Monday, February 19, 2007

மருங்கூருக்கு நன்றி.....

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கும் இந்த மருங்கூர்தான் இணையத்தமிழ் உலகில் பலருக்கும் அறிமுகமான மா.சிவகுமார் அவர்களின் சொந்த ஊர்.

என்னுடன் பணிபுரியும் நண்பர் பகவதியின் சொந்த ஊராகிய இதே மருங்கூரைப் பற்றி இணையத்தில் தேடும் போது கிடைத்த வலைப்பதிவுதான் மா.சிவகுமார் அவர்களுடையது. இதுதான் நான் தமிழில் வாசித்த முதல் வலைப்பதிவு. எனக்கு வாசிக்கக் கிடைத்த முதல் வலைப்பதிவே, "தமிழில் எப்படி எழுதுவது?" என்ற கேள்விக்கு விடையை இணைப்பாகக் கொடுத்ததில் இருந்து பொருளாதாரம், அரசியல், சமூகம் என்று பல தலைப்புகளில், சிறந்த படைப்புகளை அளித்தது வரை என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

என்னுடைய இந்த பயணத்தை தொடங்க காரணமாக இருந்த நண்பர் பகவதிக்கும், மா.சிவகுமார் அவர்களுக்கும், மருங்கூருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் சக பயணிகளாக பயணித்துக் கொன்டிருக்கும் மற்ற வலைப்பதிவாளர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

4 comments:

மா சிவகுமார் said...

வாங்க ஜான்சன்,

தமிழ் வலைப்பூவுலகில் உங்கள் பங்களிப்புகள் ஆல் போல தழைத்து வளர வாழ்த்துக்கள். முதல் இடுகையாக என்னைப் பற்றி எழுதிச் சிறப்பித்ததற்கு மிக்க நன்றி. உங்கள் ஊரைப் பற்றியும், படித்த கல்லூரி பற்றியும், வளர்ந்த சூழல்கள் பற்றியும், வேலை பார்க்கும் அனுபவங்களையும் தொடர்ந்து எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும்,

அன்புடனும்,

மா சிவகுமார்

துளசி கோபால் said...

வாங்க ஜான்சன்.

வந்து இந்த 'ஜோதி'யில் கலந்துருங்க.

வரவேற்பும் வாழ்த்து(க்)களும்.

வடுவூர் குமார் said...

வருக வருக ஜான்சன்.

ஜெ.ஜோன்சன் said...

பின்னூட்டங்கள் கொடுத்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
அப்புறம் சிவகுமார் சார், நீங்கள் கோரியது போல் என்னை, என்னை வளர்த்த எனது ஊரைப் பற்றி எழுத மிகவும் ஆசைதான். நிச்சயம் எழுதுவேன்.