல்களுக்கு நன்றி.

பழமைபேசி said...

//க்ரியேட்டிவிட்டி'க்கு தமிழ்ப்பதம் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

ஆக்கத்திறன் என்பதே சரியாக இருக்கும்.

படைப்பாற்றல், படைப்புத்திறன் என்றும் சொல்லலாம்.

ஆனால் இது அந்த வகையில் வராது; Innovation என்கிற வகையிலே வரும். புதுமையாக ஒன்றைச் செய்தல்... நவநீதம்...

பீர் | Peer said...

:)

Anonymous said...

திருமாவளவன், திருமா வாகி பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த தொண்டருக்கு தெரியாது போல.

குறைந்த பட்சம் அவர் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் என்பதையாவது தெரிந்து வைத்திருக்கட்டும்.

vasu balaji said...

புதுமையா இருக்கு

ஊர்சுற்றி said...

மிக மிக நன்றி பழமைபேசி.
உங்களின் பின்னூட்டத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன்! :)

நன்றி பீர்.

நன்றி அனானி. எழுதினவரைப் பார்த்தா சொல்றேனுங்கோ!

நன்றி வானம்பாடிகள்.