எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 1999 செப்டம்பர் மாதம் 9-ம் நாள் (கொசுவத்தி சுருள்லாம் நீங்களே கற்பனை பண்ணிக்குங்க!) - பள்ளியில் வழக்கம்போல முதல் வகுப்பு தொடங்கியது. ஒலிபெருக்கியில் தலைமையாசிரியரின் குரல் ''மாணவர்களே, இன்றைய நாளுக்கு ஒரு சிறப்பு உண்டு - கவனித்தீர்களா! இன்று தேதி ஒன்பது, மாதம் ஒன்பது, வருடமும் ஒன்பது. இதுபோன்ற ஒரு தருணம் வருவது எவ்வளவு அரிது - எனவே ஒருநிமிடம் அமைதியாய் இருந்து, வருகின்ற பொதுத் தேர்வில்..."
அதற்குப் பிறகு என்ன சொன்னார் என்று ஞாபகம் இல்லை. அந்த நாளில் ஏதேனும் சிறப்பு இருந்தது என்றால், அந்த நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதற்குப் பிறகு நானும் ஒவ்வொரு வருடமும் கவனிக்கிறேன், இதே உருவத்தில் பலவிதமான போர்வையைப் போர்த்திக்கொண்டு பல தகவல்கள்.
- இன்று 09/09/09. நூறு வருடத்தில் ஒருமுறைதான் இதுபோல் வரும்.
- இன்று 12 மணி 34 நிமிடம் 56 நொடி 7-ம் தேதி 8-ம் மாதம் 9-ம் வருடம்.... இது நூறு வருடத்தில் ஒருமுறைதான் வரும்.
- இன்று 08/08/08 8 மணி க்கு 8 நிமிடம் உங்கள் வீட்டு மின்விளக்குகளை அணைத்து 'பூமி வெப்பமடைதல் விழிப்புணர்வு பிரச்சார'த்தில் பங்குபெறுங்கள். இதை அப்படியே 09/09/09 என்று மாற்றிப்போட்டு இந்த வருடம் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்(இதுபோன்ற விசயங்களையாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம்).
அது என்ன, நொடிக் கணக்கு வரைக்கும் போட்டு 'இது ஒருமுறைதான் வரும்' என்று சொல்வதற்கு உங்களுக்கு யாராவது சிறப்பு வகுப்புகள் எடுத்தார்களா? மற்ற நொடிகளையும் நாட்களையும் நீங்கள் நான்கைந்து முறை அனுபவிக்கிறீர்களா என்ன?
''ஒடும் ஆற்றில், ஒருமுறை தொட்டுவிட்ட தண்ணீர்த் துளியை மறுமுறை தொடமுடியாது'' என்று சொல்லுவார்கள். அதேபோல வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் எல்லா வினாடிகளுமே ஒருமுறை சென்றுவிட்டால் மறுமுறை கிடைப்பதில்லை.
உண்மை:
அடுத்த வருடமும் 10/10/10 என்று மின்னஞ்சலும் குறுஞ்செய்திகளும் வந்து தொலைக்கத்தான் போகின்றன!
டிஸ்கி:
1999-ல் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தகவலை வைத்து எனது வயதைக் கணித்தவர்களுக்கு - சரியாகக் கணித்திருந்தால், 'வலையுலக ராமானுஜம்' என்று பட்டம்(!) இல்லீங்க 'விருது' கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.
ஒரே ஒரு நிபந்தனை! அதை ஒரு தொடர் விருதாக மாற்றாமல் இருக்க வேண்டும். :)
8 comments:
உஸ்....ஸப்பப்பப்பா........ முடியல....!!
9th படிக்க.. (ஃபெயில் ஆகாம இருந்திருந்தீங்கன்னா... :) ) 14 வயது இருக்கனும்.
1999-ல் 14 வயதுன்னா... 2009-ல் 24 வயது.
சரியா...??!! :) :) :)
yes u r right.
just kidding every year
//அடுத்த வருடமும் 10/10/10 என்று மின்னஞ்சலும் குறுஞ்செய்திகளும் வந்து தொலைக்கத்தான் போகின்றன!//
ஒரே குஷ்டமப்பா!
நன்றி லவ்டேல் மேடி,
ஹாலிவுட் பாலா,
யாசவி,
கிரி.
@ஹாலிவுட் பாலா,
அது எப்படிங்க,
1999ல நான் பத்தாம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன்னு யூகம் பண்ணுறீங்க!
@ஹாலிவுட் பாலா,
முந்தைய பின்னூட்டத்தை இப்படி மாத்திக்குங்க. இப்பதான் உங்க கமென்டை இன்னொரு தடவை படித்தேன்.
//அது எப்படிங்க,
1999ல நான் ஒன்பதாம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன்னு யூகம் பண்ணுறீங்க!
//
ஹி.. ஹி... 09/09/09- ஸ்பெஷலா... நீங்களும் ஒன்பதாம் வகுப்புன்னு...!!! :) :)
Post a Comment